செவ்வாய், மார்ச் 20, 2012

uyarntha ullam vendum.

மனித  வாழ்க்கை  என்பது   போராட்டங்கள்  நிறைந்ததுதான்.
அதில்  எதிர் நீச்சல்  போட்டு  வெற்றி  பெற  முயற்சிக்கும்  அனைவருக்குமே மன  நிறைவான  வெற்றி கிடைத்துள்ளதா ?
 எல்லோரின்  மனதிலும்   குறையும் புலம்பலும்  தான்  உள்ளது.
ஆட்சி  பீடத்தில்  இருந்தாலும்  ஆண்டியாக  கோயில்  பிரகாரத்தில்  சுற்றி வந்தாலும்  ஆசைகள்   அல்லது  எதோ  ஒரு பற்று மனிதனை நிம்மதி இல்லாமல்
இருக்கச்செய்கிறது.
ஆண்டவன் மனிதனாக அவதாரம் எடுத்து நில உலகில் வந்தால் அவன் படும் போராட்டங்களை ராமாயணம் மகாபாரதத்திலும் காண்கிறோம்.இறைத்தூதர்களாக
அவதரித்தவர்கள் நன்னெறிகளை பரப்புவதில் ஈடுபட்டாலும் கல் எரிக்கு தப்பவில்லை.சிலுவையில் சித்திரவதைக்கு ஆளானார்கள் .கம்பருக்கு அவர் மகன் அரச தண்டனைக்கு ஆளானதால் வேதனை  தான் மிஞ்சியது.பாரதியின் புகழ் இன்று புகழப்பட்டாலும் அவரது வாழ்க்கை வறுமையிலேயே முடிந்தது.
காணி நிலம் வேண்டும் என்ற வேண்டுகோள் வேண்டுகோளாகவே முடிந்தது.
இதுதான்  உலகம்.ஓராண்டில் வரும் பருவகலங்களின் மாற்றம் மனித வாழ்க்கையிலும் பல்வேறு காரனகளாக வருகின்றன.
மனிதனின் மிகப்பெரிய துன்பம் மரணம்.மரணம் என்பது நிச்சயம்.இந்த மாறா சட்டம் இறைவனால் இயற்கையின் நீதி யாக உறுதியாக்கப்பட்டுள்ளது.

ஆண்டவன் ஆறாம் அறிவை மனிதனுக்கு அளித்தாலும் அவன் தனக்கு மரணம் ஒன்று உண்டு 
என்பதை மறக்க ஆசாபாசங்களை ஒரு
 மாயையை  உருவாக்கி மனிதனை 
சோதிக்கிறான்.
பிறப்பு -மரண வாழ்க்கையில் ஆணவம்,தன் மரணத்திற்கு முன் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகள் அவனை பல்வேறு 
செயல்களில் ஈடுபடுத்துகின்றன.
இறுதியில் அவன் முயற்சிக்கு அவசியமாக இருப்பது பணம்.குறைந்த பட்சமான உணவு பணம் இல்லை என்றால் இரத்தல்.பிச்சை  எடுத்து உண்டு உறங்குவது எப்படி இயலும்.கொடுப்பதற்கு உழைப்பவர்கள் வேண்டும்.பணம் படைத்தவர்கள் வேண்டும்
.அவர்களுக்கு ஈகை குணம் வேண்டும்.
இந்தப்பணம் போதும் என்ற எண்ணம் வருமா? வராத உலகம்.அந்தஸ்து என்பது சமுதாயத்தில் உயர தேவைகள் முதலில் சாதாரண தேவைகள் போதும் என நினைத்து கார்,பங்களா ,அரசியல் பதவிகள்,ஆன்மீகப் பதவிகள்,இறைவனுக்கு வைரகிரீடம் என அதிகரிக்கிறது.௧௨௩௦ கோடி ரூபாயிக்கு உயர்ந்த கட்டடம் கட்டி வாஸ்து சரியில்லை என்ற கவலை.குடிபோக முடியவில்லை.இதை ஈழகளுக்காக குடியிருப்புகள் கட்டலாமே என்ற எண்ணம் அரசியல் தலைவர்களுக்கும் வரவில்லை.கள்ளப்பணம் பதுக்குவோருக்கும் வரவில்லை.
எனவே மன நிறைவு என்பது போதும் ,மற்றவர்கள் வாழட்டும்  என நினைத்தால் வரும்.
இந்த உயர்ந்த எண்ணம் வர இறைவன் பெயரில் உள்ளம் உள்ளவர்களிடம் பிரார்த்திப்போம்.
வரும்.






கருத்துகள் இல்லை: