ஆசிரியர்கள் நிலை பற்றி கூறிய பின் ,
ஆசிரியர்கள் செயல்பாடுகள் குறித்தும்
விளக்க வேண்டி உள்ளது.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது
பாடத் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
இன்றைய மாணவர்களுக்கு பல விஷயங்கள்
தெரிந்துள்ளன.அவன் கவனம் முழுவதும் வகுப்பறையில் இருக்க வேண்டும்.
அவனுக்கு வீட்டிலும் பல பிரச்சனைகள் உள்ளன.
சில மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றால் ,
அவன் பெற்றோர்கள் வரும் வரை வீட்டு வாயிலிலேயே காத்திருக்க
வேண்டிஉள்ளது.சில நேரங்களில் பெற்றோர்கள் தாமதமாக
வருகின்றனர்.
மாணவர்களின் தனிப்பட்ட இவ்வாறான பிரச்சனைகளையும் ஆசிரியர்கள்
கவனிக்கவேண்டும்.
ஒரு முதலாம் வகுப்பு மாணவன் குறிப்பேட்டிற்கு அட்டை போடவில்லை
என்று ஆசிரியை மிகவும் கேவலப்படுத்தியதுடன் ,ஒரு அட்டையில் indicipline
boy என்று எழுதி அன்று முழுவதும் அவன் நெற்றியில் கட்டி வைத்து
அவமான படுத்தி உள்ளார்.
அந்த 5-6 வயது குழந்தை மனம் எவ்வளவு புண் படும் என்று நினைக்கவில்லை.
சிலர் ஒரு மாணவன் செய்யும் தவறுக்கு அந்த வகுப்பறையில் உள்ள
அனைத்து மாணவர்களுக்கும் தண்டனை அளிக்கின்றனர்.
ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு கொடுக்கும் அக்கறை தமிழ் வழி
பயிலும் மாணவர்களுக்கு அளிப்பதில்லை.காரணம் அதிகமான பெற்றோர்கள்
படிக்காதவர்கள் மட்டும் அல்ல ;வறியவர்களும் கூட.
சமுதாயமும் அவர்களை மதிப்பதில்லை.எனக்குத் தெரிந்த தமிழ் வழியில்
எம்.காம்; படித்தவருக்கு வேலைக்கு நேர்காணல் செல்லும் பொழுது
அவமானம் தான் ஏற்பட்டது.
தாய்மொழியில் பேசினாலே அவன் அவமானப்பட வேண்டிய நிலை.
படத்தலைப்பு தமிழில் வைத்தால் ,வரி விலக்கு .ஆனால்,பாடல்கள்
ஆங்கிலத்தில் இருக்கலாம்.
இந்நிலை உள்ளவரை கல்வித்தரம் ,ஏற்றத் தாழ்வுகள்,
கட்டணங்கள் எப்படி மாறும்.
விடுதலை அடைந்த பின் நாட்டின் நிலை.ஆங்கிலமின்றி வேலை கிடையாது.
கல்விக்கூடங்கள் ஆசிரியர் நிலை --2
(தொடரும்)