தீபாவளி
தீபாவளித் திருநாள்
இருண்ட இரவை ,
ஒளி பெறச் செய்யும்,
பெற்றோர் பெரியோர்களை,
வணங்கி ஆசிபெற
வழிகாட்டும்,
ஆனந்தப் பெறு நாள்.
சுற்றத்தார் நண்பர்கள் கூடி,
இனிப்புகள் வழங்கி ,
இனிமை தரும் ,
இணையற்ற திரு நாள்.
தீபத் திருநாள்.
வறியவர்கள் வீட்டிலும்,
வளம் தரும்
மகிழ்வு தரும்
திருநாள்.
அரசு ,அரசு சார்ந்த
தனியார்,தொழிலாளர்களுக்கு,
ஊக்கத்தொகை,
வழங்க காரணமாகும்
உற்சாகத் திருநாள்.
தீயவைகள் தீயில் ,
கருகும்
,தீ ஒளியில்,
தீமை இருள் ஒழியும்
அறம் வளரும்,
மறம் வளரும்,
என்பதை உணர்த்தும்,
உணர்ச்சி பொங்கும்,
தீபத் திருநாள்.
வெடிகளின் சத்தத்தால்,
வான வேடிக்கை ஒளியால்,
வேடிக்கை பார்த்து
,கவலைகள் மறந்து,
களிப்பூட்டும் திருநாள்,
தீபத் திருநாள்.
தீபாவளித்
திருநாள்.
நல்லவர்கள் மகிழ
நாராயணன் காட்டிய வழி
நரகாசுரனை அழிக்க
சக்தியாக,சத்யா பாமாஉடன்,
கிருஷ்ணன் வந்து
பெண்ணின் பெருமை
காட்டும் திருநாள்.
ராமனையும் கிருஷ்ணனையும்
நினைத்து,
வடநாட்டினரும் தென்னாட்டினரும்,
கொண்டாடும் ,
அகண்ட பாரதத் திருநாள்.
தொழில் வளர்க்கும்,
வணிகம் வளர்க்கும்,
வளம் கொழிக்கும் திருநாள்.
வணிகம் என்றால்,
எண்ணெய் ஆடைகள்,
பலசரக்கு,பலகாரம் என,
பல்தொழில்
தொன்மைத் திருநாள்.
தையல்,திரைப்படம் என,
தொழில் வளர்த்து,
தோழமை வளர்த்து,
தோள் கொடுக்கும்
திருநாள்
.தொன்மைத் திருநாள்.
தீபாவளித் திருநாள்.
*********************************
*********************************
*********************************
.
,
,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக