திங்கள், ஜூலை 02, 2012

ORE KURAL OLIKKAVILLAI.en?இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை




இந்துக்கள் ஒரே குரலில் ஏன் குரல் எழுப்பவில்லை.


 ஏன் ?  என்ற வினா


 என் மனதில் பல சிந்தனைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
.
பல ஹிந்து மத சிந்தனையாளர்களையே  குழப்பும் வினா  இது.

சைவம் என்று சொன்னால் அதில் வீர சைவம்.லிங்காயத்து

சம்பிரதாயம்,அகோரர்கள்,நாத் பன் தி ஜோகிகள் .பல மடாலயங்கள்;ஆதீனங்கள்.அவர்களுக்கிடையே போட்டிகள்;பொறாமைகள்.ஒருவர் வளர்ச்சி மற்றவர்கள் தளர்ச்சி.
பின்னர் இன -ஜாதி வேற்றுமைகள்.

வைணவம் என்றால் உயர் நீதிமன்ற யானை நாம வழக்கு  பிரபலம்...வடகலை,தென்கலை.
ஆண்டவன் ஆஸ்ரமம் .
அர்ச்சகர்கள் என்றால் குருக்கள்;வைகாநசர் .இவர்கள் இறைவனுக்கு கைங்கரியம் செய்பவர்கள்.
தனியார் ஆலயங்கள்,அரசின் கீழ் வரும் ஆலயங்கள்,ஜாதிகளின் ஆலயங்கள்,
தன்  சிலையையே வைத்து வழிபடும் ஆலயங்கள்
,தலைவர்களின் மேல் உள்ள பற்றால் ஏற்படுத்தும் ஆலயங்கள்,
ஒருவர் சமாதியின் மேல் காட்டப்படும் சிவாலயங்கள்,கிராமகோயில்கள்,
அதன் பூசாரிகள்,காவல் தெய்வங்கள்,அம்மன் கோயில்கள் அதில் பூசை முறைகள்,அந்தணர்கள்  அர்ச்சகர்கள்.அந்தணரல்லாதவர்கள் கிராமத்து பூசாரிகள்.தெய்வத்தை வழிகாட்டுபவர்கள்  பல்வேறு சங்கங்கள்.

அனைவரும் ஒரே குரலில்  ஒலி  எழுப்ப காலம் கணிந்துவிட்டதா?ஆம்.
நாட்டின் விடுதலைக்குப்பின்  பொருளாதார அடிப்படையில் சோ அவர்களின்
எங்கே பிராமணன் ?? என்ற தொடர் இந்தக்காலத்திய பகுத்தறிவாளர்களின்
அந்தண  வெறுப்பைப் போக்கும்.பரந்த மனப்பான்மையை உண்டாக்கும்.
இப்பொழுது  அக்ரகாரங்கள்  காலியாகி  விட்டன.. அப்படி இருந்தாலும்  வயதானவர்கள்  தான் இருக்கின்றனர்..இளைஞர்கள்  அனைவரும் நகரத்தை நோக்கி அல்லது வெளிநாட்டிற்குப்பயணம் செய்து
விட்டனர் . பல பழைய ஆலயங்களில் வருமானமே இல்லை..பேருக்கு
ஒரு மணிநேரம் திறந்து வைக்கின்றனர்..

புதிய ஆலயங்களுக்கு வரவேற்பு இருப்பது வியப்பில் ஆழ்த்து கிறது..அரசாங்க பள்ளிகள்,அரசு கோயில்கள்  புறக்கணிக்கப்பட்டு  தனியார் கோயில்கள்,தனியார் பள்ளிகள் மக்கள் விரும்பும் வருமானம் வரும் அமைப்புகளாக  மாறிவருகின்றன..



(தொடரும்)

கருத்துகள் இல்லை: