கற்பனையில் கல் கோட்டை கட்டுதல் என்பார்கள் .
மனிதனின் ஒவ்வொரு கற்பனைகளும் கனவுகளும் நிஜமாகிறதா?என்றால்
அது யார்மூலமாவது செயலாக்கப்படுகிறது.
நமது எண்ணங்கள் கற்பனைகள் எங்கோ யார்மூலமாகவோ நடக்கிறது.
நான் நினைத்தேன் ;அவன் முடித்தான்.அதில் ஒரு மகிழ்ச்சி
காண்கிறோம்.நமது எண்ணங்கள் ,கற்பனைகள் மற்றொருவர்
வெளிப்படுத்தும் பொழுது ,அது பலரின் எண்ணங்களாக மாறும் பொழுது
கூட்டம் சேர்ந்து அவனை மஹானாக மாற்றுகிறது.
சிலர் அவரின் தொண்டனாகிறார்கள்.
சிலர் நம் கருத்துக்கள் நாங்கள் தானே என்று நாமும்
அவ்வாறு ஆகக்கூடாதா என புதிய முறையில் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் அதில் வெற்றி அடைபவன் ஒருவனாகத்தான் இருக்க முடிகிறது.
அதனால் தான் அவர்கள் நிலைத்து அமரனாக்கிய பின் அவன் தொண்டர்கள்
பல கிளைகளாகப் பிரிந்து பல சம்பிரதாயங்களை உருவாக்குகின்றனர்.
அப்பொழுது தான் போட்டி -பொறாமைகள் ,சண்டை-சச்சரவுகள் ஏற்பட்டு
அந்த மஹான்கள் ஏற்படுத்திய மனித
நேயம்,சமாதானம்,ஒற்றுமை,நேர்மை,சத்தியம் போன்றவை ஒவ்வொரு
இனத்திற்கும் மாறு படுகின்றன.
பரந்த மனப்பான்மை மறைக்கப்பட்டு அல்லது மறுக்கப்பட்டு இன
வேற்றுமைக்கும் ,குறுகிய மனப்பான்மைக்கும் மனித சமுதாயத்தை
பிரித்து தலைவர்கள் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்.
தொண்டர்கள் தீக்குளித்த வரலாறு உண்டு.
தலைவர்கள் சிறு சிராய்ப்பு கூட இல்லா இஜட் பாதுகாப்பில்.
தொண்டர்கள்தான் தடி அடி படுவர்.
இதில் விதிவிலக்கு நமது சுதந்திர போராட்டத் தலைவர்கள்.
ஆனால் நாட்டின் விடுதலைக்குப்பின் ஊழல் செய்த எந்த அரசியல் வாதியும்
தண்டனை பெற்றதில்லை.
ஆனால் குற்றங்களுக்கான காரணங்கள் ஆராய ஒரு நீதிபதி
.அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை.
அதற்கு பல கோ டிகள் ரூபாய் சிலவு.
;
.ஆனால்
அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி.மீண்டும் பதவிகள்.
நீதிமன்றத்தில் மட்டும் வழக்கு விசாரணை.ஆனால் தீர்ப்பு எழுதப்படுவதில்லை.
இது தான் மக்களாட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக