அவனியின் ஆனந்தம் ,
ஆண்டவனருளினாலே.
அவனின் திருவிளையாடல்
அவன் மீதே ஐயம் உண்டாகும்.
நல்லோர் என்போர் உலக நலம் நாடுவோர்.
ஆசையின்றி அவனருளே
போதும் என வேண்டுவோர்.
சுயநலமிகள் ஆட்சி அதிகாரம் என
ஆடம்பர வாழ்க்கையில் ஆனந்தமடைவோர்.
பற்றற்ற துறவிகள் வையக நலனுக்காக
தனக்கென சேர்க்கா அன்றாடங்காய்ச்சிகள் .
அவர்கள் மரம் போன்றவர்கள்.
அவர்கள் நதி போன்றவர்கள்.
அவர்கள் நிலவு போன்றவர்கள்.
அவர்கள் பரிதி போன்றவர்கள்.
மற்றவர்களை அவர்கள் பிரித்துப்
பார்ப்பதில்லை.
மதம் பார்ப்பத்தில்லை.
இனம் பார்ப்பதில்லை.
ஜாதிகள் பார்ப்பத்தில்லை.
சமரச சன்மார்க்கம் காட்டுபவர்கள்.
நல்வழி காட்டும் உத்தமர்கள்.
அவர்களைப்போல் நானும் என்று
அயோக்கியனும் கூறுவதில்
பெருமை கொள்வான்.
அடியார்கள் தொண்டரடிப்பொடியாழ்வார்கள்.
புலனடக்கம் கற்பிப்பார்கள் .
இந்த திரைப்பட பண முதலைகள் போல்
மயக்கும் பாடல், மங்கை உடல் காட்சிகள்
காட்டாதவர்கள்.
இறைவனின் அறக் கொள்கைகள் வகுத்து
தொகுத்து மக்களுக்கு பிரம்மானந்தம் அளிக்கும்
மார்க்க தரிசிகள்.
போற்றுவோம். அவர்நூல்கள் படிப்போம்.
நல்லவர்களால் அகிலம் சிறக்கும் .
அகிலம் செழிக்கும் .
ஐம்புலனடக்கம் ஆண்டவன் பற்று
சாந்தியும் ஆனந்தமும் மனநிறைவும் அளிக்கும்.
கோடிகள் சேர்த்து கேடிகள் என்ற பெயர் வேண்டாம்.
அரச பதவி துறந்து அன்புவழி அறவழி காட்டிய
ஆசிய ஜோதி அகிலப் புகழ் பெற்றார்.
மகாவீரர் முற்றிலும் துறந்து அறநெறி புகட்டினார்.
ரிஷிகளும் முனிகளும் காட்டுக் குடிலில்
வாழ்ந்து வையகம் உய்ய பெரும் வழி காட்டி
பாரதநாட்டை பார்புகழும் நாடாக்கினர்.
அய்யகோ! இன்று அராஜக ஊழல் ,
நீதிமன்ற அவ நம்பிக்கை
நியாயமற்ற செயல்கள்
அவனியில் அவமானச் சின்னமாகும் நிலை மாற
இளைஞர்களே ! விழித்தெழுங்கள்.
விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.
வாழ்க பாரதம்.
ஆண்டவனருளினாலே.
அவனின் திருவிளையாடல்
அவன் மீதே ஐயம் உண்டாகும்.
நல்லோர் என்போர் உலக நலம் நாடுவோர்.
ஆசையின்றி அவனருளே
போதும் என வேண்டுவோர்.
சுயநலமிகள் ஆட்சி அதிகாரம் என
ஆடம்பர வாழ்க்கையில் ஆனந்தமடைவோர்.
பற்றற்ற துறவிகள் வையக நலனுக்காக
தனக்கென சேர்க்கா அன்றாடங்காய்ச்சிகள் .
அவர்கள் மரம் போன்றவர்கள்.
அவர்கள் நதி போன்றவர்கள்.
அவர்கள் நிலவு போன்றவர்கள்.
அவர்கள் பரிதி போன்றவர்கள்.
மற்றவர்களை அவர்கள் பிரித்துப்
பார்ப்பதில்லை.
மதம் பார்ப்பத்தில்லை.
இனம் பார்ப்பதில்லை.
ஜாதிகள் பார்ப்பத்தில்லை.
சமரச சன்மார்க்கம் காட்டுபவர்கள்.
நல்வழி காட்டும் உத்தமர்கள்.
அவர்களைப்போல் நானும் என்று
அயோக்கியனும் கூறுவதில்
பெருமை கொள்வான்.
அடியார்கள் தொண்டரடிப்பொடியாழ்வார்கள்.
புலனடக்கம் கற்பிப்பார்கள் .
இந்த திரைப்பட பண முதலைகள் போல்
மயக்கும் பாடல், மங்கை உடல் காட்சிகள்
காட்டாதவர்கள்.
இறைவனின் அறக் கொள்கைகள் வகுத்து
தொகுத்து மக்களுக்கு பிரம்மானந்தம் அளிக்கும்
மார்க்க தரிசிகள்.
போற்றுவோம். அவர்நூல்கள் படிப்போம்.
நல்லவர்களால் அகிலம் சிறக்கும் .
அகிலம் செழிக்கும் .
ஐம்புலனடக்கம் ஆண்டவன் பற்று
சாந்தியும் ஆனந்தமும் மனநிறைவும் அளிக்கும்.
கோடிகள் சேர்த்து கேடிகள் என்ற பெயர் வேண்டாம்.
அரச பதவி துறந்து அன்புவழி அறவழி காட்டிய
ஆசிய ஜோதி அகிலப் புகழ் பெற்றார்.
மகாவீரர் முற்றிலும் துறந்து அறநெறி புகட்டினார்.
ரிஷிகளும் முனிகளும் காட்டுக் குடிலில்
வாழ்ந்து வையகம் உய்ய பெரும் வழி காட்டி
பாரதநாட்டை பார்புகழும் நாடாக்கினர்.
அய்யகோ! இன்று அராஜக ஊழல் ,
நீதிமன்ற அவ நம்பிக்கை
நியாயமற்ற செயல்கள்
அவனியில் அவமானச் சின்னமாகும் நிலை மாற
இளைஞர்களே ! விழித்தெழுங்கள்.
விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.
வாழ்க பாரதம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக