வியாழன், ஜூன் 28, 2012

நீண்ட ஆயுளுடன் ஆரோக்ய வாழ்க்கைக்கு

மனிதன் உழைப்புக்கேற்ற உணவு உண்ணவேண்டும்.கடுமையாக உழைப்பவர்கள் தான் அரிசியை அதிகமாக சாப்பிடவேண்டும்.பொதுவாக 25 வயதிற்குப்பின் கோதுமை அரிசி உணவு சாப்பிடுதல், கிழங்குவகைகள் சாப்பிடாமல் இருத்தல்.  சர்க்கரை அளவு குறைத்தல், பச்சைக்காய்கரிகள் உண்ணுதல், அரிசியால் செய்யப்படும் இட்லி, தோசை, அடை, ஊத்தப்பம் போன்ற வற்றைத் தடுத்தல்  ஆயுளை அதிகப்படுத்தும் என்கின்றனர்.
சர்க்கரை சோதனையில் சிறிதளவு வுயர்ந்தாலும் உடனே சர்க்கரை மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களைத் நாம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் பல நோய்களுக்கும் அடிப்படை.பக்கவாதம்,இதய நோய்கள் மாரடைப்பு,மேலும்  உயிர்க்கொல்லி  நோய்களை அமைதியாக அதிகரிக்கும்  சர்க்கரை நோய்.

இனிப்பு  ஆராம்பத்தில் கொண்டாட்டம் பின்னர் திண்டாட்டம்.  விளைவு -

  • ஆயுள் காலம்  குறையும்.
  • மருத்துவ சிலவு அதிகரிக்கும்.

ஆகையால் கடின உழைப்பில்லா 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோதுமை உணவு சாப்பிடுவது  பல நோய்களைத் தடுக்கும்.


மேலும் வேக நடைப்பயிற்சியும் அவசியம்.  இருபது நிமிடத்தில் ஒரு மைல்  நடக்கவேண்டும்.


இந்தியாவில் ஆரம்பநிலையில் சர்க்கரை நோயை கண்டுபிடித்து கட்ட்ப்படுத்தாததால்  பலர் 60-65 வயதில் இறைவனடி சேர்ந்து விடுகின்றனர்.
ஆகையால்  அரிசிச்சாப்பாடு  குறைத்து ,  நோய்களைக் குறைத்து

கோதுமை  உணவை  உண்டால்  நோய்கள் கட்டுப்படும். ஆயுளை அதிகப்படுத்தும்.

அக்னி குஞ்சு " என்று கூறிய பாரதியார் அது ஒரு காடே பற்றி எரிய
 காரண மாகியது..அவ்வாறே நோய் ஆரம்ப நிலையிலேயே தடுக்காவிட்டால்
உடல் அழிய காரணமாகும்..


ஆலோசனை  மற்றும் அறிவுரை வழங்கியவர் -

DR.RAVI IYYER M.D.,Ph.D;
INTERNAL MEDICINE & PREVENTIVE CURE.
PHONE 703 404 5900
website: www.driyer.com
driyer.novahealth@gmail.com.

democracy is really success .for whom/



கற்பனையில்  கல் கோட்டை கட்டுதல் என்பார்கள் .

மனிதனின் ஒவ்வொரு கற்பனைகளும் கனவுகளும் நிஜமாகிறதா?என்றால்

அது யார்மூலமாவது செயலாக்கப்படுகிறது.

 நமது எண்ணங்கள் கற்பனைகள் எங்கோ யார்மூலமாகவோ நடக்கிறது.

நான் நினைத்தேன் ;அவன் முடித்தான்.அதில் ஒரு மகிழ்ச்சி

 காண்கிறோம்.நமது எண்ணங்கள் ,கற்பனைகள் மற்றொருவர்

வெளிப்படுத்தும் பொழுது ,அது பலரின் எண்ணங்களாக மாறும் பொழுது

கூட்டம் சேர்ந்து அவனை  மஹானாக  மாற்றுகிறது.

சிலர் அவரின் தொண்டனாகிறார்கள்.

 சிலர் நம் கருத்துக்கள் நாங்கள் தானே என்று நாமும்

 அவ்வாறு ஆகக்கூடாதா  என புதிய முறையில் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அதில் வெற்றி அடைபவன் ஒருவனாகத்தான் இருக்க முடிகிறது.

அதனால் தான்  அவர்கள் நிலைத்து அமரனாக்கிய பின் அவன் தொண்டர்கள்

பல கிளைகளாகப் பிரிந்து பல சம்பிரதாயங்களை உருவாக்குகின்றனர்.

அப்பொழுது தான் போட்டி -பொறாமைகள் ,சண்டை-சச்சரவுகள் ஏற்பட்டு

அந்த மஹான்கள்  ஏற்படுத்திய மனித

நேயம்,சமாதானம்,ஒற்றுமை,நேர்மை,சத்தியம்  போன்றவை ஒவ்வொரு

இனத்திற்கும் மாறு படுகின்றன.

பரந்த மனப்பான்மை மறைக்கப்பட்டு  அல்லது மறுக்கப்பட்டு  இன

வேற்றுமைக்கும் ,குறுகிய மனப்பான்மைக்கும் மனித சமுதாயத்தை

பிரித்து  தலைவர்கள்  மட்டும்  சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

தொண்டர்கள்  தீக்குளித்த வரலாறு உண்டு.

தலைவர்கள் சிறு சிராய்ப்பு கூட இல்லா  இஜட்  பாதுகாப்பில்.
தொண்டர்கள்தான் தடி அடி படுவர்.

இதில் விதிவிலக்கு நமது சுதந்திர போராட்டத் தலைவர்கள்.

ஆனால் நாட்டின் விடுதலைக்குப்பின் ஊழல் செய்த எந்த அரசியல் வாதியும்

தண்டனை பெற்றதில்லை.

ஆனால்  குற்றங்களுக்கான காரணங்கள் ஆராய ஒரு நீதிபதி

.அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை.

அதற்கு பல கோ டிகள்  ரூபாய் சிலவு.


;
.ஆனால்
அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி.மீண்டும் பதவிகள்.

நீதிமன்றத்தில் மட்டும் வழக்கு விசாரணை.ஆனால் தீர்ப்பு எழுதப்படுவதில்லை.

இது தான் மக்களாட்சி.

செவ்வாய், ஜூன் 26, 2012

DHARMAM



குல தாழ்ச்சி சொல்லல் பாவம் என்றார் பாரதி.ஆனால் பாரதத்தில் கர்ணன்,விதுரன்  இருவருமே ஒதுக்கிவைக்கப்பட்ட  பாத்திரங்கள் .

கர்ணன் தன்  குருவின்  தூக்கம் கலையாமல் இருக்க தொடையில் வண்டு துளைத்து சென்றதை  பொறுத்துக் கொண்டான்.ஆனால்  அவன் புகழப் படவில்லை. சபிக்கப்பட்டான்.
ஏகலைவனின்  திறமைக்கு  கட்டை விரல் காணிக்கை.
புராணங்கள்  தான் அப்படி என்றால் சமுதாயப்  புரட்சி,கலப்பு காதல் திருமணங்கள் நடக்கும் இக்காலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
அரசியல் அன்றும் சுயநலத்தால்,இன்றும் சுயநலத்தால்.
 என்று தணியும் இந்த ஜாதிகள் மோகம் என்று இன்று பாரதி இருந்தால்
பாடி இருப்பார்.

தான -தர்ம சிந்தனை என்று கோடிக்கணக்கில் கோயில் உண்டியலில் போடுபவர்கள்  ,ஆஷ்ராமங்களுக்கு அள்ளி வழங்குபவர்கள்
 சேரியில் உள்ளவர்களுக்கு  வீடு சாலை  தண்ணீர்  வசதிகள் செய்யலாம்.
குடி இருக்க  குடி இருப்புகள்  கட்டித் தரலாம்.கோடிக்கணக்கில் தனக்காக வீடு கட்டி வாஸ்து சரியில்லை  என்று குடிபோகாமல் இருக்கும் பணக்காரர்கள்
பலர்  குடியிருக்க தர்மம் செய்யலாம்.







திங்கள், ஜூன் 25, 2012

manitha manama /kama raakshathana/seithikal tharum vedanai.

செய்திகள்  தரும்  வேதனைகள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பேத்தியை தாத்தா  கொலை செய்தார்.
வேளச்சேரியில் பெற்ற குழந்தையை தெருவில் வீசிச்சென்ற தாய்.
தொலைகாட்சி தொடர் பார்த்த பொழுது குழந்தையை கவனிக்காததால்
குழந்தை மரணம்.
கழிவு நீர் பள்ளத்தை தெர்மாக்கோல் கொண்டு மூடி வைத்ததால் அதில் ஏறி நின்ற 17 வயது சிறுவன் மரணம்.

மனிதர்கள்  மாக்களாக மாறிவரும் நிலை.போக்கிரிகள் கதாநாயகர்களாக வரும் கதைகள்.
காவல் துறையில் கருங் காலிகளால் சட்டம் பாதிக்கும் நிலை என்று காட்டும்
தொடர்கள்.
ஜாதிகளை உறுதிப்படுத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
ஜாதிகள் இல்லையடி பாப்பா  -என்ற பாரதியின் பாட்டு,
கலப்புத்திருமணம் செய்தால் தங்க மெடல் கொடுத்து பெற்ற பிள்ளைகள் எந்த ஜாதி.
 எனக்குத் தெரிந்த எத்தனையோ உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி திருமணத் தம்பதிகள் வேதனை புரியுமா ?
கிளை ஜாதிகளே இல்லாத கிறிஸ்தவ மதத்திலும் மாறிய அரிஜன கிறிஸ்தவர்கள் என்று எழுத வைக்கும் அரசுத்துறை.
இந்தியனின் வேதனைகள்.

சனி, ஜூன் 23, 2012

APOORVA SAKTHI. இறைவழிபாடு இன்றியமையாதது தான்.


    இறைவழிபாடு  இன்றியமையாதது தான்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் வாக்கு.

ஆனால் ஆலய வழிபாட்டில் பல் வேறு நடை முறை எப்படி வந்தது ?

 மனிதன் தன் சுயநலத்திற்காக பல்வேறு சம்பிரதாயங்களை  ஏற்படுத்தி 

தனக்கென   ஓர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொள்கிறான்.

அண்ணாதுரையை /காமராஜரை தலைவராக ஏற்று பல  கட்சித்தலைவர்கள்

நடமாடுவது போல்.

தலைவர் ஒருவர்.கொள்கை ஒன்று
.கட்சிகள் மட்டும் வேறு/.
அவ்வாறே
ஓர் இறைவனுக்கு பல ஆலயங்கள்

.பெயர் மட்டும் வேறு.

இது
அருகாமையில் பல ஆலயங்கள் கட்ட உதவு கின்றன.

கோயில்களிலும் ஜாதிக்ககோவி ல்கள் உள்ளன.

 இந்தக் கோயில் இந்த ஜாதியினரால்  கட்டப்பட்டது

.ஆலயங்களில் முதல் மரியாதைக்கான சண்டைகள்

.பணக்கார-ஏழை,உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி .

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல்

 பூஜாரியின் நடத்தையில் /கண்களில்/முகத்தில்,பிரசாதம் வழங்கும்

செய்கையில் எத்தனை மனோ பாவங்கள்.

அத்தனையும் தர்மகர் த்தா முன்னிலையில் அரங்கேறும்.

மேலும் தெருவிற்கு ஒரு கோயில்.

அதற்கு திருவிழா.எங்கள் கோயில் திருவிழா  சிறந்தது.

நாங்கள் அதைவிட சிறப்பாக என ஆலயம் வைத்து

சண்டைகள்.போட்டிகள்.பொறாமைகள்.

அனைத்தையும் மீறி மூலவரின் மேல் பக்தி.

அங்கு செல்லும் பக்தர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை.

அதையும் மீறி கூட்டங்கள் .

அன்றைய தினம் தெருவியாபாரிகள் ஆக்கிரமிப்பு.

.போக்குவரத்து சங்கடங்கள்.

அதையும் மீறி கூட்டங்கள்.


ஜேப்படி திருடர்கள்,நகை திருடர்கள்,காதல் ,குமாரியாக சென்ற மகள்

திருமதியாக திரும்பி வருதல் .

அங்கு கேலி வேறு  ஆண்டவனே காதல் கலப்பு மனம்தானே



.அ தையும் மீறி கூட்டங்கள்.

அங்கு ஒரு அபூர்வ  சக்திதான்.

வியாழன், ஜூன் 21, 2012

எதிர்ப்பு என்பதும் அரசியல் தான் .

மனிதன்   பரந்த உள்ளமாக இருக்கும் போது

அனைத்தையும் ஏற்றுக்கொள்வான்.

மனம் குறுகிய சுயநலமாக இருக்கும் பொழுது

ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் ;கால் பட்டால்  குற்றம் தான்.

கொலை வெறி பாடல் ரசிக்கும் கூட்டம்

,கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா?,கட்டிக்காம ஓடிப்போகலாமா?
 பாடல் ரசிக்கும் கூட்டம்
குஷ்பு  கற்பு பற்றி பேசியதும்   போராட்டம்.

 இந்த பாடல் எப்படி ரசிக்கிறது

.இதுதான் அனைத்து விஷயங்களிலும்.

எதிர்ப்பு  என்பதும்   அரசியல் தான் .

திங்கள், ஜூன் 18, 2012

changing sanskkrit name in tamilதமிழ் பெயர்கள் மாற்றம் தேவையா?

தமிழ் பெயர்கள்  மாற்றம் தேவையா?

ஒரு மொழி வளம் பெற தனித்தன்மை தேவை என்ற சூரியநாராயண சாஸ்திரி
பரிதிமாற் கலைஞர் என்ற பெயர்  மாற்றத்தால் புரட்சி செய்தார்.இப்போழுதும்
சிலர் தனிதமிழ்  என்று கூறிவருகின்றனர்.நாட்டில் பல இன்றியமையா பிரச்சனைகள் உள்ளன.ஒரு மொழி எப்படி தன ஆதிக்கத்தை செலுத்து கிறது
என்பது புரியாத புதிர்.
காமராஜர்,பக்த வத்சலம்,கருணாநிதி,,ஜெயலலிதா,சசிகலா ,நடராஜ்,உதயநிதி,ஸ்டாலின்,
அழகிரி,உதயசூரியன்,தயாளு,தயாநிதி,சன் பிச்சர்ஸ் ,என்ற அனைத்தையும்
மாற்ற முடியுமா ?
நாம் பேசும் பொது நடு ரோடு என்றுதான் பேசுகிறோம்.லைட் எரிகிறதா?சுவிட்ச் போட்டியா?பஸ் வந்து விட்டதா?மைக் வேலை செய்கிறதா?
சைக்கிள் பஞ்ச ரா  ?இந்த ஆதிக்கம் ஒழிக்க முடியுமா? 
பல நதிகள் சேர்ந்தால் கடல்.இல்லையேல் நதி.
அ ணை கட்டினால் வறட்சி.

மொழியும் அவ்வாறே.

பூஜை,அர்ச்சனை,தக்ஷினை,பரம்பரை ஆதீனம்,மடாலயம்.,உத்சவம்.
ஈஸ்வரன்,தானம்,தர்மம்,சந்தேஹம்,குரு,சிஷ்யன்,போன்ற வழிபாடு
ஸ்தலங்கலில்  தனித்தமிழ் முடியுமா?

பிரண்டு ,ஸ்கூல்,பெஞ்ச்,போர்டு,டீச்சர்,மாஸ்டர்,புக்,நோட்டு,அசெம்பிளி.
நோட்ஸ் ஆப் லேசன்,பேனா,பென்சில், ரப்பர்,சாக்பீஸ்,டஸ்டர்,
போன்றவற்றை மாற்ற முடியுமா?
தனியார் பள்ளிகளின் ஆங்கில ஆதிக்கம் பட்டி தொட்டியில் எல்லாம் வளரும்
சூழலில்

விருத்தாசலம்  பெயர் மாற்றம் தேவையா?
நவரத்தினம்,நவதானியம்,நவீனம் ,ரக் தபந்தம்,நவக்ரகம் ,நாயகன்,நாயகி,
நவரசம்,ரத்தக்கண்ணீர்,போன்ற சொற்கள்.

ஹோட்டல்,டிபன்,டூர்,டிக்கட்.சார்ஜ் ,போனஸ் என்று  நம் வாழ்வில் கலந்த
சொற்கள்.
இதை நவீன தலைமுறை ஏற்குமா?
ஒருமொழி வளர தனித்தன்மை என்ற எழுச்சி பலன் தருமா/?
பழம் மொழிகள் சமஸ்கிருதம்,கிரீக் ,லத்தீன் போன்றவற்றில்
 தமிழ்
வளந்துவரும் நிலையில் இந்திய மொழிகள் அனைத்துமே
பிழைக்க வழி  இல்லா நிலையில்
தனிதமிழ் படிப்போருக்கு வேலை கிடைக்கா நிலையில்
தனிதமிழ் இயக்கம் என்பது .....பரிதிமாற் கலைஞர் பின்பற்றா நிலை தான்.
கருப்பா ...கருப்பாயீ  என்று அழைத்தால் என்று தமிழன் தலை நிமிர்கிறானோ
அன்று தான் சிறப்புவரும்.
ஷ்யாம்,ஸ்வேதா , ஜெயா,யஷஷ்,விஜய் ,போன்ற  பெயர்கள் மாறுமா?
அவைகள் தான் புதிய  தலை முறை   விரும்பும்  பெயர்கள்.





























புதன், ஜூன் 06, 2012

palaiyathil puthuthithu.

பழையவை நல்லவை மீண்டும் மீண்டும் கூறவேண்டியவை.

மனித மனம்  மத நம்பிக்கையில் மதம் பிடித்து ஒருவரை ஒருவர் வெறுக்கும்
நிலைக்கு வரும் சமயங்களில் ஒற்றுமைக்காக தேவதூதர்கள் அவனியில் அவதரிக்கின்றனர்.ஆனால்  அந்த இறை தூதர்கள் வாழும் காலங்களில் அவர்களுக்கு ஆதரவை எளிய மக்களே வழங்கினர்.ஏசுநாதரை சிலுவையில் அறைந்ததும்,முஹம்மது நபியை கல்லால் அடித்ததும்,பல மதப்பெரியார்கள் இன்ன லுற்றதும் வரலாற்று சான்றுகள்.

மது சா லை யும் ,மாதுக்களும் மாயைகள்.அது நம்மை காந்தமாக கவரும்.
இன்றைய கருத்துக்கள் எல்லாமே பழைய கருத்துக்கள்.

சில மருத்துகள் ஒரே மருந்தை நாம் சாகும் வரை குடித்தால் தான் வாழ முடியும் .
அது போல் நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது அவசியம்.
தெரிந்ததையே கூறியதையே  மீண்டும் கூறவேண்டியவை ஆன்மீகம்.
அதனால் தான்,வேதங்கள்,கீதைப்பெருரைகள்,குரான்,பைபிள்  மீண்டும் மீண்டும்
ஓதப்படுகின்றன.தொழுகை செய்யப்படுகின்றன.
மது சாலைக்கு விளம்பரம் தேவை இல்லை.ஆனால் நல்ல விஷயங்களுக்கு
கூட்டங்கள்  கூட்ட மிகவும் பிரயத்தனப்படவேண்டி உள்ளது.
அதற்கு  பழையவைகளை புதுப்பாணியில் விளக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
நல்லோரை காண்பதுவும் நன்றே.நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே.நல்லோருடன் இணங்கி இருப்பதுவும் நன்றே.
தீயவை  ஒரு நொடியில் பதிந்துவிடும்.நல்லவை பதிய நாளும் முயற்சி தேவை.