வெள்ளி, பிப்ரவரி 10, 2012

teacher murder-Why

ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் இரக்கமின்றி படுகொலை.ஹிந்தி மற்றும் அறிவியல் ஆசிரியை.
ஆசானும் ஆண்டவனும் எதிரில் நின்றால்,
ஆசான் அடிச்சரம் தொட்டு வணங்குவேன்.-ஏன் 
என்றால் அந்த ஆண்டவன் நேர்காண,
வழிகாட்டியாக ஆசான் தானே  இருந்தார்.-----கபீர்-இந்திக் கவிஞர் .

இன்றைய பள்ளிகளில் நீதி போதனைகள் குறைந்து விட்டது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கியம் சில ஆண்டுகளுக்கு   முன் 
தமிழ் நட்டுப்படநூல் நிறுவனம் அகற்றியிருந்தது.
முன்னாள் கல்வி இயக்குனர் ஒய்வு பெற்ற பின் ஒரு பெட்டியில் அரசுப்பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவதை விட கல்லைக்கட்டி கிணற்றில் போடலாம்  என்றார்.
ஆசிரியர்கள் மத ரீதியில் நீதி போதனை செய்தால் மதவாதி,.மணவர்களை 
திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது.எவ்வித கடுஞ்சொல்லும் கூறக்கூடாது என்று 
பகிரங்க அறிக்கைகள்.
மாணவர்கள் ஆசிரியர்களை இந்த அறிக்கைகள் கொண்டே மிரட்டும் போக்கு.
டியூஷன் படிக்கும்t மாணவர்களுக்குத் தனி சலுகை.
தமிழ்வழி மாணவர்களை அலட்சியம் செய்தல்,

நீதிபோதனை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமை.
தனியார் பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையிலும் பாடங்கள் நடத்துதல்.

சமுதாயம்

திரைப்படங்களில் வன்முறை.
கொலை,கொலைவெறி,காவல் துறையை படுகேவலப்படுத்தும் சினத்திரைகள்,
பணம் இருந்தால் காவல் அதிகாரிகளையும் படுகொலை செய்யலாம் என 
கொலைத்திட்டங்கள்,கொலை செய்யும் காட்சிகள்,வழக்கறிஞர் வாதத்தால்  
குற்றவாளிகள் தப்புவது,காவலர்கள் கண்ணீர் சிந்துவது,

அரசியல் வாதிகளின் அதிகாரம் நீதியை குழி தோண்டி புதைப்பது,

அப்பாவை படு கேவலமாக பேசுவது,
எதற்கும் தணிக்கை கிடையாது கேட்டால் உண்மை வெளிச்சமாகிறது.
நாடு எங்கே போகிறது.
மிக உயர்ந்த ஆசிரியர் தொழிலாளி ஆகிஉயிர் இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு பரிதாப நிலை.

















  

கருத்துகள் இல்லை: