குரு -சிஷ்யன்
ஒரு முறை ஒரு குருவும் சீடனும் வெளியில் சென்றனர்.
செல்லும் வழியில் ஒரு வயல் வெளியில்
ஒரு செருப்பு ஜோடி இருந்தது.
ஏழை விவசாயி வயல் வேளையில் ஈடுபட்டிருந்தான்.
சீடன் பணக்காரன்.
அவன் குருவிடம் இந்த செருப்புகளை ஒழித்து வைத்து வேடிக்கை பார்க்கலாம் என்றான்.
குரு,இதை ஒழித்து வைத்து வேடிக்கை பார்க்கவேண்டாம்.
இதற்குள் சில நாணயங்கள் வைத்து வேடிக்கை பார்க்கலாம் .
அது அவனுக்கு உதவியாக இருக்குமென்றான்.
சிஷ்யனும் அவ்வாறே சில நாணயங்களை செருப்பில் வைத்தான்.
விவசாயி வேலை முடித்து செருப்பு அணிய வந்தவனுக்கு வியப்பு.
அவன் கடவுளுக்கும் அந்த விவசாயிக்கும் நன்றி கூறினான்.
என் நோயாளி மனைவிக்கு உதவ இந்த நாணயங்கள் பயன்படும்.
இதை வைத்தவர்கள் நீண்ட நாள் சுகமாக சீரும் சிறப்புடன்
வாழ அருள் புரிவாய் ஆண்டவா!என்று வேண்டினான்.
இதைக்கேட்ட சிஷ்யன் மிகவும் அகமகிழ்ந்தான்.
மற்றவர்களை இன்னல்படுத்தி மகிழ்பவனைவிட
உதவி செய்து மகிழ்வது தான் பேரானந்தம் தருவது .
இந்த ஆனந்தத்தை குரு சிஷ்யனுக்கு உணரவைத்தான்.
சிஷ்யன் ==சீடன்.