மணல் திருட்டு ,
விவசாய நிலம் வீட்டுமனை
ஏரிகள் நிரப்பி அடுக்கம்
பொறியியல் கல்லூரி
கோயில் நில ஆக்கிரமிப்பு
என்று மாநிலத்தில் நடக்க
தில்லி சென்று போராட்டமாம்
ஆழ்ந்து சிந்தித்தால் மாநில திராவிட கட்சிகள்
அடிக்கும் கொள்ளை புரியவரும்.
புயல் பாதிப்பு
மக்கள் வேதனை .
ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த சுய னல அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க
மக்களுக்கு இளைஞர்களுக்கு
ஞானம் கொடு.
உன்னையே சிதறவைக்கும் மூட பக்திக்கு
முடிவுகட்டு .
பாலும் தெளிதேனும் பாகும் ,பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோடிக்கணக்கில் சிலை செய்து
உன்னை அவமானப்படுத்தி
ஆலயநிலங்கள் சிலைகள்
கொள்ளை அடிக்கும் கூட்டத்தை
அழிக்க வா ! விநாயகப் பெருமானே!
பூஜைக்கு முதல்வோனே!
அறிவு கொடு! மணல் கொள்ளை
நாட்டை மலடாக்குவோரும்
மண்ணுக்குள்ளே என்ற ஞானம் கொடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக