சனி, அக்டோபர் 13, 2012

தினசரி செய்திகளும் எனது சிந்தனைகளும்


தினசரி செய்திகளும் எனது சிந்தனைகளும் 

1.   பச்சிளம்  குழந்தை இரக்கமின்றி சாலை ஓரத்தில் 
கிடந்தது.

        மகாபாரதம் தொடர்கிறது.
கர்ணன் ஆற்றில் வீசப்பட்டான்.

2.காதலின் மோகத்தால் காதலியின் கணவன் கொல்லப்பட்டான்.
ஷேர்ஷஹைக் கொன்று ஷாஹ்ஜஹான் மும்தாஜை கவர்ந்தான்.

ராவணன்  சீதையை தூக்கிச் சென்றான்.

3.தங்கையின் காதலனை அண்ணன் கொன்றான்./தந்தை.

எனக்கு மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியர் சொன்ன  கதை நினைவிற்கு வருகிறது.
அவர் சொன்ன முறை ஒரு காட்சியை முன் வைத்தது.

ஷாஹ்ஜஹான் மாளிகையின்  அந்தப்புரம்.
அவள் மகள் தன்  காதலுடன் 
  ரஹசியமாக   பேசிக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது தன்காதல் மனைவிக்கு
  தாஜ்மஹால் கட்டிய ஷாஹ்ஜஹான் 
அங்கு வருகிறார்.
 தந்தை வரவை  அறிந்த மகளும்
 பேரரசர் வருகை அறிந்த 
 காதலனும் அஞ்சுகின்றனர் .
ஓடி ஒழிய அங்கு இடமில்லை.

காதலன் அங்குள்ள பெரிய வெந்நீர்
 கொப்பரையில் ஒளிந்து கொள்கிறான்.
பாதுஷாஹ்  இதை கவனிக்கிறான்.உடனே பணியாட்களை அழைத்து  அந்த  கொப்பரையை  அடுப்பில்வைத்து  தீ மூட்டச் சொல்கிறான்.
காதல் மதிப்பை அறிந்த மன்னவனின் இரக்கமற்ற செயல்.
.மகள் கண்ணீர் மட்டும் விடுகிறாள்.
 அங்கு அவள் காதலன் வெந்து மடிகிறான்.
 இது வரலாறு.

4. மகளைகாதலித்த காதலனுடன்  தந்தை சண்டை.

சிவபெருமான் தக்ஷனுடன் சண்டை.வள்ளியின் பெற்றோருடன் முருகப்பெருமான் சண்டை.

ஆகையால் காதலும் பிணக்கும் சண்டையும் கொலையும் ஆதிகாலத்தில் இருந்தே வருகின்ற கதைகள்.

5.ஹிந்தி  இலக்கிய வரலாற்றில் 
 பக்திமார்க்கம் ஒரு பொற்காலம்.
அதில் அன்பு மார்க்கம் என்று ஒன்று
.இறைவனை அடைய ஞானத்தைவிட
 அன்பே பிரதானம் என்பது.
அதில்முக்கிய கவிஞர் 
மாலிக் முஹம்மது ஜாயசி 
.அவர் எழுதிய" பத்மாவதி"  மகா காவியத்தில்
  ராஜா ரத்னசேன்  தன் காதலி  பத்மாவதிக்காக  கடும்போர் புரிகிறான்.
காதலியை பல தடைகள் மீறி அடைகிறான்.அவ்வாறே 
 இறைவனை அடைய முயலவேண்டும்
  என்பதே காவிய நோக்கம்.

ஆகையால் காதல் தெய்வத்தை அடைவதாக இருக்கக்கூடாது.தெய்வத்தன்மை  கொண்டதாக  இருக்க வேண்டும்.









கருத்துகள் இல்லை: