கணேசன் :
தும்பிக்கையானை ,கைலாயநாதன் தனயனை,
நம்பிக்கையால் தொழுதால்,நாடும் நலம் பெறுவோம் நாம்.
கந்தன்
காலசம்ஹாரன் தனயனை,
கந்தனை,வெற்றிவேலனை,
வினை தீர்ப்பானை,வேண்டினால்,
வேண்டும் வரம் பெறுவோம் நாம்.
சிவன்
உலகநாதனை, உமையாள் பதியை
ஆதி இறைவனை ,ஆனந்த தாண்டவனை,
உண்மையுடன் உளம் உவந்து,வேண்டினால்,
உரிய வரம் உறுதியாக பெறுவோம் நாம்.
வெங்கடாசலபதி
கலியுக தெய்வம் ,கந்தன் மாமனை .,மலை போல் மேனியனை,லக்ஷ்மி காந்தனை,பால் வண்ணனை,திருமலை நாதனை,
தியானம் செய்தால்,தித்திக்கும் வளம் பெறுவோம் நாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக