திங்கள், ஜனவரி 23, 2012

porumaikkm oru ellai undu.

மனிதன்

மனிதன் அழுதான்.

ஏன்?
ஏமாறுகிறோம்,
ஏமாற்றுகிறார்கள்.
ஏளனம் செய்கிறார்களே.
கலங்கப்படுத்துகிறார்களே.
கலப்படம் செய்கிறார்களே.
கலப்பு மணம். புரிகிறார்களே.
கையூட்டுப் பெறுகிறார்களே.
கடத்தல் செய்கிறார்களே.
கருப்புப்பணம் வைத்துள்ளனரே.
கருணையின்றி உள்ளனரே,.
கற்பழிப்பு,கடத்தல்,கவர்தல்,
கொலை,கொள்ளை,கந்து வட்டி,
என தகாத செயல் புரிகிறார்களே.
இன்னும் பல.
மருத்துவம்  ,பிணி ,பணி என.

இயற்கை அவன் செயல்களைக்கண்டு
அழுகிறது.
வனதேவதை தன அழிவைக் கண்டு.
வானம் தன்னை மாசுப்படுத்துவதைக்கண்டு.
பூமி அதன் பாடு அனைவரும் அறிந்ததே.
ஆறுகள் தன்னை அசுத்தப்படுத்துவது கண்டு.
கடல் மீன்கள் ,கூவம் கலப்பது என,
ஆடுகள்,மாடுகள்,வன விலங்குகள் என,
மனிதன் வாழ அழிந்து வருகின்றன.
சேவல்,புலி,கருடன்,மாடு ,சிங்கம்,நாகம்,,மான்,
என அனைத்தும் இறைவன் வாகனங்களே.
இவைகளால் தான் இயற்கை சீற்றமோ.?
வறட்சியோ?பூகம்பமோ/?எரிமலையோ?சுனாமியோ?
இதனால் தான் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
என கூறப்பட்டுள்ளதோ..?
மனிதனின் துயரங்களுக்கு
 இயற்கையே காரணமோ?
அதனால் தான்

இயற்கையோடு இணைந்து வாழுங்கள்,
என
நமது முன்னோர்கள் அறிவுரையோ?






 .


e

கருத்துகள் இல்லை: