வியாழன், ஜனவரி 26, 2017

குடியரசு நாளில்
 நாம் நாட்டின் குறிப்பாக தமிழகத்தின்
வரலாறு பற்றி சிந்தித்தால்
தீர்க்கதரிசி பாரதியின் பாட்டு
நமக்கு நினைவிற்கு வரும்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவருக்கும் தாழ்வே".
  சேர சோழ பாண்டிய நாடு.
மண்ணிற்கு ஒரு குணம்.

வெட்சி நிறைகவர்தல் ;
மீட்டல் கரந்தையாம்.
வட்கார் மேல் செல்வது வஞ்சி;
எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை--அதிரப்
பொருவது தும்பையாம்;
போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.
இப்படி நில அமைப்பு.
  கல்வி பண்பாடு உள்நாட்டு
வெளிநாட்டுத் தொடர்பு
என்ற சிந்தனையில் பார்த்தால்
பாரதம் என்ற தேசிய சிந்தனை
விடுத்து  குறுகிய  தமிழன் என்ற சிந்தனை நாட்டை வளர்க்குமா?
 பல்லவர்களாட்சி
தெலுங்கர்கள் ஆட்சி
சரபோஜி மராட்டிய ஆட்சி
இவர்களது ஆட்சியில்
தமிழ் நாடு வளம் பெற்றதா
இல்லையா?
தமிழ்   மொழி வளர்ந்ததா இல்லையா?
மதுரையில் மக்கள் தொகையில்
சௌராஷ்ட்ர மொழி பேசுவோரின் வாக்குகள் தான்
அந்த நகர மக்கள் பிரதிநிதியை நிர்ணயிக்கும்.
இங்குள்ள  தமிழ் தாய்மொழி இல்லாதவர்கள் தமிழை மிகவும் வளர்த்துள்ளனர்.
நாயக்கர்கள் ஆட்சியில்
தெலுங்கு கற்பிக்கப்படவில்லை.
மராட்டிய மன்னர் ஆட்சியில்
மராட்டி கற்பிக்கப்படவில்லை.
 இங்கு சிந்திக்க வேண்டியது
கல்வி வியாபாரத்திற்காக
தமிழ் வழிக்கல்வி    மூடப்பட்டு
ஆங்கிலப்பள்ளிகள் அதிகம்
திறக்கப்பட்டு தமிழ்  வழி வேலைவாய்ப்பில்லை
என்ற நிலை திராவிடக்கட்சிகள்
ஆட்சி வந்தபின்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று இந்திப் போராட்டத்தில்
பல இளைஞர்களை பலியிட்டு
ஆட்சி பிடித்தபின்
அவர்கள் திறப்பது ஆங்கிலப்பள்ளிகள்.
 தமிழ்  தமிழ் என்று வாக்கு வாங்க.
சிந்தியுங்கள்.
தேசீயம் பாரதம்
இந்திய தேசம்
என்பதே நம்மை வளர்க்கும்.

கருத்துகள் இல்லை: