ஆசிரியர்களும் தண்டனைகளும்
தண்டனைகள் என்பது மாணவர்களுக்குத் தேவையா ?இல்லையா?
என்ற வினா எழும் பொழுது மாணவர்கள் தங்கள் தவறுகளை உணரும்
அளவிற்கு தண்டனை கொடுத்தால்
அந்த ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது.
ஆனால் ஆசிரியரின் கோபமும் தண்டனையும் மூர்க்கத்தனமாக இருக்கும்
பொழுது அந்த ஆசிரியரின் மதிப்பு குறைகிறது.
எனது ஆசிரிய பணிக்கால அனுபவத்தில் மாணவர்கள் தவறு செய்வது,
மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது,
வகுப்பில் இரைச்சலிடுவது அனைத்திற்குமே ஆசிரியர்களின்
நடத்தை தான் காரணமாகிறது.
சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வகுப்பில் அமைதி ,ஒழுங்கு
கட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது.
ஆசிரியர்கள் சிலர் தவறான சொற்களை வகுப்பில் பயன்படுத்தும் பொழுது
மிகவும் சிக்கல் ஏற்படுகிறது.
சில மாணவர்களும் வகுப்பறையில் ஆசிரியரை அவமதிப்பதில்
ஆனந்தமடைகின்றனர்
பயிற்சி ஏடுகள் அறிவியல் பாடத்தில் எழுதி
,
அந்த தேர்விற்கு முன் பெறுவது என்பது
அரசு,மாநகராட்சி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மிகவும் கடினம்.
தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் காட்டும் அக்கறை
இப்பள்ளிகளில் காட்டுவதில்லை.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தாமதமாக வருவதில்லை.
அரசு சார்ந்த பள்ளிகளில் மாணவர்கள் தாமதமாகவே வருகின்றனர்.
ஒரு பெற்றோரின் கூற்று எனக்கு வியப்பளித்தது.
என் இரண்டாவது பையனை பள்ளியில் விட்டு விட்டு வந்ததால்
என் மூத்த பையன் தாமதமாகிவிட்டது.
அந்த பள்ளி கேட் மூடப்பட்டுவிடும்.
இங்கே அப்படி இல்லையே.நான் படிக்கும் போதே
தாமத மாகத்தானே வந்தேன்.
தனியார் பள்ளிகளின் சட்ட திட்டங்களுக்கு
ஒழுக்கம் என்று கட்டுப்படும் பெற்றோர்கள்
,
அரசுப்பள்ளி என்றாலே அலட்சியம் தான் காட்டுகின்றனர்.
இந்த நிலை மாறவேண்டும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக