வியாழன், நவம்பர் 17, 2011

(tamil)education for human excellence

மனிதன் சிறப்பிற்கு கல்வி.

 "மனிதன்" என்ற சொல்  மற்ற விலங்குகளுக்கு ஒப்பானது."மனிதன்"என்ற சொல் ஆதிவாசி மனிதனையும் குறிக்கும்.கல்வி அறிவற்ற மனிதனையும் குறிக்கும்.கல்வியில் சிறந்தவர்களையும் ,மகான்களையும் ,ஆன்மிகவாதிகளையும்,அவதார புருஷர்களையும்,குறிக்கும்.மண்-மனிதன்,Human  =மனிதனுக்குரிய என்ற சிந்தனையால் தான் "மனிதனை மனிதனாக்கும் கல்வி, என்ற கருத்து உருவானது.அதைப்பற்றி சிந்தனைகள் ,கருத்தரங்கங்கள் ,ஆய்வுக்கட்டுரைகள் ,
எழத்தொடங்கி ஏற்றமடைந்த மனநிறைவின்றி அலைகள் ஓய்வில்லாமல்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

மனிதனை மாமனிதனாக ஆக்கவும் ,மெருகூட்டவும்,மேதை ஆக்கவும்,மையலில் காக்கவும்,மொய்ம்புடையவனாக்கவும்,(வலிமை)

மோக்ஷமடையவும்,மௌனமாக இருக்கவும் கல்வி உதவுகிறது.


இத்தகைய கல்வியை எப்படி வழங்குவது?மனிதனை எவ்வாறு மனிதனாக்குவது?மனிதத் தன்மையை,எவ்வாறு முற்றிலுமாக உணரச்செய்வது/?அவனை வீட்டிற்கும் ,நாட்டிற்கும்,சமுதாயத்திற்கும்,மனித இனத்திற்கும் ,பூவுலகிற்கும்,நன்மை தரத் தக்கவனாக,பயனுள்ளவனாக,உருவாக்குவது?என்ற வினாக்கள் இந்த அறிவியல் காலத்திலும் ,கவிஞர்களாலும் ,சித்தர் களாலும்,அனுபவ பூர்வமாகக்
 அறிவுறுத்தப்பட்டு  முடிவின்றி சென்றுகொண்டே இருக்கின்றன.

காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தால் பல புதிர்களுக்கு விடைகள் புலப்படும்.சமுதாய அமைப்பின் படி ,தட்ப வெப்ப நிலையின் படி ,நாட்டின் இயற்கை  வளங்களுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் ,பின்னேற்றம் ,அமைதியான எண்ணங்கள் ,அஹிம்சை,உண்மை,ஆன்மிகம் ஆகியன மிளிர்கின்றன.
  "கல்வி" என்பது மனிதனை மனிதனாக்குகிறது.அவன் காட்டிலேயே மற்ற விலங்குகளுடன் வாழ்ந்தால் அவனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு இருக்காது. அவனுக்கு  மொழி தெரியாது.அவன் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.இறையாண்மை பற்றிய சிந்தனைகள் வராது.உணவுப்பண்டங்களை பக்குவப்படுத்தி வேகவைத்து உண்ணத் தெரியாது.அவனை நெறிப்படுத்த ,குணசீலனாக்க  நீதிநெறியுடன்  கூடிய உயர்
கல்வி அவசியமாகிறது.

கருத்துகள் இல்லை: