ஆசிரியர்களும் தண்டனைகளும்.
சமீபகாலமாக ஆசிரியர்கள் அளிக்கும் தண்டனைகள் குறித்து சேதிகள்
வந்த வண்ணம் உள்ளன.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்வழிகாட்டிகளாக இருந்த காலம் போய்
,அவர்கள் அரசாங்க ஊதியம் பெரும் தொழிலாளிகளாக மாற்றிய பெருமை
ஆங்கில அரசாங்கத்தையே சாரும்.அதற்குக் காரணம் நமது நாட்டின்
குருகுலக்கல்வி முறை.
பக்த பிரகலாதன் கல்வி பயின்றபோது குரு அரசருக்கு பயந்து கல்வி
போதித்தார். இன்று ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள்,தனியார் பள்ளி
நிர்வாகிகள்,பள்ளி முதல்வர்கள்,பயிலும் மாணவர்கள்,பெரும் ஊதியங்கள்,
தனிவகுப்பு கட்டண ங்களுக்கு வரும் பெற்றோர்கள்,இளம் பிராயத்திலேயே
மன வளர்ச்சி ,அறிவுத்திறன் பெற்ற மாணவர்கள் என அனைவருக்கும்
பயந்தே கற்பிக்கவேண்டிய சூழல்.
இவர்களைத் தவிர திரைப்படங்கள்,சின்னத்திரைகள் அனைத்திலும்
ஆசிரியர்கள் என்றாலே கேலியும் கிண்டலும் தான்.
இதில் வியக்கத்தக்க சிந்திக்கத்தக்கது என்னவென்றால்
எதிர்கால நாட்டின் சிற்பிகளை உருவாக்கும் கல்வித்துறை,
நாட்டின் சட்ட ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை,
நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அரசியல் அமைச்சர்கள்
அனைவரையுமே கேலியும் கிண்டலும் அவமானப்படுத்துவதும் தான்.
ஒருநாட்டின் முதல்வராக கலைஞராக இருந்தவர் எடுத்த கதையாகிய
பாலைவன ரோஜாக்கள் கதையின் முடிவு நீதி நியாயங்கள் குழி தோண்டி
புதைக்கப்படும் என்பதுதான்.
இந்த பரிதாப கேலி கிண்டலுக்கு ஆளான மூன்று துறைகளுமே
அதாவது அரசியல்,கல்வி ,காவல் மூன்றுமே இன்று ஊழலின்
சாம்ராஜ்யமாக இருப்பதுதான்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக