திங்கள், ஏப்ரல் 16, 2012

சித்தம் தெளிய மருந்து

சித்தம் தெளிய மருந்து

மனம் பித்து பிடித்தது போல் உள்ளது என்பர்

.மனம் தான் மனிதர்களை ஆட்டிவைக்கிறது.
கண்டவற்றின் மேல் ஆசை வைக்கிறது.
கண்டபடி ஆசை கணக்கில்லாமல்
கண்களை கவர்வதால்,சித்தம் கலங்குகிறது,
ஒரு பொருளை வாங்க ,பல மணிநேரம் ,
பலரிடம் விசாரணை,வாங்கிய பின்
அதே மாதிரியான,மற்றோருபொருள்,
கண்டவுடன் மனம் ஏங்குகிறது,
விலை  அதிகம் கொடுத்துவிட்டோமோ,
இன்னும் விசாரித்து  இருக்கலாமோ ,
புத்தாண்டு  சலுகைவி லையில் ,
வாங்கி  இருக்கலாமா என்ற
எண்ணம்,மனம் அலைபாய்கிறது,
இதுவும் தெளிவற்ற நிலை.

ஆலயம்,பிரகாரம்,மந்திரம்,பரிகாரம்,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக்கூறி,
மனதில் தெளிவற்ற நிலை .
ஆலய தரிசனம் முடித்து வந்த பின்
ஒரு உறவினர் அந்தக்கோவில் தெற்கு மூலையில்,
கிழக்கு பார்த்த தூணில் ஒரு சிறு அம்மன் சக்தி உள்ளது,
பார்த்து வணங்கிவரவில்லை என்றால் அந்த ஆலயம்
சென்று வந்த புண்ணியம் கிடைக்காது.
ஆயிரக்கணக்கில் சென்று வந்த புண்ணியம் ,
கிட்டாமல் போய் விடுமா என்ற மனக்கவலை மாமிக்கு.

தெளிவற்ற மனம் பித்து பிடிக்கவைக்கிறது.
 அவ்வாறே மருத்துவ சிகிச்சை.
இந்த  டாக்டரா அவர் கைராசி கிடையாது.
மனக்கவலை மனம் பித்து பிடித்ததுபோல்.


மனம் தெளிவுபெற ஒரே முடிவு ,

ஒரே எண்ணம் ஒரே செயல்.
அதற்கு ஒரே கடவுளை ஏற்று
இறை நம்பிக்கை உடன் செயலாற்றுவது தான்.



தனியார்  பள்ளிகள்/அரசுப்பள்ளிகள்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல உணவிற்கு ஏங்குபவர்கள்.
எழுதுபொருள்.உடை,உணவு,வாகனம்,செருப்பு,அனைத்தும் தரம் இல்லாதவை.

தனியார் பள்ளிகள்
மிக அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
வசதியுள்ள மாணவர்கள்.
கடன் வாங்கி கடன் அடைக்கும் திறனுள்ள நடுத்தரக் குடும்ப மாணவர்கள்.
பணம்படைத்த உற்றார்கள்/நண்பர்கள் உதவியுடன் படிக்கும் மாணவர்கள்.

அரசும் கல்விக்கொள்கையும்

அரசு பள்ளிகள் தரமற்றதாக மாற காரணங்கள்

கல்வி அறிவில்லா பெற்றோர்களின் குழந்தைகள்.
அவர்களுக்கு கல்விநிலையத்தின் சூழல்/வீட்டுச்சூழல் படிப்பதற்கு ஏற்றநிலையில் இல்லாமை.
ஆசிரியர்கள் மன ஈடுபாடு இல்லா பணியாற்றல்.
பள்ளிகளின் வேலை நாட்கள்.
கற்பிக்கும் நாட்கள்+தேர்வு நாட்கள்+அரசுத்தேர்வுனாட்களில் பாதிநாள் பள்ளி
211  நாட்கள்.
அதிலும் தற்செயல் விடுப்பு,எட்டிய விடுப்பு,மருத்துவ விடுப்பு,ஊதியமில்ல விடுப்பு,அலுவrலக வேலை,(on duty)
விழாக்கள்  பணி ,பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு,ஆண்டுவிழா,எதிர்பாரா விடுப்புகள்,

தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது.
நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது.
தியாகம் செய்து கற்பித்தே தீரவேண்டும்.
பெற்றோர்கள் கவனிப்பு உண்டு.தன குழந்தைகள் அறிவுவளர பெற்றோர்களின் ஈடுபாடு அதிகம்.
நிர்வாகம்,தலைமை ஆசிரியர்  தனது பால்லியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
நேரக்கட்டுப்பாடு.
கல்வித்துறை
பாவம் அதிகாரிகள் .அரசு/அரசியல்வாதி/ஏழைமக்கள்/பணக்காரர்கள்/
ஒழுக்கமற்ற ஆசிரியர்கள்/மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக தர்மசங்கடம்/உள்ளூர் .....மிரட்டல்.
தனியார் பள்ளிகளுக்கு பயப்படும் பெற்றோர்கள்/
அரசுப்பள்ளி சட்ட திட்டங்களுக்கு பயப்படுவதில்லை.
நோட்டுப்புத்தகம் அரசு இலவசமாக கொடுத்தாலும் புத்தகம்,
குறிப்பேடு இல்ல மாணவர்களை அரசுப்பள்ளியில் பார்க்க முடியும்.
தனியார் பள்ளியில் பார்க்க முடியாது.

கல்வி என்பது அரசாங்கத்தைவிட பெற்றோர்கள் விருப்பத்தால் தான் முடியும்.
வீட்டில் சோற்றுக்கே வழியில்ல குழந்தைகள்,கட்டாயக்கல்வி ஒரு நேர சத்துணவால் வருமா?
கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் குழந்தை பெறாமல் இருக்க முடியுமா?
சமுதாய நடைமுறையல்  சட்டங்களும் திட்டங்களும் பயன் படுமளவு
கல்வி  தரவேண்டுமென்றால்  ௧௩ வயதிலே அவன் ஏழைகள் அன்றாடங்காய்ச்சிகள்
சம்பாதிக்கும் தொழில் கல்வி தரவேண்டும்.