இறைவன் இல்லை ,இருக்கிறான் என்ற வாதம்
தேவையோ ,தேவை இல்லையோ
அது ஆத்திக நாத்திக விவாதம்.
உலகில் இறைவன் உள்ளான் என்பதே
அதிக எண்ணிக்கையில் மக்கள் நம்பிக்கை.
அமெரிக்க நாணயம் ,டாலர் நோட்டுகளில்
எழுதப்பட்ட வாசகம் "IN GOD WE FAITH".
அங்கு அறிவியல் வளர்ந்தாலும் ,பொருளாதாரம் வளர்ந்தாலும்
இயற்கையின் விந்தை கண்டு இறைவனை நம்புகின்றனர்.
நாம் இறைவனுக்காக கோயில்கள் கட்டிக்கொண்டே இருக்கிறோம்.
அதன் அடிப்படை நோக்கம் இறைப் பற்றா ?
இரைக்காக வணிக நோக்கமா?
கோயில்களில் பக்தியைவிட
வணிக நோக்கமே அதிகம்.
பழனி என்றாலே பஞ்சாமிரிதம்
தினைமாவு தான்.
இன்று ஆறே கால் கோடி ஏலம் ஒப்பந்தகாரர்
அது ஒரு இனிப்பகம், அது பிரசாத ஸ்டால் .
பிரசாதம் வடமொழி .ஸ்டால் ஆங்கிலம்.
இந்நிலையில் சம்ஸ்கிருதவாரம் எதிர்ப்பு.
வடமொழி சொல் இல்லாமல் தனித்து தமிழ் இயக்கம் ஆரம்பித்தும் உதய சூரியனே சின்னம்.
முச்சந்தி நாற்சந்தியில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று எழுதிவைத்துள்ள
தமிழ்நாட்டில் ஆலயங்கள் அதிகம்.
கந்தரனுபூதி ,கந்தர் அலங்காரம் ,திருமூலர் திருவாசகம் ,நாலாயிர திவ்ய பிரபந்தம்
அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல்
எத்தனையோ பக்தர்கள்,பாடல்கள்
இறைவனை தியானம் செய்தால் அமைதி.
மானுடப் பிரயத்தனம் தெய்வ பலமின்றி வெற்றிபெற இயலாது.
இயற்கையின் சக்தியே இறைவனின் சக்தி.
அதை மீறி எச்செயலும் நடக்காது.