ஒரு நாள் அலுவலகம் சென்ற ஊழியர்களுக்கு ஆச்சரியமும் ,துக்கமும்
அளிக்கக் கூடிய அறிவிப்பு அறிவிப்புப் பலகையில் காணப்பட்டது.
அறிவிப்பு :
இந்த அலுவலகத்தில் பணியாற்றிய உங்கள்
முன்னேற்றத்திற்குத் தடையாய் இருந்த ஊழியர் இறந்துவிட்டார்.
அவரது சடலம் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வருத்தத்துடனும் அதே சமயம்
தன் முன்னேற்றத்திற்குத் தடையாய்
இருந்தவனையும் இறுதியாக பார்க்க ஆவலாய் இருந்தனர். ஆனால்
அஞ்சலி செலுத்த ஒவ்வொருவராய் அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே சென்று வெளியில் வரும்போது மிக வருத்தத்துடன் வந்தனர்.
ஒருவர் மட்டும் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
அவர் எப்பொழுதும் தன்னுடைய அலுவலக நிர்வாகம் ,அதன் நடவடிக்கைகள் ,ஊதியம் போன்றவற்றைக் குறை கூறிக்கொண்டே இருப்பார்.
அவர் அலுவலகத்தில் பணிமூப்பு அடைந்தவர்.
அவருக்கு இறந்தவரால் நன்மை கிடைக்கும் ,
பதவி உயர்வு கிடைக்கும் என்று மகிழ்ச்சிவேறு.
அவர் சவப்பட்டி அறைக்குச் சென்றதும் மேலும் கோபம் அதிகரித்தது.
சவப்பெட்டியில் ஒரு கண்ணடிதான் இருந்தது.
அதில் அவருடைய முகம் தான் தெரிந்தது.
அவர் கோபத்தால் சத்தம் போட நினைத்த நேரத்தில்
அங்கு ஒரு அறிவுப்புப் பலகை :
இந்த உலகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பது
நீங்கள் தான்.வளர்ச்சிக்கும் நீங்கள் தான் தடை.
உலகத்தில் பெரும் புரட்சி உங்களால் தான் ஏற்படுத்த முடியும்.
நீங்கள் தனி மனிதர்.
உங்கள் வளர்ச்சி உங்கள் முதலாளி மாறுவதாலோ ,உங்கள் நண்பர்கள் மாறுவதாலோ,அலுவலகம் மாறுவதாலோ ஏற்படாது.
நீங்கள் மாறவேண்டும் ,உங்களுக்கு உங்கள் மேல் இருக்கும் வரைமுறை நம்பிக்கை எல்லை மாறவேண்டும்.
உங்கள் வளர்ச்சிக்குத் தடை நீங்கள் தான் என்பதை உணரவேண்டும்.
எல்லாவற்றையும் விட சிறந்த உறவு உங்களுக்கு நீங்கள் தான்.
உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ளுங்கள்.
துன்பங்களையும் ,கடின தன்மையையும் விட்டுவிடுங்கள்.
தங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியாளர் ஆகுங்கள்.
நீங்கள் செய்ய விரும்பும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வெற்றி அடையுங்கள்.
உங்கள் குறிக்கோள் வெற்றி அடையும்.
உலகம் ஒரு கண்ணாடி போன்றது;அது மனிதனுக்கு தன சக்தி உள்ள எண்ணங்களின் பிரதி பிம்பங்களை வெளிப்படுத்துகிறது.
தாங்கள் தங்கள் சக்தியால் ,தங்கள் எண்ணங்களால் உலகை மாற்றமுடியும்.
இந்த உலகில் வாழ்ந்தும் நீங்கள் ஒரு சடலமாகத்தான் நடமாடுகிறீர்கள்
என்பதைத்தான் இந்த கண்ணாடி காட்டுகிறது.
இப்பொழுதே உங்கள் பழைய எண்ணங்களை புதைத்து விடுங்கள்.
புதிய மனிதனாக மாறுங்கள்.
இதுதான் சவப்பெட்டியில் இருக்கும் கண்ணாடி காட்டுகிறது.
நீங்கள் உங்களை புதியதாக படித்துக்கொள்ளுங்கள்.
மூலம் :-
{அச்சீ கபர். ஹிந்தி வெப் சைட் }
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக