வியாழன், ஏப்ரல் 05, 2012

Manappakkuvam

மனப்பக்குவம்

மனிதனின் மகிழ்ச்சிக்கும் மன நிறைவிற்கும் மனமே காரணம்.

சிற்றலை பேரலை என்ற நிலையில் மனம் அலைபாய்ந்தால் ,
மனம் ஆர்பரித்துக்கொண்டே இருக்கும்.
சமுதாயத்தில் இருந்துகொண்டே மனக்கட்டுப்பாடு என்பது
மிக்கக் கடினம்.
இந்த மனம் ஆழ்கடல் அமைதியாக இருக்கவேண்டும் enraal,
மனப்பக்குவம் அதிகம் தேவை.
இதற்காகத்தான் இறைவணக்கத்திற்கு உலகம் முழுவதும்
முக்கியத்துவம்  அளிக்கப்படுகிறது.
மௌனம் என்பது இதற்கு ஒரு அடிப்படை.
அதனால் தான் தவத்திற்கு பிரதனத்துவம் அளித்தனர்.
இது சனாதன தர்மமான ஹிந்து தர்மத்திற்கு மட்டுமல்ல,
இஸ்லாமிய இறைத்தூதரின் ஹீரா குஹை த்யானமும்
ப்ரத்யக்ஷ சாட்சிகளாகும்.
ரமண மகார்ஷிக்கு மௌன சாமிகள் என்றும் பெயர்.
மௌனம் தான் ஆதி மனிதன் வளர்ச்சிக்கு ஆதாரம்.
ஏனென்றால் பழைய கற்காலத்திலும் புதிய கற்காலத்திலும்
மொழிகள் கிடையாது.
மொழிகளின் உற்பத்தியே இறை சக்திதான்.
மனிதன் பேசாமல் செயலாற்றும் போதுதான் தோன்றுகிறான்.
காதல் வயப்படும் போது கோழி சேவல் தவிர மற்ற உயிரினங்கள் மௌனத்தையே கடைப்பிக்கின்றன.
மௌனம் என்பது தான் உற்பத்தித்திறன்.
மௌனம் என்பது தான் கற்பனைத்திறன்.
அதனால் தான் நிறை குடம் ததும்பாது,குறைகுடம் கூத்தாடும் என்றனர்.
மௌனம் சாதி என்று கூறுவார்.
சாதனையாளர்கள் அதிகம் பேசுவதில்லை.
உண்மை,நேர்மையாளர்கள் பேசுவதில்லை.
ஏமாற்றுக்காரர்கள் அதிகம் பேசுவர்.
அரசியல் வாதிகள் அதிகம் பேசுவர்.
செயல்வீரர்கள் பேசமாட்டார்கள்.
ஆகையால் மனக்கட்டுப்பாடு
மன நிறைவையும் ,பிரம்ம ஆனந்தத்தையும்,
ஆசை அடக்கும் திறனையும் தரும்.

கருத்துகள் இல்லை: