௨௦௧௪ பாராளுமன்ற தேர்தல்.
பார் புகழ் பாரதம்,
இன்று ஊழல்,லஞ்சம் ,பலாத்காரம் என்று
பார் இகழ் பாரதமாக
பாரினில் களங்கப் பெயருடன்
பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
பயப்படும் படி எச்சரிக்கைகள்
கொடுக்கும் பத்திரிகைச் செய்திகள்.
குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டாலும் ,
நாட்டை இரத்தக் கிளறி ஆக்கும் குண்டுவெடிப்புக்குத்
துணை போனாலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்
ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் ,மின்னும் விண்மீன்கள் ,
குடித்து காரோட்டி பலரைக் கொன்றாலும்
வழக்கு நடந்துகொண்டே இருக்கும் அவல நிலை.
அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் .
இவைகளைக் கருத்தில் கொண்டு ,
இந்தியாவின் இன்னல்களைத் தீர்க்கும்
அச்சம் போக்கும் அனைவருக்கும்
ஆனந்த மளிக்கும் நேர்மைக்கும்
உரிமைக்கும் நீதிக்கும் உண்மைக்கும்
ஊக்கமளிக்கும் அரசாங்கம் அமைய
இந்திய இளைஞர்கள்
இந்த பாராளுமன்ற தேர்தலில்
வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை
வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக