சனி, டிசம்பர் 12, 2020

ஏதாவது எழுது

 தாவது எழுது

ஏமாறியதை எழுதவா ?
ஏற்றத்தை எழுதுவதா?
ஏக்கத்தை எழுதுவதா ?
தாக்கத்தை எழுதுவதா ?
தர்மத்தை எழுதுவதா ?
அதர்மத்தை எழுதுவதா?
ஏட்டுப்படிப்பு வேறு .
ஏளனம வேறு .
ஏழ்மை வேறு .
படிப்புக்கும் பண்புக்கும்
பணத்திற்கும் ஏணி
ஊழல். பொய்கணக்கு எழுதித்தரும்
ஆடிட்டர் ,
ஊழல் என்று தெரிந்தே
அவர்களுக்கு வழக்காடும்
வழக்கறிஞர்,
கருப்புப்பணத்தையும்
அறிவியல் ரீதியால்
வையகம் அறிந்த ஊழலை
இல்லை என்று நெஞ்சு நிமிர்த்தி
கொடுத்த வாக்குறுதி
நினைவேற்றாமால்
அதே வாக்குறுதியை
புதியதுபோல் கூறி
வாக்கு பெறும் நா வன்மை
ஏதாவது எழுதி
வம்பில் மாட்டாதே என்று
ஜனநாயக பயம் காட்டும் நட்புகள்-உறவுகள் .
ஆஹா!கூலிப்படைகள்
ஈவு இரக்கமற்ற படுகொலைகள்
ஏதாவது ஏடாகூடாமாக எழுதி
வஞ்சனை செய்வாரடி கிளியே ,
வாய்ச்சொல்லில் வீரரடி..

கருத்துகள் இல்லை: