திங்கள், ஏப்ரல் 16, 2012

சித்தம் தெளிய மருந்து

சித்தம் தெளிய மருந்து

மனம் பித்து பிடித்தது போல் உள்ளது என்பர்

.மனம் தான் மனிதர்களை ஆட்டிவைக்கிறது.
கண்டவற்றின் மேல் ஆசை வைக்கிறது.
கண்டபடி ஆசை கணக்கில்லாமல்
கண்களை கவர்வதால்,சித்தம் கலங்குகிறது,
ஒரு பொருளை வாங்க ,பல மணிநேரம் ,
பலரிடம் விசாரணை,வாங்கிய பின்
அதே மாதிரியான,மற்றோருபொருள்,
கண்டவுடன் மனம் ஏங்குகிறது,
விலை  அதிகம் கொடுத்துவிட்டோமோ,
இன்னும் விசாரித்து  இருக்கலாமோ ,
புத்தாண்டு  சலுகைவி லையில் ,
வாங்கி  இருக்கலாமா என்ற
எண்ணம்,மனம் அலைபாய்கிறது,
இதுவும் தெளிவற்ற நிலை.

ஆலயம்,பிரகாரம்,மந்திரம்,பரிகாரம்,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக்கூறி,
மனதில் தெளிவற்ற நிலை .
ஆலய தரிசனம் முடித்து வந்த பின்
ஒரு உறவினர் அந்தக்கோவில் தெற்கு மூலையில்,
கிழக்கு பார்த்த தூணில் ஒரு சிறு அம்மன் சக்தி உள்ளது,
பார்த்து வணங்கிவரவில்லை என்றால் அந்த ஆலயம்
சென்று வந்த புண்ணியம் கிடைக்காது.
ஆயிரக்கணக்கில் சென்று வந்த புண்ணியம் ,
கிட்டாமல் போய் விடுமா என்ற மனக்கவலை மாமிக்கு.

தெளிவற்ற மனம் பித்து பிடிக்கவைக்கிறது.
 அவ்வாறே மருத்துவ சிகிச்சை.
இந்த  டாக்டரா அவர் கைராசி கிடையாது.
மனக்கவலை மனம் பித்து பிடித்ததுபோல்.


மனம் தெளிவுபெற ஒரே முடிவு ,

ஒரே எண்ணம் ஒரே செயல்.
அதற்கு ஒரே கடவுளை ஏற்று
இறை நம்பிக்கை உடன் செயலாற்றுவது தான்.



கருத்துகள் இல்லை: