நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் முடிந்து
67 ஆம் ஆண்டு அடிஎடுத்து வைக்கிறது.
விடுதலை பெற்றதிலிருந்து நாம்
பல வகையில் முன்னேறி உள்ளோம்.
அமெரிக்கா நம் நாட்டு அறிவு வளத்தைப் பாராட்டுகிறது.
அங்கு பலர் மூக்கைப் பிடித்து
'ஓம் 'என்ற பிரணவத்தை உச்சரிக்கின்றனர்.
யோகக் கலை அவர்களுக்கு உடல் உள்ள உறுதிக்கு
யோகமாகத் தோன்றுகிறது.
திறமைக்கு எந்தவித பரிந்துரையும் அங்கே தேவைப்படுவதில்லை.
நம் நாட்டில் அனைத்துமதமும் சமம்
.
ஆனால்
சமம் இல்லை.
சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்பட்டால்
தேர்தலில் வாக்குகளைச்
சிதைத்து வெற்றிபெறமுடியாது .
தேர்தல் நேரத்தில் மதமும் ,
மதங்களின் பெயரால்
ஒரு வெறியைத் தூண்டுவதும்
மக்களுக்குள் ஒரு வேற்றுமையை ஏற்படுத்துவதும்
வேதனை தரும் விஷயங்கள்.
தேசத் தந்தை மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி,ஆசார்ய வினோபா பாவே
போன்றோர் தாய் மொழிக்கு கல்வியில் முக்கியத்துவம்
அளிக்க வலியுறுத்தினர்.
வினோபா இந்திய மொழிகளை அனைவரும் எழுத்தில் கற்க
எளிதாக்க தேவநாகரி எழுத்தை பொது எழுத்தாக ஆக்க முயற்சித்தார்.
தேசப்பிதா மோகன்தாஸ் காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து
ஹிந்தி மொழியை தொடர்பு மொழி ஆக்க
ஹிந்தி பிரச்சாரத்தை
தமிழ்நாட்டில் துவங்கினார்.
தந்தை பெரியார் ஈரோட்டில் ஹிந்தி பிரச்சாரத்தை துவக்கி ஆதரித்தார்.
ஆனால் தமிழ் நாட்டில் ஹிந்தி ஆதிக்கம் தமிழை ஒழித்துவிடும் என
ஒரு அரசியல் போராட்டம் துவங்கி
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்தனர்,
அவர்கள் ஆட்சிக்குவந்த பின்
தமிழ் அறிஞர்கள்
மகிழ்ந்தனர்.
ஆனால் ஆங்கிலம் ,ஆங்கிலவழிக்கல்வி வளர்ந்து மேலோங்கி
தமிழ் அறிஞர்கள் வாரிசுகளும் ஆங்கிலம் பயின்று
அரசுப்பள்ளிகளும் ஆங்கில வழிக்கல்வி ஆரம்பிக்கும்
கட்டாய நிலைக்கு வந்துவிட்டன.
இது தமிழக நிலைமட்டும் அல்ல. அகில இந்திய நிலை.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு.
அதற்கு முக்கியத்துவம் அளிக்க ஐந்து ஆண்டு திட்டங்கள்.
ஆரம்பத்தில் பல அணைக்கட்டுகள் என்று தன்னிறைவு பெறத் தொடங்கியது.
பின்னர் நாட்டை தொழில் வளம் ஆக்க
(கருப்பணம் சேர ,வெளிநாட்டு முதலீடு என )
விவசாய முக்கியத்துவம் குறைந்து
கிராமங்கள் காலியாகத் தொடங்கின.
பல ஏழை விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை.
விவசாய நிலங்கள் வீட்டு மனமனைகளாக மாறின.
தொழிற்சாலைகளாக மாறின.
இந்நிலை நீடித்தால் தன்னிறைவு பெற்ற உணவு வெளி நாட்டை
எதிர்பார்க்கும் நிலை.
பொறியியல் கல்லூரிகள் வளர்ச்சி ; மகிழ்ச்சி.
ஆனால் ,அனைத்து பொறியியல் பட்டதாரிகள் படித்ததும்
விரும்புவது தொழில் நுட்ப பூங்காக்கள்.
பி.ஈ , மெக்கானிக் கணினி நுட்பம் படித்து தொழில் நுட்பம்.ஐ.டி. பீல்ட் .
இந்த கல்லூரிகள் அரசியல் தலைவர்கள் மற்றும் பின்னணியில்.
அங்கு படித்த மாணவர்களே மாணவர்கள் சேர்க்கைக்குத் தரகர்கள்.
மாணவர்களுக்குள் இந்த தரகு வியாபாரத்தால் குத்துவெட்டு. படுகொலைகள்.
வெளிமாநில மாணவர்கள் இதை ஒரு தொழிலாகவே மாற்றிவிட்டனர்.
இந்த புற்றீசல் அரசியல் பின்னணி பொறியியல் கல்லூரியில்
ஒரு மாணவர் சேர்க்கைக்கு 20 லக்ஷம் வரை பேரம்.
இதை கோபிநாத்தின் நீயா-நானா நிகழ்ச்சி
வெளிச்சபடுத்தியது நேரடி சாட்சிகளாக.
செய்த்தித்தாள் செய்தி வெளியிட்டன,
கலைமகள் அலைமகளுக்கு முன் அடிமைதான்.
இங்கு பணிபுரியும் பேராசிரியர் ஊதியம் துறைத்தலைவருக்கே 15,000/'.
நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக்கற்கள் ஊழல்.கருப்புப்பணம்.
இதற்காக அரசியல்வாதிகளின் தரம் தாழ்கிறது,
மாநிலத்தைத் இரண்டாக்கி
ஒரு மொழி பேசுபவர்களிடையே
பலவித வேற்றுமை உணர்வுகளைப் புகுத்தி
அந்த கலவரத்தை தனக்கு சாதகமாக்கும்
கூட்டம்.
அரசியல்வாதிகள் குற்றம் புரிந்தாலும்
தண்டனைகள் கூடாது என்று
நீத்திதுறை ,வருமான வரித்துறை,தேர்தல் குழு,மத்திய புலனாய்வுக்குழு
அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
ஆளும் கட்சிகள்.
இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமை.
இளைஞர்கள் குறைந்த சைனா,இளைஞர்கள் அதிகமுள்ள இந்தியா.
இந்த 66 வருடம் இந்தியாவை முன்னேற்றியுள்ள
காங்கிரஸ்
ஊழலில் ,குற்றங்களில் ,கருப்புப்பணத்தில்,கற்பழிப்பில்
பார் புகழ் பாரதத்தை பார் இகழ் நாடக மாற்றி உள்ளது.
ஏழைகள் தங்கம் வாங்குவதால்
ரூபாய் மதிப்பு குறைகிறது.
ப.சிதம்பரத்தின் புதிய கண்டுபிடிப்பு.
அவர்கள் வாயைக்கட்டி,வயிற்றைக்கட்டி
ஏதோ அவசர காலத்தில்
வட்டிக்கு கடன் வாங்க உதவுமே
என்று செய்யும் செயல்,
இப்படிப்பட்ட நிதி.
மிக்க கேவலமான அமைச்சர்கள் பேச்சு
இராணுவ வீரர்கள் நாட்டில் பிறந்து வாழ்வது
எதிரிகள் குண்டடி பட்டு உயிர் துறக்க.
அமைச்சர்கள் வாழ்வது ஊழலுக்கும் ,
கருப்பு பணத்திற்கும்.
நாட்டிற்கு தியாகம் செய்ய அல்ல.
இந்த சுதந்திர நாளில் உறுதியாக இளைஞர்கள் அறிந்து ,புரிந்து ,தெரிந்து
தெளிவு படுத்தி நாட்டைக் காக்க
- இறைவன் ,மதம் என்ற பெயரால் சுயநல மதத் தலைவர்களும் ,சுயநல அரசியல்வாதிகளும் செய்யும் இனக்கலவரம்,மதக்கலவரத்தில்
- ஈடு படாதிருத்தல் .
ஊழல் ,கட்சிகளுக்கு துணை போகாதிருத்தல்.
அனைவரும் வாக்களிக்க முயற்சித்தல்.
தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுத்தல்.
இதில் தேர்தல் ஆணையரே தோற்றுள்ளனர்.
இறைவன் ஒருவன்.
சத்தியம்,நேர்மை,மனிதநேயம்,
பரோபகாரம்,அஹிம்சை,மனிதசேவை
இது உலக மதங்களின் சாரம்.
மதங்கள் மனிதனை நெறிபடுத்துவன .
மனிதனை மனிதனாக்குவன.
மனித ஒற்றுமை ஏற்படுத்துவன.
மதங்கள் ,இறைவடிவங்கள் வேறு.
ஆனால் இறையாண்மை ,இறைத்தன்மை ஒன்று.
இதை வேறு படுத்தும்
அனைவரும் வெறுக்கப்பட வேண்டியவர்கள்.
அன்பே இறவன்.
நல்ல பண்பே இறைவன்.
அதைத் தெளிந்து நடப்பவன் மனிதன்.
அதுவே வளர்ச்சிக்கு வழி.
2014 சுதந்திர தின எண்ணங்கள்.