!!!கல்வி நிறுவனங்கள் கட்டணம் குறித்துப் போராட்டம் தேவையா??/?!!!!
- தனியார் பள்ளிகள் ,அரசுப்பள்ளிகள் ,கட்டணங்கள் குறித்துப் போராட்டங்கள் தேவையா?
- சிற்றூர்,,பேரூர்களில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பது ஏன் /?
- பல அரசுப்பள்ளிகள்,,அரசு உதவி பெரும் பள்ளிகள் மூடப்படுவதன் காரணங்கள் என்ன என்ன..?/
- ஒவ்வொரு ஆண்டும் அரசும்,,எதிர்க்கட்சிகளும் இதைப்பற்றி பேசுவது,,குழு அமைப்பது,,போராடுவது,,தனியார் பள்ளி பெற்றோர்கள் போராடுவது....நடை முறை எப்பொழுதும் போல்..இது பல ஆண்டுகளாக நடைபெறும் கேலிக்கூத்து..
- அரசாங்க தேர்வு முடிவுகள்..மறு கூட்டல்..தவறுகள்..ஆசிரியர் மீது நடவடிக்கை..
- அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் என்றும் ,தேர்வுத்தாள் மதிப்பீட்டில்,,அவர்கள் பொறுப்பு குறைவு..அவர்கள் நிரந்திரப் பணியாளர்கள் அல்ல..
பொதுமக்கள் தனியார் பள்ளிகளை விரும்புவதன் காரணம் என்ன..?
அரசுப்பள்ளிகள் ஏழை--எளிய மாணவர்களுக்கு..
மெட்ரிக் பள்ளிகள் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு..
சி..பி..எஸ் சி..பள்ளிகள் உயர்வருவாய் மற்றும் வசதி உள்ளவர்களுக்கு..
பண வசதி இல்லாமல் கடன் வாங்கி தன் குழந்தைகளுக்கு தக்க கல்வி தர முயற்சிப்பவர்கள் நிலை தான் மிகவும் பரிதாவத்திற்கு உரியது..
வீட்டுவாசலில் பள்ளிவகனத்தில் செல்லும் குழந்தைகள்,,
குறைந்த எண்ணிக்கை மாணவர்கள் .பத்து மாண வர்களுக்கு ஒரு வகுப்பறை,
ஒரு ஆசிரியர் என்ற ஐ..சீ..ஐ..சி..ஐ..பள்ளிகள்..
குளிர்சாதன வசதியுள்ள வகுப்பறைகள்,,
,,கணினிவசதிகள்,,
நிழல் மட்டுமே படும் பள்ளிகள்..
மேற்கண்ட பிரிவுகளைப் பற்றித் தெரிந்தால் இந்த கட்டண ப்போராட்டம் வீண் என்பதும்
அரசாங்கம் ,ஆளும் கட்சியினர் ,எதிர்க்கட்சியினர் ,சுயநல போராட்டக் குழுக்கள்
என பொதுமக்களை ஏமாற்றும்
கோஷங்கள்..முழக்கங்கள்..
அரசுப் பள்ளியை அனைத்துப்பிரிவினரும் ஆதரிக்கும் நிலை
ஏற்பட்டால் ஒழிய இது வெறும் ஏமாற்று நாடகமே..
அது இந்தியா போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கொண்ட,,
பணமுள்ளவர்களுக்கே வாக்குகள் என்ற நாட்டில்
நடை முறைக்கு ஒவ்வாது என்பதே வெளிச்சம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக