செவ்வாய், செப்டம்பர் 17, 2013

ஆஷ்ரமங்களும்  ஹிந்து மதமும்.

   தெய்வீகமும்  தெய்வீக சக்தியும் ஜோதிடமும் அருள்வாக்கும் நம்ப முடியாமல் இருக்க முடியாது.பலருக்கு  இதில் நம்பிக்கை வர காரணமே இவைகளை உணர்வதுதான். இந்த நம்பிக்கை ,பக்தி உணர்வை பயன்படுத்தி
 மக்களை ஏமாற்ற பல போலிகள் உலா வருவதுதான்  இந்து மதம் களங்கப்படுவது காரணமாகிறது.

இதைவிட ராம் ஜெட் மலானி போன்றோர் இந்துமதத்தை களங்கப்படுத்தும் ஆசாராம் போன்ற போலிகளை காப்பாற்ற பெண்களுக்கு ஆண்களிடம் செல்லும் நோய் உண்டு. அதில் பாதிக்கப்பட்ட பெண் தான் ஆசாரம் மேல் புகார் அளித்துள்ளார் என்பதும்,பெண்கள் இரவில் சென்றால் இப்படித்தான் நடக்கும்.
என் மகளாக இருந்தால் நானே தண்டனை கொடுப்பேன் என்று வக்கீல்
வாதாடுவதும்,ஆண்களின் பலாத்காரத்திற்கு பெண்களின் ஆடைகளும் காரணம் என்றெல்லாம் வாதாடுவது  பெண்கள் பாதுகாப்பிற்கு எதிராகத்தான் உள்ளது.
இன்னும் மேலைநாடுகள் போல் பெண்கள் நடமாடினால் இந்தியாவில் என்ன நடக்கும்.?
பல வெளிநாட்டுப்  பெண்கள்  இந்தியாவைப் பற்றி இந்த விஷயத்தில் மிகவும் தாழ்ந்தது என்றே விமர்சிக்கின்றனர்.

பிரமச்சரியம் ,புலனடக்கம்,பெண்களை தெய்வ வடிவமாகிய பாரதத்தில்
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறு  ஒரு சம்பிரதாயங்களை நம் முன்னோர்கள் உருவாக்கியே இப்படி என்றால்...அஹல்யாக்கள் இந்திரர்கள் எண்ணிக்கை அதிகம். அதிலும் இந்திர பதவிக்காக வாமன அவதாரமும் மேல் நோக்கில் ஜெத்மலானி போன்றோர்களுக்கு புராணச் சான்றுடன் வாதாட கை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை: