ஆன்மிகம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை உணரச்செய்வது.
அது எல்லோரின் வாழ்க்கையிலும் எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது.
சிலர் தன் ஆணவத்தால் தன் ஆற்றல் வெளிப்படும் வரை உணர்வதில்லை.
தனிமனிதன் அனைத்தும் தன் முயற்சியால் முழு வெற்றிபெறும் என்றே நினைக்கிறான்.
முயற்சி-முயற்சி-முயற்சி-
- என்னதான் முயற்சி எடுத்தாலும் முதல் பரிசு ஒருவருக்கே.
அனைவரும் முதல்வராக முடியாது.
அனைவரும் குடியரசுத் தலைவராக முடியாது.
முயற்சி எடுப்போர் அனைவரும் சிறந்த பாடகராக முடியாது.
பணம் படைத்தோர் அனைவரும் தான் நினைத்ததை சாதிக்க முடியாது.
சாதித்தவர்கள் அனைவரும் பணம் படைத்தவர்களாக இருக்க முடியாது.
அறிவும் திறமையும் இருந்தாலும் அனைவரும் புகழும் /ஆதரிக்கும் மகானாக
முடியாது.
முதுகலை/ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்றாலும் வரகவிகள் போல்
கதையோ /கட்டுரையோ/கவிதையோ எழுத முடியாது.
பட்டம்,பதவி,புகழ் முயற்சியால் கிடைத்தாலும் அதற்கு இறைவனின் கருணை வேண்டும்.
படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு,பாடம் படிக்காத மேதைகளும்
பாரினில் உண்டு. என்ற திரைப்பட பாடல்.
ஆலயங்கள் புதிது புதிதாக தோன்றினாலும் ,சில ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சில ஆலயங்களுக்குச் சென்றால்,மீண்டும் மீண்டும் செல்லும் உணர்வு மேலோங்குகிறது.
சில ஆலயங்களுக்கு செல்லவே மனம் ஈடுபடுவதில்லை.
அப்பொழுது பக்தர்களுக்குள் வேறுபாடு.
விநாயக பக்தர்கள்,காளிதாஸ்,காயத்ரி ,
சிவதாஸ்,ஐயப்ப பக்தர்கள்,முருக பக்தர்கள்,ராமதாஸ்,கண்ணதாஸ் ,சக்தி உபாசகர்கள்,ஹனுமான் உபாசகர்கள்,
இவைகளைத்தவிர தேவதூதர்கள்,ஸ்வாமிஜீக்கள், ஆஷ்ரமங்கள் ,மடாலயங்கள்.பாபாக்கள்.அகோரர்கள்,சித்தர்கள்.
இத்தனை அலௌகீக சிந்தனை தூண்டுவோர்கள் ,சுய விழிப்புணர்கள்
ஏற்பட்டாலும் லௌகீக மாயை/சைத்தான்/சாத்தான் மனிதர்களை
மிகவும் கவர்ந்து ஆட்டிவைக்கிறது.
இதை உணரும் வரை மனிதர்களுக்கு நிம்மதியில்லை.
ஊழல் ,லஞ்சம்,சுயநலம் ,மோகம் முதலியவை ஒழிய வழியுமில்லை.
மன அமைதிக்கு,மகிழ்ச்சிக்கு,நிம்மதிக்கு ஒரே வழி மனத்தூய்மை யான
பவித்திரமான பக்தி. ஒருநாள் வாழ்நாளில் உணர்வ தே ஆன்மிகம்.
ஆகையால் தான் ஆன்மிகம் பலரின் புகலிடமாக விளங்குகிறது.
பண ஆசை பல ஆன்மீக ஆண்டவன் அருள் பெற்றோரையும் பொய்யர்களாக்கி அவப்பெயர் ஏற்படுத்துகிறது.
அதனால் தான் மக்கள் சண்டை-சச்சரவு,துன்பம் போன்றவைகளை அனுபவிக்கின்றனர்.
ஆசையே துன்பத்திக்குக் காரணம் என்பதைவிட பேராசையே காரமாகிறது.
இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.
ஆனால் இந்த இச்சை பேராசையாக,புலனடக்கம் இன்றி அதிகரித்தல் துன்பமே மிஞ்சும்.