திங்கள், ஜூலை 02, 2012

1.why the Hindus voice differs? Why there is no one voice Part-1


ஹிந்துக்கள்  ஏன்   ஒரே  குரல்  எழுப்புவதில்லை?

           நேற்று  ஒரு நண்பர் ஒன்று சேர்தல் (Get together function) சந்தித்தல் -(விருந்தோம்பல்  என்பதற்கு ஆங்கிலப்பெயர்) நடந்தது.

அதில் ஒருவர்  எழுப்பிய  வினா என்னை சிந்திக்கவைத்தது.

.தமிழ்நாட்டில் கோயில்,ஹிந்து மடாலயங்களில் மட்டும் ஊழல் நடப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால் மசூதியிலும்,மாதகோவிலிலும் ஊழல்
இல்லையா?அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?


இந்து ஆலயங்கள்,மடாலயங்கள்,ஆதீனங்கள்  சிக்கலாகும் போது ஏன் 
இந்துக்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதில்லை ?
சிக்கலான வினா?

விடை அளித்தால்  கோபம் வரக்கூடாது
.மக்களாட்சியில் தங்கள் கருத்தை தெரிவிக்க  கருத்து சுதந்திரம் வேண்டும்.உண்டு.
நமது நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  யார்?கிறிஸ்தவர்கள் யார்?புத்தர்கள் யார்/?
சமணர்கள் யார்?
அவர்கள்  முன்னோர்கள் சனாதன தர்மத்தைதானே பின்பற்றி இருக்கவேண்டும்.அவர்கள் மதம் மாற காரணம் என்ன?

சுயநலமா?பேராசையா?உயிர் பயமா?அடக்குமுறையா?கட்டாயமா? இருந்தால்  அனைவரும் ஆங்கிலம் கற்பதுபோல் மதம் மாறி இருப்பார்.
இவை   காரணங்கள் அல்ல.

.இவைகளுக்கப்பால்,  ஒரு காராணம் .இந்துக்களால் இந்துக்கள்  அவமானப்படுத்தப்பட்டனர்
.பாரதியாரே அவமானத்திற்கு ஆளானார்.

சுதந்திரப்போராட்ட விநாயகர் ஊர்வலம்
 இன்று கேலிக்கும் பயத்திற்கும் காரணமாகி ,

 பலநாட்கள் உழைப்பு,பணம் முதலியவற்றை  கடலில் கரைத்து ,

இறைவனை  கை கால்  என்று பிய்த்து மிதங்கவைத்து,
 கரையில் ஒதுங்கச்செய்தல் ,
அதன் மேல் மறைவில் நாயும் மனிதனும் மலம்-ஜலம் கழித்தல் '
 எவ்வித  பக்தி?
.இந்த ஊர்வலம் நடத்தும் நாள் !! ஒரு பதட்டமான நாளா?பக்திசிரத்தை யான நாளா?!!!

காவலர் புடை சூழ  உருட்டை கட்டை உடன். எப்பொழுது கலவரம்

வெடிக்குமோ/?குண்டுவேடிக்குமோ  ?
 என்ற அச்சம் வேறு.
அழகு  சிலைகள் சிதைக்கப்படுவது,

  என்  நோக்கில் குரங்கு கையில் கொடுத்த,பூமாலை போல்  அழகு

கலைவண்ணம் மிக்க வினாயகர்களின் சிலைகளை

தூக்குவான் மூலம் கடலில் எறிவது.

அதற்கான   முதலீட்டை ஆக்க பயனுள்ள

பணிகளுக்கு,அரசுப்பள்ளிகளின்  குடிதண்ணீர்,கழிவறை வசதி ஏற்படுத்த

செலவு செய்து சக்திவினாயகர்  திருவிழாவை பக்தர்கள் அழிக்கும்

 நிலைக்கு பயன் படுத்தாமல் ஆக்க பணிக்கு பயன் படுத்தலாம்.

பால கங்காதர திலகர் வெள்ளையனை எதிர்த்துப்போராட,

 மக்களை ஒன்று சேர்க்க விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும்
  என்ற இயக்கம் தொடங்கினார்..
இன்று  அது ஒரு மத உணர்வாக மாற்றப்பட்டு,

 இலட்சக்கணக்கான ரூபாய்கள் கடலில் கரைக்கப்படுகின்றன.

.எனது  கருத்து.

கொந்தளிக்கவேண்டாம்

(தொடரும்)

கருத்துகள் இல்லை: