பன்மொழி வித்தகன்
பாரதியார் மஹாகவி ;
பாட்டுத்திரத்தாலே
பாரை உயர்த்தியவன்!
விடுதலைக்கு முன்னே
விடுதலை அடைந்த
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என்று
ஆனந்தக் கூத்தாடியவன்.
யாமறிந்த மொழிகளிலே
தமிழே இனிமை என்றவன்.
சிந்து நதியின் இசை பாடி
தேச ஒற்றுமைக்கு வலிசொன்னவன்.அவனே
பூனைகளைப்படி பாரத ஒற்றுமைக்கு
வேற்றுமையில் ஒற்றுமைகாட்டி
ஒரு தாய் மக்கள் நாம் என்றவன்.
பல நிறங்களில் இருக்கும் பூனைக்குட்டிகள்
தாய் ஒன்றே என்று எளிய முறையில்
தேச ஒற்றுமையை பறைசாட்டியவன்.
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என்றவன்
ஞானத்திலே பரமோனத்திலே சிறந்தநாடு என்றவன்
ஜாதிகளை ஒழிக்க பாப்பா பாட்டு பாடியவன்.
ஜாதிகள் இல்லை யடி பாப்பா என்றவன்
படிப்பிற்கும் விளையாட்டிற்கும்
பாப்பாக்களுக்கு பாடியவன்.
மகாகவி பிறந்தநாள்.
அவன் சொன்னான் பாரத நாடு ,பழம் பெரும் நாடு -நீர்
அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் என்றே.
இன்று அவன் நினைக்கும் நாள்.முரசு கொட்டிய
முண்டாசுக்கவி,
முறுக்குமீசை யுள்ள
மிடுக்கான கவி
தமிழ் இலக்கியத் தங்கம்
தாரணி புகழ் பாரதி.
அவனுக்கே வீரவணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக