பழையவை நல்லவை மீண்டும் மீண்டும் கூறவேண்டியவை.
மனித மனம் மத நம்பிக்கையில் மதம் பிடித்து ஒருவரை ஒருவர் வெறுக்கும்
நிலைக்கு வரும் சமயங்களில் ஒற்றுமைக்காக தேவதூதர்கள் அவனியில் அவதரிக்கின்றனர்.ஆனால் அந்த இறை தூதர்கள் வாழும் காலங்களில் அவர்களுக்கு ஆதரவை எளிய மக்களே வழங்கினர்.ஏசுநாதரை சிலுவையில் அறைந்ததும்,முஹம்மது நபியை கல்லால் அடித்ததும்,பல மதப்பெரியார்கள் இன்ன லுற்றதும் வரலாற்று சான்றுகள்.
மது சா லை யும் ,மாதுக்களும் மாயைகள்.அது நம்மை காந்தமாக கவரும்.
இன்றைய கருத்துக்கள் எல்லாமே பழைய கருத்துக்கள்.
சில மருத்துகள் ஒரே மருந்தை நாம் சாகும் வரை குடித்தால் தான் வாழ முடியும் .
அது போல் நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது அவசியம்.
தெரிந்ததையே கூறியதையே மீண்டும் கூறவேண்டியவை ஆன்மீகம்.
அதனால் தான்,வேதங்கள்,கீதைப்பெருரைகள்,குரான்,பைபிள் மீண்டும் மீண்டும்
ஓதப்படுகின்றன.தொழுகை செய்யப்படுகின்றன.
மது சாலைக்கு விளம்பரம் தேவை இல்லை.ஆனால் நல்ல விஷயங்களுக்கு
கூட்டங்கள் கூட்ட மிகவும் பிரயத்தனப்படவேண்டி உள்ளது.
அதற்கு பழையவைகளை புதுப்பாணியில் விளக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
நல்லோரை காண்பதுவும் நன்றே.நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே.நல்லோருடன் இணங்கி இருப்பதுவும் நன்றே.
தீயவை ஒரு நொடியில் பதிந்துவிடும்.நல்லவை பதிய நாளும் முயற்சி தேவை.