அன்பு . (ஹிந்தியில் படித்த கதை .)
மாலா பூஜை முடித்து வெளியே வந்தாள். ஆச்சரியம். வாயிலில் மூன்று சாதுக்கள். முகத்தில் ஒரு தெய்வீகக் கலை. வணங்கினாள்.
வீட்டிற்குள் விருந்து சாப்பிட அழைத்தாள் .
அவர்கள் கேட்டனர் , உன் கணவர் இருக்கிறாரா? இல்லை என்றதும்
நாங்கள் உள்ளே வரமாட்டோம். என்று சென்றுவிட்டனர்.
சற்று நேரத்தில் கணவர் வந்தார். மாலா அவரிடம் நடந்ததைக் கூறினாள்.
உடனே கணவர் நீ போய் அவர்களைக் கூப்பிடு. நான் வந்துவிட்டேன் என்று கூறி அழைத்துவா என்றான்.
மாலா அவர்களை அழைக்கச் சென்றாள். அப்பொழுது அம்மூவரும் கூறினர்.
நாங்கள் ஒன்றாக வரமாட்டோம்.தனித்தனியே வருவோம். எங்கள் பெயர்கள்
செல்வம்,வெற்றி,அன்பு. எங்களில் யார் முதலில் வரவேண்டும் என்று கேட்டுவா என்றனர்.
மாலா தன கணவனிடம் விவரம் கூறி முதலில் யாரை அழைத்து வருவது
என வினவ,கணவன் செல்வத்தை அழைத்துவா. வெற்றியும் அன்பும் தானாக கிடைக்கும். என்றான். மாலை ,வெற்றி யை அழைத்தால் நன்றாக இருக்குமே என்றாள்.
கணவனோ வெற்றி என்பது உழைப்பில் வருவது. செல்வம் தான் முக்கியம் என்றான்.
மாலா ,செல்வத்தை அழைத்தாள்.
அப்பொழுது அந்த சாதுக்கள் வரமாட்டோம் என்றனர்.
மாலா காரணம் கேட்க, எல்லோரும் அழைப்பது,வெற்றியையும் ,செல்வத்தையும் தான். அன்பு இல்லை என்றால் இந்த இரண்டும் வராது.
உங்களிடம் அன்பில்லை. என்றனர்.
ஆம். அன்பு இல்லை என்றால் வெற்றியும் இல்லை;செல்வமும் இல்லை
என்று மாலாவும் அவள் கணவனும் உணர்ந்தனர்.
எனக்கு வள்ளுவர் குறள் நினைவுக்கு வந்தது.
என்பில் அதனை வெய்யில் போல் காயுமே அன்பில் அதனை அறம்.
அன்பே கடவுள்.