திங்கள், ஜனவரி 30, 2012

samudayamum asuththamum.

சுத்தம்  சோறு போடும்

சுற்றம் சோறு போடுமா ?சுத்தம் சோறு போடுமா ?? தெரியாது.

நமது தமிழ் திருநாட்டில் பெரியார் பகுத்தறிவு பிரசாரம் செய்தார்.

ஆனால் அது இறைவனை அவமானப்படுத்தும் நாத்திக வாதமாக
சித்தரிக்கப்பட்டு ஆஸ்திகவாதம் நாத்திக வாதம் என
 மக்களைப்பிரித்து சிந்தனைகள் சீர்திருத்தக்கருத்துக்கள்
மக்களிடம் எடுபடாமல் போனது.
அதனால் தான் ஆலயங்களில் கற்பூரம் ஏற்றி அழகான சிற்பங்கள்,
வண்ணங்கள்   கறுப்பாகும் செயல் சரியில்லை என்று மக்கள் 
உணரவில்லை. சென்னையின் உயர்ந்த ஆயுள் காப்பீட்டுக்கட்டடம் ,
மேலும் பல கட்டிடங்களில் வெத்தலை போட்டார்கள் துப்புவது
நிற்கவில்லை.bakthi  மூடநம்பிக்கையால் 
 சுத்தம் அசுத்தமாகிறது என்றால்,
படித்தவர்கள் செல்லும் இடங்களிலும் சுத்தம் இல்லை.
கோயில்களில் கூட்டம் வரும் காலங்களில் மலஜலம் கோயில் மதில்
சுவரை சுற்றிதான்.அதிலும் பக்தியுடன் நாமமும் பஞ்சகச்சமும்
கட்டியவர்களும் இவ்வாறன இழி
 செயலில் ஈடுபடுவதுதான்  மிகவும் வருத்தமளிக்கிறது.
புதிய ஆலயங்கள்

நாள்  தோறும் புதிய ஆலயங்கள் தோன்றி   வருவது  ஆழமான
 பக்தியா
அல்லது  கருப்புப்பணமா      புரியவில்லை.
பிராசீன மான ஆலயங்கள் சரியாகப்      பராமரிக்கப்     படுவதில்லை .. 
பழைய   கோயில்கள்  இருளடைந்து     காட்சி அளிக்கும்  நிலையில் கே
கோயில்கள்
கலை  இழந்து  காட்சி  அளிக்கின்றன . இந்நிலையில்  புதிய  கோயில்கள்  தங்கமயமாகும்  
நிலையில்  அந்த  நிர்வாகிகளே  பழைய  கோவில்களையும்  பராமரிக்கலாம் .
அவ்வாறு  செய்யாமல்  இருந்தால்  ஆலயங்களும்  பள்ளிகள்  போன்று  வணிக  ஸ்தலமாவது  போல்  
தான் . பக்தி  ஆடம்பரமாகிறது .



கருத்துகள் இல்லை: