உபநயனம் என்பது ஷாஸ்த்ர ரீதியான ஒரு தொழில் செய்வோருக்கான புனித சடங்கு.முற்றிலும் அலௌகீகம் சம்பந்தப்பட்டது. ஆனால் அதில் அலௌகீகத்தை புகுத்தி ஒரு நாடக மேடை ஆக்க காலம் தாழ்த்தப்படுகிறது.
ஒருசிறிய ஆடம்பரமற்ற சடங்கு உரிய வயதில் செய்யவேண்டியது ,சிலர் திருமணத்திற்கு முதல் நாள் பரிகாரச் சடங்கு போல் செய்து பூணல் அணிந்து கொள்கின்றனர்.
ஏன் இந்த தாமதம் ?அந்த குழந்தைக்கு தெய்வீக அருள் பெற மந்திரங்கள் சொல்ல ஆடம்பரமற்ற முறையில் செய்யலாமே?
இதற்கு பெரிய மண்டபம்,உற்றார் உறவினருக்கு ஆடைகள் ,சீர் பக்ஷணங்கள் ,என்று வெளி ஆடம்பரத்தாலேயே இந்த புனித சடங்கு தாமதமாகி வெறும் சடங்காகி அந்த நியம அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்காமல் "எங்கே பிராமணன் "என்ற நிலைக்குசெல்கிறது.
கலைச் சிற்றுண்டி ,மதிய சாப்பாடு ,சத்திரவாடகை ,கிட்டத்தட்ட ஒன்றரை லக்ஷம் இன்றைய விலைவாசியில் . இதில் ஜவுளி வன்ற வகையில் பெண்கள் அவா ஆத்துலே ,அதுதாண்டா நம்ம கிச்சான் அவ அம்மாவுக்கு ஐயாயிரம் பட்டுப்புடவை.எனக்கு உன் தங்கைகளுக்கு அதற்கு குறைவா எடுத்தா நல்லாயிருக்காது. வந்தவாளுக்கு பக்ஷணம் ---மகன் தலை சுற்ற பட்டியல் நீள முடிவில் உபநயனம் கடன் வாங்கிசெய்து அதையே திட்டு ஏண்டா ,
சந்தியா வந்தனம் செய்தா? அப்பொழுது பையனுக்கு எதிராத்து சந்தியா நினைப்பு.
உண்மையில் நம் சம்பிரதாயங்கள் தடைபட நாம் நாமாக செய்யும் லௌகீக ஆடம்பரமும் ,வீணாக செலவு இழுத்துவிடும் சுற்றமும் இரத்த உறவும். படோ டோப
ப்ஹயந்கரஹ .நாம் நமக்கு நல்ல அனுஷ்டானங்கள் வேண்டுமென்றால் இந்தாடம்பர லௌகீகம் குறைத்து நாமும் மகிழ்ச்சியாக கடன் இன்றி வாழ ஊர்ப் பெருமைக்கு இந்த உபநயனம் செய்யக்கூடாது.இதை குறிப்பாக தாய்மார்கள் உணரவேண்டும்.அலௌகீகமாக சாஸ்த்ரீய முறைப்படி செய்தால் போதும். ஆத்ம திருப்தியுடன் ஆனந்தமாக சுபஷ்ய சீக்கிரம் என்று செய்து உபனயனசன்ஸ்கார மகத்துவத்தை உணர்த்தலாம்.வேத விற்பன்னர்களும் இதற்கு அதிக கட்டணம் வேறு.நாமே லக்ஸ்மி தேவிக்கு முக்கியத்துவம் அளித்து சம்பிரதாயங்கள் அழிய காரணமாக மாறிவருகிறோம்.