வியாழன், ஏப்ரல் 25, 2013

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே

      இன்றைய  கட்டுரைத் தலைப்பு  "என்னை செதுக்கிய நூல்கள்",.செதுக்குதல் என்ற சொல் ஆழ்ந்த கருத்துடையது.கல்லை சிலையாக செதுக்குவர்கள்.
உருவமற்ற கல்  ஆண்டவனாக உயிர் பெறுகிறது..அதற்கு உளிகொண்டு அடிக்கிறார்கள். ஒரு அழகிய சிலை உருவாகிறது.அது தெய்வச்சிலை ஆனால்
அனைவரும் வழிபடுகிறார்கள்.அவ்வாறே நல்ல நூல்கள் ஒருவனை அழகாக செதுக்கி மரியாதைக்குரிய  மனிதனாக்குகிறது.மனிதனை மனிதனக்குவது கல்வி. அந்தக் கல்விக்கு வேண்டியவை  நல்ல நூல்கள்.ஒவ்வொரு நூலும் கட்டாயம் ஒரு நல்வழி அல்லது நீதி புகட்டுவதாகத்தான் அமையும்.

      நூலகம்  வாசகர் வட்டம் கட்டுரைப்போட்டி -- நூலகர்  கலந்துகொள்ளத் தூண்டியதும்  சரி என்றேன்.என்னைப்போன்றே ஒய்வு பெற்றவர்கள்  ஆறு பேர் கலந்துகொண்டோம். நீண்டனாட்களுக்குப்பின்  பேனா வில்  எட்டுப்பக்கம்  தோன்றியதை எழுதினேன்.

இறுதியில் துளசிதாசர் தோகையின்  தமிழ் கருத்துடன் முடித்தேன்.

அப்பொழுதுதான் நூலின் அருமை தெரிந்தது.நூல்கள் மனிதனை எப்படி செதுக்கு கின்றன என்பதை அறிந்தேன் .
 அறம் செய விரும்பு ... ஒரு சிறிய ஆத்திச்சூடி.ஆனால்எவ்வளவு  பெரிய படிப்பினை. ஊக்கமது கைவிடேல் -எப்படிப்பட்ட தன்னம்பிக்கை தரும் சூடி.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ,அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

எப்படிப்பட்ட குரள்.

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே. எப்படி செதுக்குகிறது.

  

கருத்துகள் இல்லை: