செவ்வாய், ஜூன் 21, 2016

கல் ,கள்


News Feed

இளமையில் கல். தமிழ் அறிவுரை.
இளம் தலைமுறை சொல்வது --இளமையில் காதல்.
இளமையில் கள். இன்றைய தலைமுறையினர்
தமிழ் கற்பதில்லை. அதனால் அறமும்.மறமும் இல்லை.
அவர்கள் கற்கும் ஆங்கிலம் மூன்று வயதில்
அறம் செய விரும்பல்ல.
இருப்பத்தைதாயிரம் பள்ளி கட்டணம்.
அம்மா , அப்பா,குரு தெய்வம் அல்ல
பணம் ,பணம் பணம். வேலைவேலைவேலை
இது நல்லவேளை வடிவேலை மறக்கச் செய்யும். வேலை.
தாய்மொழி அறிவு ஈயார் --அவர் தேட்டல் தீமையில் முடியும்.
கல்--கள் சற்று உச்சரிப்பு மாற்றம்.
கல்---சிகரத்தில் புகழ் சேர்க்கும்.
கள்-- தரையில் படுக்க வைக்கும்.
மது --மாது --இரண்டுமே மதி மயக்கம்.
மதி---அறிவு, நிலவு-----மதிகெட்டு போனதிசை எல்லோருக்கும் பொல்லானாய் ஆக்குவது
மது அந்த" ம" உடன் கால் சேர்க்கும் மாது.
தமிழ் சொற்கள் அழகு. அதன்அமைப்பு
சிந்திக்கசிந்திக்க ஒழுக்கம் பெருகும்.
உயரவும் ,தாழ்த்தவும் செய்யும்.
கல்---பாராங்கல் போன்று கல்வி மனதை உறுதியாக்கும்.
கள்--விழுங்கள் ,எழுங்கள், எழுங்கள்-விழுங்கள் உறுதியற்ற தடுமாற்றம்.
சிந்திப்பர்.
அறிவியல் தமிழ் தமிழ் வழி படிப்பு
தமிழில் படித்தோருக்கே வேலை வாய்ப்பு.
ஆங்கிலம் வளர வளர தமிழ் ஒழியும்.
சிந்தியுங்கள்.

கருத்துகள் இல்லை: