இறைவன் இருக்கிறான் இந்நில உலகில் ,
இறைவனின் பெயரால் ஏமாற்றுவோர் ,
ஏராளமானோர் கோடிகள் சம்பாதிக்கும் கேடிகள் பலர்.
வெளி வேசத்திற்கு மயங்கும் இறையன்பர்கள்,
அப்பாவி பக்தர்களை ஏமாற்றும் அப் பாவிகள்
அறிந்தும் இதுவும் இறைவனின் திருவிளையாடல் என்றே -தங்களை
அர்ப்பணித்து காணிக்கை செலுத்தி ,பரிகார பூஜை ,
ஆயிரமாயிரம் லக்ஷம் லக்ஷம் சிலவு செய்தால் தீருமாம் பாவம்.
லக்ஷத்திற்கும் பட்டுப்புடவை பட்டுவேட்டிக்கும் எரிக்கும் வேள்விக்கும்
பாவிகளின் பாவம் போகும் என்றால் ,பகவானின் அருளை
பாரினில் ஏற்றால் ,நியாயம் எங்கே ,
அதுதான் எனக்கு புரியாத புதிராகும்.
தங்கக்கிரீடம் , வைரக்கிரீடம் கோடிகள் ஊழலில்
தங்கமென அவர்கள் வாழ்க்கை ஜொலிக்கும் எனில்
அங்கமென வாழ்க்கையில் பக்தி தேவையா?
அது எனக்கு புரியாத புதிராகும்.