வெள்ளி, ஜூலை 06, 2012

education struggle??!!!கல்வி நிறுவனங்கள் கட்டணம் குறித்துப் போராட்டம் தேவையா??/?!!!!

!!!கல்வி நிறுவனங்கள் கட்டணம் குறித்துப்   போராட்டம் தேவையா??/?!!!!


  1. தனியார்  பள்ளிகள் ,அரசுப்பள்ளிகள் ,கட்டணங்கள் குறித்துப் போராட்டங்கள் தேவையா?
  2. சிற்றூர்,,பேரூர்களில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பது ஏன் /?
  3. பல அரசுப்பள்ளிகள்,,அரசு உதவி பெரும் பள்ளிகள் மூடப்படுவதன் காரணங்கள் என்ன என்ன..?/
  4. ஒவ்வொரு ஆண்டும் அரசும்,,எதிர்க்கட்சிகளும் இதைப்பற்றி பேசுவது,,குழு அமைப்பது,,போராடுவது,,தனியார் பள்ளி பெற்றோர்கள் போராடுவது....நடை முறை எப்பொழுதும் போல்..இது பல ஆண்டுகளாக நடைபெறும் கேலிக்கூத்து..
  5. அரசாங்க தேர்வு முடிவுகள்..மறு கூட்டல்..தவறுகள்..ஆசிரியர் மீது நடவடிக்கை..
  6. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் என்றும் ,தேர்வுத்தாள் மதிப்பீட்டில்,,அவர்கள் பொறுப்பு குறைவு..அவர்கள் நிரந்திரப்  பணியாளர்கள் அல்ல..
பொதுமக்கள்  தனியார் பள்ளிகளை விரும்புவதன் காரணம் என்ன..?

அரசுப்பள்ளிகள் ஏழை--எளிய மாணவர்களுக்கு..

மெட்ரிக் பள்ளிகள் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு..

சி..பி..எஸ் சி..பள்ளிகள் உயர்வருவாய் மற்றும் வசதி உள்ளவர்களுக்கு..


பண வசதி இல்லாமல் கடன் வாங்கி தன்  குழந்தைகளுக்கு தக்க கல்வி தர முயற்சிப்பவர்கள் நிலை தான் மிகவும் பரிதாவத்திற்கு உரியது..

வீட்டுவாசலில் பள்ளிவகனத்தில் செல்லும் குழந்தைகள்,,
குறைந்த எண்ணிக்கை மாணவர்கள் .பத்து மாண வர்களுக்கு  ஒரு வகுப்பறை,
ஒரு ஆசிரியர் என்ற ஐ..சீ..ஐ..சி..ஐ..பள்ளிகள்..
குளிர்சாதன வசதியுள்ள வகுப்பறைகள்,,
,,கணினிவசதிகள்,,

நிழல் மட்டுமே படும் பள்ளிகள்..

மேற்கண்ட  பிரிவுகளைப் பற்றித் தெரிந்தால் இந்த  கட்டண ப்போராட்டம் வீண் என்பதும்
அரசாங்கம் ,ஆளும் கட்சியினர்  ,எதிர்க்கட்சியினர் ,சுயநல போராட்டக் குழுக்கள்
என பொதுமக்களை ஏமாற்றும்
கோஷங்கள்..முழக்கங்கள்..
அரசுப் பள்ளியை அனைத்துப்பிரிவினரும் ஆதரிக்கும்  நிலை
ஏற்பட்டால் ஒழிய இது வெறும் ஏமாற்று நாடகமே..
அது  இந்தியா போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட,,
பணமுள்ளவர்களுக்கே வாக்குகள் என்ற நாட்டில்
நடை முறைக்கு ஒவ்வாது என்பதே வெளிச்சம்..

புதன், ஜூலை 04, 2012

6.Why the Hindus voice differs? Why there is no one voice Part-6




  "எல்லோருக்கும்  நல்ல  அறிவைத் தர வேண்டும்"  என்ற  ரகுபதி  ராகவ

ராஜாராம்   என்று பஜனைப்பாடல் பாடி மறைந்த தேசத்தந்தை  மற்றும் தேச

 விடுதலைக்காக போராடிய பல புகழ் பெற்ற தலைவர்கள், விடுதலை என்ற

 சிகரத்தில் கொடி ஏற்றி பறக்கவிட்டு, அதன் அடிக்கற்களாய் அடையாளம்

தெரியாமல் இருக்கும் தொண்டர்கள் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையுமா

 துன்புறுமா?

நமது நாட்டில் படையெடுத்து  வராதவர்  கிடையாது.

மங்கோலியர்,கிரேக்கர்கள்,,பிரான்ஸ்,,டச்சு ,ஆங்கிலேயர்கள்,,முகலாயர்கள்..

இவர்களுக்கு  உள்ளே வர உதவியவர்கள் யார்//?

சந்திர குப்தர்  காலத்தில் இந்திய கிரேக்க திருமண உறவு ஏற்பட்டது.

பின்னர் அரசியலில் பல நாட்டு ரத்த பந்தங்கள் அறிந்தும் அறியாமலும்


ஏற்பட்டு மனித உறவு  இன ,மொழி,,நாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதை

இன்றுவரை( ராஜீவ்ஜி ) உறுதி படுத்தி உள்ளோம்..


விடுதலை அடைந்து 65 ஆண்டுகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை
 என்றாலும்  பல ஊழல்கள், தடைகள், சுயநலமிகள், சுவிஸ் வங்கி

கருப்புப்பணம், பத்திரப் பதிவு அலுவலகங்களில்,போக்குவரத்து 

காவல்துறையினர் சிலரின், நீதித்துறையில், கல்வித்துறையில், 

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள் 

 இறைவனின் மீதே ஐயப்பட வைக்கும் நிகழ்ச்சிகள்.

 இதற்கிடையில் நாடு முன்னேறிக்கொண்டு தான் உள்ளது..

நாட்டைத்துண்டாட நினைக்கும் கும்பல்,

 தீவீரவாதம், தேர்தல் என்பது பணசாம்ராஜ்யங்களுக்கு ,

ஊழல்களுக்கு கிடைக்கும் வெற்றி யாகவே கருதப்படுதல்,

 கை ஊட்டு கொடுத்தல், பெறுதல் பாவம் என்ற நிலை மாறி

அவை நியாயப்படுத்தப்பட்டு அவை இருந்தால்தான் வாழ்க்கை

என்ற நிலைமாறிய  நியாயம்..

 நீதித்துறையில் ஏழைகளுக்கு உடனடி தண்டனைதான்..

ஒருவர் இடத்தில் மிக தைரியமாக ஆக்கிரப்பு செய்து வீடு கட்டலாம்.

.சிவில் வழக்கு. இழுத்துக்கொண்டே செல்லும். தீர்ப்பு வராது.

ஏழையின் இடத்தை, கோவில்  இடத்தை, பொது இடத்தை,ஆக்கிரமிக்கலாம்..

போக்குவரத்துக்காக  சாலை அகலப்படுத்த முடியாது.  அரசியல் வாதிகள்,

பணமுதலாளிகள்  செல்வாக்கு இருந்தால், அதிகாரிகள் உடன் இருந்தால் போதும்.


ஒரேகுரல் எப்படி ஒலிக்கும்..

   1.அண்ணா வாழ்க. நாமம் வாழ்க.. நான் தி..மு..க..அண்ணாவின் கொள்கை , அண்ணாவின் ஆட்சி --எனது குறிக்கோள்..


   2.அண்ணா  நாமம் வாழ்க..புரட்சித்தலைவர் வாழ்க;;அண்ணாவின்
ஆட்சி ,அண்ணாவின் கொள்கை  எங்கள் கொள்கை..அ ..தி..மு..க.

    3.அண்ணா   எனது உயிர்..அண்ணா வின் கொள்கை என் மூச்சு..ம..தி..மு..க..

     4.அண்ணா  அண்ணா..அண்ணா பெயரில் ஆட்சி மலரும்..--.தே..-தி..மு..க.

 நாமம் அண்ணா.

பாட்டாளிகள் மு..க..பாட்டாளிகளுக்காக;;வன்னிய சமுதாயத்திற்காக .வாழ்க
அண்ணா..வாழ்க  திராவிட கட்சிகள்..வாழ்க கலைஞர்..வாழ்க அம்மா..வீழ்க திராவிடக்கட்சிகள்.....வாழ்க தேசீய கட்சிகள்..புரியலை ....

தேசீய கட்சிகளிலும் இதே நிலை..

ஒரே மதம்..பல சம்பிரதாயங்கள் .தன்  தன்  மரியாதை,,புகழ் ப்ரதானமாக்கும்
செயல்கள்..

ஒரே  தலைவர்..
 
பல  தலைவர்கள்..

எப்படி ஒலிக்கும்  ஒரே குரல்...........மதத்திலும்  இல்லை..தேசீய மொழி
கொள்கையும்  இல்லை.
அரசியலி லும் இல்லை.
.சைவம்--அசைவம் என்ற உணவிலும் இல்லை..
 ஒரே குரல்  எப்படி  ஹிந்து மதத்தில் ஒலிக்கும்..
  எப்படி ஐயா ஒரே குரல் ஒலிக்கும்..

5..Why the Hindus voice differs? Why there is no one voice Part-5

ஹிந்தியில் பக்தி காலத்திற்குப்பின்,   முகலாய- இந்துக்கள் ஒற்றுமைக்குப்பின், ஆனந்தமான  மக்கள்

       


        சிருங்கார ரச,பொழுதுபோக்கில் ஈடுபட்டனர்.

"கண்டதே கோலம் கொண்டதே காட்சி "என்ற நிலையில் சூதாட்டம்,

மது,,மாது என்ற கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.

.நாட்டைப் பற்றிய எண்ணம் குறைந்தது.

கிருஷ்ணனும் ராதையும் இறைவன் நிலையில் இருந்து

இறங்கி  காதல் லீலைக்காக வர்ணிக்கப்பட்டனர்.

..இந்த ரீதி காலத்தின்  முடிவில்  ஆங்கிலேயர்  இங்கு வாணி கத்திற்காக

  வந்து ஆட்சியாளர்களாக மாறினர். இந்தியாவின் தனிதனி நாடுகள் ,சமஸ்

தானங்கள் ஆங்கிலேயர்கள் வேரூன்ற வசதியாக அமைந்தன.

.பல சட்டங்கள்,,போர்கள்,,பிரித்தாளும் சூழ்ச்சி,,வாரிசுரிமை சட்டம்

போன்றவற்றால் நாட்டின் ஆதிக்கம் ஆங்கிலேயர் கைக்கு சென்றது..

இந்நிலையில் ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர் திருத்த வாதிகள்

 தோன்றினர்.விதவா மறுமணம்,,உடன் கட்டை ஏறுதல்,பாலர் விவாஹம்,,

போன்ற சீர் திருத்தக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

.பெண்கள் கல்வி ,பெண்கள் முன்னேற்றம் ,ஹரிஜன ஆலய ப்ரவேசம்,

பொதுக்கிணற்றில் வேறுபாடின்றி தண்ணீர் எடுத்தல் போன்ற காந்தீயக்

கொள்கைகளை  ஜமன்லால் பஜாஜ்,,ராஜாஜி..ஈ..வே..ராமசாமி நாயக்கர்

போன்றோர் பெருமளவில் ஆதரித்து வெற்றிகண்டனர்..

மகாத்மா ஹிந்து--முஸ்லிம் ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டார்..

ப்ரார்த்தனைப்பாடலில் -हिन्दू -मुस्लिम - सीख- ईसाई ,आपस में है भाई -भाई என்றும் ,

ஈஸ்வர அல்லா தேரே நாம் சப் கோ சன்மதி தே பகவான் என்றும்

ஒற்றுமைக்காகவே தன்  உயிரையும் நீத்தார்..(தொடரும்)) 

செவ்வாய், ஜூலை 03, 2012

4..Why the Hindus voice differs? Why there is no one voice Part-4

ஒரே குரல் 

கபீர் தாசரின்  ஞானமார்க்கம் , ராமநாமத்தைக்கூறினாலும் ,
 அது அருவ வழி பாட்டில் உறுதியாக இருந்தது..


கல்லின் உருவத்தை வழிபட்டால்

 இறைவன் கிடைப்பான் எனில்

 நான் மலையை  வைத்து   வழி  படுவேன்.

.திருகைக்கல்  (மாவு இறைக்கும் இயந்திரம்))
 வழிபட்டால்
 மாவு கிடைக்கும்
.கல்லின் உருவ வழிபாட்டால்
 என்ன கிடைக்கும் ? என்பார்..


நான்கு புஜம் கொண்ட இறைவனை அனைவரும் வழிபடு கின்றனர்.

.சாதுக்களும் சன்யாசிகளும் அந்த நான்கு
 புஜ இறைவனில்
மெய் மறந்து இருக்கும் போது

  கபீராகிய நான் வழிபடும்
  இறைவனின் கரங்கள் எண்ணிக்கையிலடங்கா..என்பார்..

இந்த ஞானமார்க்கம்  பக்தி மார்கமாக  வழிகாட்டும் நேரத்தில்,

 சூபி  சாதுக்களால் இறைவனை அடைய அன்பு மார்க்கம் தோன்றியது..

அதில் இந்துகளின் காதல் வீர தீரங்களின் கதைகள் ,போராட்டங்கள்

வர்ணிக்கப்பட்டு  அவ்வாறே இறைவனின்  மீது காதல் கொண்டு

 இறைவனை வழிபட வேண்டும்

என்றும்
  அன்பே /காதல் வயப்படுவதே இறைவனை அடையும்
 மார்கமாக வலியுறுத்தப்பட்டது..

அருவ வழிபாட்டில் மனிதநேயம் ,மத ஒற்றுமை வலிவுறுத்தப்பட்டது .

கபீர்தாசர் இந்து முஸ்லிம் இரு தர்மங்களின்

 மூட வழக்கங்களை கண்டனம் செய்தார்..

மசூதியில் குரான் அதிக ஓசையுடன் ஓதினால் இறைவன்

செவிடாகிவிடுவான்..

அமைதியாக தொழ வேண்டும் என்கிறார்.

தலையை மொட்டை அடிப்பதால்  இறைவன் அருள் கிட்டும் என்றால்

 முதலில்  செம்மறி ஆடுகளுக்கே கிட்டும்;;

அவை தான் தன ரோமங்களை ஆடை

 அளிப்பதற்காக  அடிக்கடி மழி த்துக்கொள்கிறது .

இந்த பக்தி மார்க்கம் வழி  காட்டும் நேரத்தில்
 இந்துக்களின் உருவவழி பாடு
முக்கியத்துவம் அடைந்தது.
.அதில் கருத்து வேறுபாடு தோன்றியது..

மரியாதை புருஷோத்தமன் ராமனை வழிபடும்  ராம மார்க்கம்..

உலக ரக்ஷகன் என்ற முறையில் பிரபல மடைந்தது..

துளசிதாசரின் ராமசரிதமானஸ்  மக்கள் புரியும் அவதி மொழியில்


எழுதப்பட்டதால்
  மூல  நூலான வால்மீகி  ராமாயணத்தை விட புகழ் பெற்றது.

.ஒவ்வொரு இல்லத்திலும் துளசிராமாயணம் பக்தி சிரத்தையுடன்

படிக்கப்பட்டது.
.அவர் எழுதிய ஹனுமான்  சாலீசா ப்ரத்யக்ஷ பலன் தரும்

உடனடி  இன்னல்  போக்கும் ஜப நூலானது.
.
அந்த பக்திகாலத்தின் மற்றொரு மார்க்கம் கிருஷ்ண பக்தி மார்க்கம்
.
.அதன் கவிஞர்  சூர்தாஸ்  கிருஷ்ணனின் பால லீலைகளின் வர்ணனையால்

கிருஷ்ண பக்தியை பிரபலப் படுத்தினார்..அவர் வ்ரஜ  மொழியில் எழுதிய

சூரசாகர்  மிகவும் பிரபலம் அடைந்தது..இதில் பகவான் கிருஷ்ணர்

லோகரஞ்சகராகவும்,லோகரக்ஷகராகவும் வர்ணிக்கப்பட்டார்.

இருமனைவிகள் கொண்ட கிருஷ்ணனை கோபிகள் அதிகம்

விரும்பினர்.

.இப்பொழுதும் பெண் பார்க்கும்  பொழுது அதிகமான பெண்கள்

பாடுவது  அலைபாயுதே கண்ணா  என்ற பாடலே.

.கோபிகளுடன் கிருஷ்ணன் செய்யும் லீலைகளால்

 ராம பக்தியை விட கிருஷ்ணனை அனைவரும் விரும்பினர்.
.
ராமர்  தன்  மனைவி  சீதையை அக்னி பரீக்ஷை செய்தும்

காட்டிற்கு அனுப்பியதும் , இல்லற வாழ்க்கையில்

 திருமண நிகழ்ச்சியில் " சீதா கல்யாண

 வைபோ கமே"  என்று பாடினாலும்,

 ஆஷிர்வாதம் செய்யும் பொழுது

ராமர் போன்று குழந்தை பிறக்கவேண்டும் என்று கூறப்படுவதில்லை..

கிருஷ்ணா விக்ரகம் போன்று  அழகான குழந்தை என்றே கூறுகின்றனர்..

சக கிழத்தி இருப்பது ஆண்மையின் லக்ஷணமோ?

ராமநாவமியைவிட கிருஷ்ணா ஜெயந்தி  பிரபலம்..
(தொடரும்))




3.Why the Hindus voice differs? Why there is no one voice Part-3

   
       
      இந்துக்கள்   ஒரே குரலில்  இணைவதில்லை என்ற ஆதங்கம் பலருக்கு உள்ளது.
அதில் ஹிந்தி இலக்கிய வீர காப்பியகாலம் பற்றி
 சென்ற தொடரில் எழுதி இருந்தேன்.

அரச குமாரிகளை   அபகரிக்க போரிட்டகாலம் .

அதற்கேற்ற இலக்கியங்கள் அதிக அளவில் தோன்றின.

 நாட்டைப்பற்றி,சமுதாயத்தைப்பற்றி  கவலைப்படாத

மன்னர்கள்,சேனாபதிகள்,போர்வீரர்கள் தன்  வீரத்தை,அரிய

உயிரை  இழந்தனர்.அழகிய பெண்களுக்காக பயன்படுத்தினர்.

காதல் என்பது நாட்டின் நலத்தை மறைத்த காலம்.

மேற்கண்ட சூழலில் முகலாயர்கள் படை எடுப்பால்

 இந்திய மன்னர்கள்  பதவி  இழந்தனர்.

வறுமை நிலை ஏற்பட்டது.அரசர்கள் வீரத்தைப் புகழ்ந்தால்

உணவு கிடைக்க வழியில்லா புலவர்கள் இறைவனை சரணடைந்தனர்.

ஹிந்தி  இலக்கிய வரலாற்றில் பக்தி காலம்  பொற்காலம்  ஆகியது.


ஆனால் ,முகலாயர்கள் வந்ததால் பக்தி  இலக்கியங்கள்  இரு முக்கிய

பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.

 பக்தி இலக்கியம் (1) உருவ வழிபாடு,(2)அருவ வழிபாடு

 என இரு பிரிவுகளாக பிரிந்தது.

அதற்கென தனிதனி அணிகள் தோன்றின.

அருவ வழிபாட்டில் இருவேறு கருத்துக்கள் வேற்றுமைகள் உண்டாகின.

அறிவிருந்தால் ஆண்டவனைக் காணலாம் என்ற ஞான மார்க்கம்.
.
அன்பினால் ஆண்டவனைக்காணலாம்  என்ற  அன்பு மார்க்கம்.

இதில் ஞான மார்க்கம் தோற்றுவித்த கபீர் தாசர்  பிறப்பால் அந்தணர்

.வளர்ப்பால் முகலாயர்.

.இவர்  அறிவுக்கு முதலிடம் தந்து,
 ஜாதியைஒதுக்கினார்.

பல நூல்கள் கற்ற ஞானியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவனிடம் ஞானத்தைபற்றி  கேட்டு  தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாதியைப் பற்றி கேட்காதீர்கள்.

ஞானம் என்பது கூறிய வாள்  போன்றது.

ஜாதி அந்த வாளின்  உரைபோன்றது.

 உரை சக்தி வாய்ந்ததா/.வாளா.?
உறை    விட்டுவிடுங்கள்
.ஞானம் தான் பிரதானம் என்றார்.
கபீரை பின்பற்றி  ஞானமார்க்க கவிஞர்கள் தோன்றினர்
.
     "பக்தி"     என்பதில் "" அருவமும் உருவமும் ஆனாய் போற்றி"
  என்ற ஹிந்து மதக்  கோட்பாடும்  ஏற்றுக்கொள்ளப்பட்டதே..






(தொடரும்)

திங்கள், ஜூலை 02, 2012

2.why the Hindus voice differs? Why there is no one voice Part-2




ஒரே குரல் ஒலிக்கவில்லை .ஏன் ?


ஹிந்து தர்மத்தில் ஒரே குரல் ஒலிக்காதது ஏன் ?என்று ஒருவர் கேட்டதில்

இருந்து பல எண்ணங்கள்  /சிந்தனைகள் மனதில் தோன்றிக்கொண்டே

இருக்கின்றன.
கோரி முஹம்மது,கஜினி முஹம்மது  படை எடுப் பின்  போது  ஒற்றுமை

உணர்வு இருந்ததால்  பல முறை கொள்ளை அடிக்கப்பட்டாலும் காசி மாநகரம்
காக்கப்பட்டது.

நமது இலக்கியங்கள் ,வரலாறுகள்  நமது நாட்டின் ஒற்றுமை இன்மையை

காட்டுகின்றன.வரலாறு என்பது இன்றைய சூழலில் நம்மை உயர்த்த

,சிந்தனை நமது வீழ்ச்சியின் காரணங்கள் அறிந்து எழுச்சி பெற உதவும்

 காலக் கண்ணாடி.

ஹிந்தி இலக்கிய வரலாறு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
 இலக்கியங்கள்
சமுதாயத்தின் பிரதிபலிப்பாக  விளக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் பிரிவு  வீர காப்பியங்கள்.

வீரகாப்பியங்கள் தோன்றிய காலத்தில் எவருக்குமே நாட்டை பற்றிய

 அக்கறை கிடையாது.கவிஞர்கள்  அரசனை  சார்ந்து   வாழ்ந்தனர்.

அவர்கள் நோக்கமே "உணவு  அளிப்பவர்களின்  உள்ளம் மகிழ  கவிதை பாடுவதே".

அழகிய அரசகுமாரிகளின் அழகை  வர்ணித்து

 அரசனின் வீரம்,வலிமை,சக்தி ,சாகசம் போன்றவற்றைப்

 புகழ்ந்து ,அவன் மனதில்

வீரத்தையும் ,அரசகுமாரிகளின் மீது  மோகத்தையும்

 அதிகரித்து போரிடத்தூண்டுவதே.

மேலும்  ஒரு சிறப்பு புலவர்களே  புரவலர்களின்  படைத் தளபதியாக இருந்ததே.
அரசனின் எண்ணம் முழுவதையும் ,நோக்கம் முழுவதையும் அரசகுமாரியை அடைவதே.
 போர் என்பது நாட்டின் நலனுக்காக அல்ல;

.நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காக அல்ல;

,அழகிய அரசகுமாரியை கவர்வதே.

இந்த இலக்கியங்களுக்கு இடையில் சில பக்தி இலக்கியங்களும் தோன்றின.

அனால் தற்காலம் போன்றே பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம்

கொடுக்கப்படவில்லை.
(தொடரும் )

1.why the Hindus voice differs? Why there is no one voice Part-1


ஹிந்துக்கள்  ஏன்   ஒரே  குரல்  எழுப்புவதில்லை?

           நேற்று  ஒரு நண்பர் ஒன்று சேர்தல் (Get together function) சந்தித்தல் -(விருந்தோம்பல்  என்பதற்கு ஆங்கிலப்பெயர்) நடந்தது.

அதில் ஒருவர்  எழுப்பிய  வினா என்னை சிந்திக்கவைத்தது.

.தமிழ்நாட்டில் கோயில்,ஹிந்து மடாலயங்களில் மட்டும் ஊழல் நடப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால் மசூதியிலும்,மாதகோவிலிலும் ஊழல்
இல்லையா?அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?


இந்து ஆலயங்கள்,மடாலயங்கள்,ஆதீனங்கள்  சிக்கலாகும் போது ஏன் 
இந்துக்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதில்லை ?
சிக்கலான வினா?

விடை அளித்தால்  கோபம் வரக்கூடாது
.மக்களாட்சியில் தங்கள் கருத்தை தெரிவிக்க  கருத்து சுதந்திரம் வேண்டும்.உண்டு.
நமது நாட்டில் உள்ள முஸ்லீம்கள்  யார்?கிறிஸ்தவர்கள் யார்?புத்தர்கள் யார்/?
சமணர்கள் யார்?
அவர்கள்  முன்னோர்கள் சனாதன தர்மத்தைதானே பின்பற்றி இருக்கவேண்டும்.அவர்கள் மதம் மாற காரணம் என்ன?

சுயநலமா?பேராசையா?உயிர் பயமா?அடக்குமுறையா?கட்டாயமா? இருந்தால்  அனைவரும் ஆங்கிலம் கற்பதுபோல் மதம் மாறி இருப்பார்.
இவை   காரணங்கள் அல்ல.

.இவைகளுக்கப்பால்,  ஒரு காராணம் .இந்துக்களால் இந்துக்கள்  அவமானப்படுத்தப்பட்டனர்
.பாரதியாரே அவமானத்திற்கு ஆளானார்.

சுதந்திரப்போராட்ட விநாயகர் ஊர்வலம்
 இன்று கேலிக்கும் பயத்திற்கும் காரணமாகி ,

 பலநாட்கள் உழைப்பு,பணம் முதலியவற்றை  கடலில் கரைத்து ,

இறைவனை  கை கால்  என்று பிய்த்து மிதங்கவைத்து,
 கரையில் ஒதுங்கச்செய்தல் ,
அதன் மேல் மறைவில் நாயும் மனிதனும் மலம்-ஜலம் கழித்தல் '
 எவ்வித  பக்தி?
.இந்த ஊர்வலம் நடத்தும் நாள் !! ஒரு பதட்டமான நாளா?பக்திசிரத்தை யான நாளா?!!!

காவலர் புடை சூழ  உருட்டை கட்டை உடன். எப்பொழுது கலவரம்

வெடிக்குமோ/?குண்டுவேடிக்குமோ  ?
 என்ற அச்சம் வேறு.
அழகு  சிலைகள் சிதைக்கப்படுவது,

  என்  நோக்கில் குரங்கு கையில் கொடுத்த,பூமாலை போல்  அழகு

கலைவண்ணம் மிக்க வினாயகர்களின் சிலைகளை

தூக்குவான் மூலம் கடலில் எறிவது.

அதற்கான   முதலீட்டை ஆக்க பயனுள்ள

பணிகளுக்கு,அரசுப்பள்ளிகளின்  குடிதண்ணீர்,கழிவறை வசதி ஏற்படுத்த

செலவு செய்து சக்திவினாயகர்  திருவிழாவை பக்தர்கள் அழிக்கும்

 நிலைக்கு பயன் படுத்தாமல் ஆக்க பணிக்கு பயன் படுத்தலாம்.

பால கங்காதர திலகர் வெள்ளையனை எதிர்த்துப்போராட,

 மக்களை ஒன்று சேர்க்க விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும்
  என்ற இயக்கம் தொடங்கினார்..
இன்று  அது ஒரு மத உணர்வாக மாற்றப்பட்டு,

 இலட்சக்கணக்கான ரூபாய்கள் கடலில் கரைக்கப்படுகின்றன.

.எனது  கருத்து.

கொந்தளிக்கவேண்டாம்

(தொடரும்)

ORE KURAL OLIKKAVILLAI.en?இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை




இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை.


 ஏன் ?  என்ற வினா


 என் மனதில் பல சிந்தனைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
.
பல ஹிந்து மத சிந்தனையாளர்களையே  குழப்பும் வினா  இது.

சைவம் என்று சொன்னால் அதில் வீர சைவம்.லிங்காயத்து

சம்பிரதாயம்,அகோரர்கள்,நாத் பன் தி ஜோகிகள் .பல மடாலயங்கள்;ஆதீனங்கள்.அவர்களுக்கிடையே போட்டிகள்;பொறாமைகள்.ஒருவர் வளர்ச்சி மற்றவர்கள் தளர்ச்சி.
பின்னர் இன -ஜாதி வேற்றுமைகள்.

வைணவம் என்றால் உயர் நீதிமன்ற யானை நாம வழக்கு  பிரபலம்...வடகலை,தென்கலை.
ஆண்டவன் ஆஸ்ரமம் .
அர்ச்சகர்கள் என்றால் குருக்கள்;வைகாநசர் .இவர்கள் இறைவனுக்கு கைங்கரியம் செய்பவர்கள்.
தனியார் ஆலயங்கள்,அரசின் கீழ் வரும் ஆலயங்கள்,ஜாதிகளின் ஆலயங்கள்,
தன்  சிலையையே வைத்து வழிபடும் ஆலயங்கள்
,தலைவர்களின் மேல் உள்ள பற்றால் ஏற்படுத்தும் ஆலயங்கள்,
ஒருவர் சமாதியின் மேல் காட்டப்படும் சிவாலயங்கள்,கிராமகோயில்கள்,
அதன் பூசாரிகள்,காவல் தெய்வங்கள்,அம்மன் கோயில்கள் அதில் பூசை முறைகள்,அந்தணர்கள்  அர்ச்சகர்கள்.அந்தணரல்லாதவர்கள் கிராமத்து பூசாரிகள்.தெய்வத்தை வழிகாட்டுபவர்கள்  பல்வேறு சங்கங்கள்.

அனைவரும் ஒரே குரலில்  ஒலி  எழுப்ப காலம் கணிந்துவிட்டதா?ஆம்.
நாட்டின் விடுதலைக்குப்பின்  பொருளாதார அடிப்படையில் சோ அவர்களின்
எங்கே பிராமணன் ?? என்ற தொடர் இந்தக்காலத்திய பகுத்தறிவாளர்களின்
அந்தண  வெறுப்பைப் போக்கும்.பரந்த மனப்பான்மையை உண்டாக்கும்.
இப்பொழுது  அக்ரகாரங்கள்  காலியாகி  விட்டன.. அப்படி இருந்தாலும்  வயதானவர்கள்  தான் இருக்கின்றனர்..இளைஞர்கள்  அனைவரும் நகரத்தை நோக்கி அல்லது வெளிநாட்டிற்குப்பயணம் செய்து
விட்டனர் . பல பழைய ஆலயங்களில் வருமானமே இல்லை..பேருக்கு
ஒரு மணிநேரம் திறந்து வைக்கின்றனர்..

புதிய ஆலயங்களுக்கு வரவேற்பு இருப்பது வியப்பில் ஆழ்த்து கிறது..அரசாங்க பள்ளிகள்,அரசு கோயில்கள்  புறக்கணிக்கப்பட்டு  தனியார் கோயில்கள்,தனியார் பள்ளிகள் மக்கள் விரும்பும் வருமானம் வரும் அமைப்புகளாக  மாறிவருகின்றன..



(தொடரும்)

வியாழன், ஜூன் 28, 2012

நீண்ட ஆயுளுடன் ஆரோக்ய வாழ்க்கைக்கு

மனிதன் உழைப்புக்கேற்ற உணவு உண்ணவேண்டும்.கடுமையாக உழைப்பவர்கள் தான் அரிசியை அதிகமாக சாப்பிடவேண்டும்.பொதுவாக 25 வயதிற்குப்பின் கோதுமை அரிசி உணவு சாப்பிடுதல், கிழங்குவகைகள் சாப்பிடாமல் இருத்தல்.  சர்க்கரை அளவு குறைத்தல், பச்சைக்காய்கரிகள் உண்ணுதல், அரிசியால் செய்யப்படும் இட்லி, தோசை, அடை, ஊத்தப்பம் போன்ற வற்றைத் தடுத்தல்  ஆயுளை அதிகப்படுத்தும் என்கின்றனர்.
சர்க்கரை சோதனையில் சிறிதளவு வுயர்ந்தாலும் உடனே சர்க்கரை மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களைத் நாம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் பல நோய்களுக்கும் அடிப்படை.பக்கவாதம்,இதய நோய்கள் மாரடைப்பு,மேலும்  உயிர்க்கொல்லி  நோய்களை அமைதியாக அதிகரிக்கும்  சர்க்கரை நோய்.

இனிப்பு  ஆராம்பத்தில் கொண்டாட்டம் பின்னர் திண்டாட்டம்.  விளைவு -

  • ஆயுள் காலம்  குறையும்.
  • மருத்துவ சிலவு அதிகரிக்கும்.

ஆகையால் கடின உழைப்பில்லா 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோதுமை உணவு சாப்பிடுவது  பல நோய்களைத் தடுக்கும்.


மேலும் வேக நடைப்பயிற்சியும் அவசியம்.  இருபது நிமிடத்தில் ஒரு மைல்  நடக்கவேண்டும்.


இந்தியாவில் ஆரம்பநிலையில் சர்க்கரை நோயை கண்டுபிடித்து கட்ட்ப்படுத்தாததால்  பலர் 60-65 வயதில் இறைவனடி சேர்ந்து விடுகின்றனர்.
ஆகையால்  அரிசிச்சாப்பாடு  குறைத்து ,  நோய்களைக் குறைத்து

கோதுமை  உணவை  உண்டால்  நோய்கள் கட்டுப்படும். ஆயுளை அதிகப்படுத்தும்.

அக்னி குஞ்சு " என்று கூறிய பாரதியார் அது ஒரு காடே பற்றி எரிய
 காரண மாகியது..அவ்வாறே நோய் ஆரம்ப நிலையிலேயே தடுக்காவிட்டால்
உடல் அழிய காரணமாகும்..


ஆலோசனை  மற்றும் அறிவுரை வழங்கியவர் -

DR.RAVI IYYER M.D.,Ph.D;
INTERNAL MEDICINE & PREVENTIVE CURE.
PHONE 703 404 5900
website: www.driyer.com
driyer.novahealth@gmail.com.

democracy is really success .for whom/



கற்பனையில்  கல் கோட்டை கட்டுதல் என்பார்கள் .

மனிதனின் ஒவ்வொரு கற்பனைகளும் கனவுகளும் நிஜமாகிறதா?என்றால்

அது யார்மூலமாவது செயலாக்கப்படுகிறது.

 நமது எண்ணங்கள் கற்பனைகள் எங்கோ யார்மூலமாகவோ நடக்கிறது.

நான் நினைத்தேன் ;அவன் முடித்தான்.அதில் ஒரு மகிழ்ச்சி

 காண்கிறோம்.நமது எண்ணங்கள் ,கற்பனைகள் மற்றொருவர்

வெளிப்படுத்தும் பொழுது ,அது பலரின் எண்ணங்களாக மாறும் பொழுது

கூட்டம் சேர்ந்து அவனை  மஹானாக  மாற்றுகிறது.

சிலர் அவரின் தொண்டனாகிறார்கள்.

 சிலர் நம் கருத்துக்கள் நாங்கள் தானே என்று நாமும்

 அவ்வாறு ஆகக்கூடாதா  என புதிய முறையில் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அதில் வெற்றி அடைபவன் ஒருவனாகத்தான் இருக்க முடிகிறது.

அதனால் தான்  அவர்கள் நிலைத்து அமரனாக்கிய பின் அவன் தொண்டர்கள்

பல கிளைகளாகப் பிரிந்து பல சம்பிரதாயங்களை உருவாக்குகின்றனர்.

அப்பொழுது தான் போட்டி -பொறாமைகள் ,சண்டை-சச்சரவுகள் ஏற்பட்டு

அந்த மஹான்கள்  ஏற்படுத்திய மனித

நேயம்,சமாதானம்,ஒற்றுமை,நேர்மை,சத்தியம்  போன்றவை ஒவ்வொரு

இனத்திற்கும் மாறு படுகின்றன.

பரந்த மனப்பான்மை மறைக்கப்பட்டு  அல்லது மறுக்கப்பட்டு  இன

வேற்றுமைக்கும் ,குறுகிய மனப்பான்மைக்கும் மனித சமுதாயத்தை

பிரித்து  தலைவர்கள்  மட்டும்  சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.

தொண்டர்கள்  தீக்குளித்த வரலாறு உண்டு.

தலைவர்கள் சிறு சிராய்ப்பு கூட இல்லா  இஜட்  பாதுகாப்பில்.
தொண்டர்கள்தான் தடி அடி படுவர்.

இதில் விதிவிலக்கு நமது சுதந்திர போராட்டத் தலைவர்கள்.

ஆனால் நாட்டின் விடுதலைக்குப்பின் ஊழல் செய்த எந்த அரசியல் வாதியும்

தண்டனை பெற்றதில்லை.

ஆனால்  குற்றங்களுக்கான காரணங்கள் ஆராய ஒரு நீதிபதி

.அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை.

அதற்கு பல கோ டிகள்  ரூபாய் சிலவு.


;
.ஆனால்
அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி.மீண்டும் பதவிகள்.

நீதிமன்றத்தில் மட்டும் வழக்கு விசாரணை.ஆனால் தீர்ப்பு எழுதப்படுவதில்லை.

இது தான் மக்களாட்சி.