செவ்வாய், ஜூலை 03, 2012

3.Why the Hindus voice differs? Why there is no one voice Part-3

   
       
      இந்துக்கள்   ஒரே குரலில்  இணைவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உள்ளது.
அதில் ஹிந்தி இலக்கிய வீர காப்பியகாலம் பற்றி
 சென்ற தொடரில் எழுதி இருந்தேன்.

அரச குமாரிகளை   அபகரிக்க போரிட்டகாலம் .

அதற்கேற்ற இலக்கியங்கள் அதிக அளவில் தோன்றின.

 நாட்டைப்பற்றி,சமுதாயத்தைப்பற்றி  கவலைப்படாத

மன்னர்கள்,சேனாபதிகள்,போர்வீரர்கள் தன்  வீரத்தை,அரிய

உயிரை  இழந்தனர்.அழகிய பெண்களுக்காக பயன்படுத்தினர்.

காதல் என்பது நாட்டின் நலத்தை மறைத்த காலம்.

மேற்கண்ட சூழலில் முகலாயர்கள் படை எடுப்பால்

 இந்திய மன்னர்கள்  பதவி  இழந்தனர்.

வறுமை நிலை ஏற்பட்டது.அரசர்கள் வீரத்தைப் புகழ்ந்தால்

உணவு கிடைக்க வழியில்லா புலவர்கள் இறைவனை சரணடைந்தனர்.

ஹிந்தி  இலக்கிய வரலாற்றில் பக்தி காலம்  பொற்காலம்  ஆகியது.


ஆனால் ,முகலாயர்கள் வந்ததால் பக்தி  இலக்கியங்கள்  இரு முக்கிய

பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

 பக்தி இலக்கியம் (1) உருவ வழிபாடு,(2)அருவ வழிபாடு

 என இரு பிரிவுகளாக பிரிந்தது.

அதற்கென தனிதனி அணிகள் தோன்றின.

அருவ வழிபாட்டில் இருவேறு கருத்துக்கள் வேற்றுமைகள் உண்டாகின.

அறிவிருந்தால் ஆண்டவனைக் காணலாம் என்ற ஞான மார்க்கம்.
.
அன்பினால் ஆண்டவனைக்காணலாம்  என்ற  அன்பு மார்க்கம்.

இதில் ஞான மார்க்கம் தோற்றுவித்த கபீர் தாசர்  பிறப்பால் அந்தணர்

.வளர்ப்பால் முகலாயர்.

.இவர்  அறிவுக்கு முதலிடம் தந்து,
 ஜாதியைஒதுக்கினார்.

பல நூல்கள் கற்ற ஞானியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவனிடம் ஞானத்தைபற்றி  கேட்டு  தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாதியைப் பற்றி கேட்காதீர்கள்.

ஞானம் என்பது கூறிய வாள்  போன்றது.

ஜாதி அந்த வாளின்  உரைபோன்றது.

 உரை சக்தி வாய்ந்ததா/.வாளா.?
உறை    விட்டுவிடுங்கள்
.ஞானம் தான் பிரதானம் என்றார்.
கபீரை பின்பற்றி  ஞானமார்க்க கவிஞர்கள் தோன்றினர்
.
     "பக்தி"     என்பதில் "" அருவமும் உருவமும் ஆனாய் போற்றி"
  என்ற ஹிந்து மதக்  கோட்பாடும்  ஏற்றுக்கொள்ளப்பட்டதே..






(தொடரும்)

கருத்துகள் இல்லை: