செவ்வாய், ஏப்ரல் 25, 2023

அன்பு ? எப்படிக் காட்டுவது?

 அன்பு என்பதை  எப்படிக் காட்டுவது என்பதே 

 புரியுமா? புரியாதா?

 தெரியாது.

 குழந்தை மிட்டாய் கேட்கும். 

 வாங்கித்தரலாம்.

  ஸ்கூட்டர் சைக்கிள் கார் 

வீடு  அனைத்தும் வாங்குவது கொடுப்பது 

பெற்றோரின் அன்பல்ல 

 பெத்த கடன்.

 படிக்க வைப்பதும் கடன்.

 அதையும் மீறி அன்பு என்பது பெற்றோர் காட்டுவதில்லை. அவர்கள் திருமண சுகம்.

 அதனால் தோன்றிய குழந்தைகள்.

 இப்படி பெற்றோர் பெற்று கடமையைச் செய்கிறார்கள். 

 இன்று பெண்கள் மிக அறிவாளிகள். கணவனுக்கு சமைத்து துவைத்துபஅ போடுவதே பெரிய கடமை.

 ஆண்கள்? 

அவர்களின் மன நிலை பற்றி  ? 

 கைகேயியை மகிழ்ச்சி  படுத்த தசரதன் மகனை காட்டுக்கு அனுப்பினார்.

 தசரது மனவேதனையை சோகத்தை கைகேயி அறியவில்லை.

இதுதான் .  அம்மாவை அப்பா பிரியமாக வைத்துக் கொள்ளவில்லை என்பது பெரும்பாலான  குழந்தைகள்  எண்ணம்.

 அப்பாவின் மன நிலை படைத்த பிரம்மாவிற்கே தெரியாது.   

 வள்ளி க்காக முருகன் வேடனாக விருத்தனாக  மாறினாரே ஒழிய வள்ளி என்ன செய்தாள். முருகனை காதலித்தாள்.

 காதலியை அடையதத்தான் போர்.

 மும்தாஜை அடைய ஷாஹ்ஜஹான் கொலை காரணானான்.

   ஆண்டவன் படைப்பில் பெரும் மாயை பெண்கள். அவர்களை மகிழ்ச்சி  படுத்த பல தியாகங்களையும் ஆண்செய்கிறான்.

 என்பதை புரிவது கடினம்.

 ஆணுக்கு திருமணம் ஆனால் அம்மா வீட்டில் பொண்டாட்டி தாசன். மாமனார் வீட்டில் அம்மா  தாசன். அது தான் குழந்தைகள் மனதில் பதிகிறது. அப்பாவின் அம்மா வீட்டை விட அம்மாவின் உறவுகளுக்கு த்தான் உரிமை சலுகை  உதவி அதிகம். உங்கள் தம்பி எனக்கு பெரிதல்ல என்ற  அளவிற்கு  மனமாற்றம்.

வியாழன், ஏப்ரல் 06, 2023

தலைமையின் சரம் வெற்றியை நோக்கி

தலைமையின் சரம் – வெற்றியை நோக்கி


தமிழாக்கம்: திரு. எஸ். அனந்தகிருஷ்ணன்
ஹிந்தி பிரசாரக், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்,
தி ஹிந்து மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை – 600005.


1. பார்வையை மாற்றுங்கள்

மனித நாகரீகத்தின் வரலாறு என்பது பல போராட்டங்களாலும் தேவைகளாலும் உருவான கண்டுபிடிப்புகளும் தீர்வுகளும் கொண்ட வரலாறாகும். மனிதனின் சிறு சிறு கூட்டங்கள் சமுதாயமாக மாறின. சமுதாயங்கள் நாடுகளாக வளர்ந்தன. தங்கள் சிந்தனையாளர்கள், மதகுருமார்கள் வகுத்த நெறிமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வாழ்ந்தன.

இந்த எண்ணங்களும் ஆச்சாரங்களும் அடிப்படையாகவே ஒவ்வொரு நாட்டின் பண்பாடும் உருவானது. நிகழ்காலமும் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்க, மனித சமூகம் தேவைகளை நிறைவேற்றத் திட்டங்களை அமைத்தது.

செயல்முறைகளுக்கு வழிகாட்டவும், குறிக்கோள்களை அடையவும், மேலாளரும் தலைவரும் அவசியம் தேவைப்படுகின்றனர்.