செவ்வாய், ஜூன் 26, 2012

DHARMAM



குல தாழ்ச்சி சொல்லல் பாவம் என்றார் பாரதி.ஆனால் பாரதத்தில் கர்ணன்,விதுரன்  இருவருமே ஒதுக்கிவைக்கப்பட்ட  பாத்திரங்கள் .

கர்ணன் தன்  குருவின்  தூக்கம் கலையாமல் இருக்க தொடையில் வண்டு துளைத்து சென்றதை  பொறுத்துக் கொண்டான்.ஆனால்  அவன் புகழப் படவில்லை. சபிக்கப்பட்டான்.
ஏகலைவனின்  திறமைக்கு  கட்டை விரல் காணிக்கை.
புராணங்கள்  தான் அப்படி என்றால் சமுதாயப்  புரட்சி,கலப்பு காதல் திருமணங்கள் நடக்கும் இக்காலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
அரசியல் அன்றும் சுயநலத்தால்,இன்றும் சுயநலத்தால்.
 என்று தணியும் இந்த ஜாதிகள் மோகம் என்று இன்று பாரதி இருந்தால்
பாடி இருப்பார்.

தான -தர்ம சிந்தனை என்று கோடிக்கணக்கில் கோயில் உண்டியலில் போடுபவர்கள்  ,ஆஷ்ராமங்களுக்கு அள்ளி வழங்குபவர்கள்
 சேரியில் உள்ளவர்களுக்கு  வீடு சாலை  தண்ணீர்  வசதிகள் செய்யலாம்.
குடி இருக்க  குடி இருப்புகள்  கட்டித் தரலாம்.கோடிக்கணக்கில் தனக்காக வீடு கட்டி வாஸ்து சரியில்லை  என்று குடிபோகாமல் இருக்கும் பணக்காரர்கள்
பலர்  குடியிருக்க தர்மம் செய்யலாம்.







திங்கள், ஜூன் 25, 2012

manitha manama /kama raakshathana/seithikal tharum vedanai.

செய்திகள்  தரும்  வேதனைகள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பேத்தியை தாத்தா  கொலை செய்தார்.
வேளச்சேரியில் பெற்ற குழந்தையை தெருவில் வீசிச்சென்ற தாய்.
தொலைகாட்சி தொடர் பார்த்த பொழுது குழந்தையை கவனிக்காததால்
குழந்தை மரணம்.
கழிவு நீர் பள்ளத்தை தெர்மாக்கோல் கொண்டு மூடி வைத்ததால் அதில் ஏறி நின்ற 17 வயது சிறுவன் மரணம்.

மனிதர்கள்  மாக்களாக மாறிவரும் நிலை.போக்கிரிகள் கதாநாயகர்களாக வரும் கதைகள்.
காவல் துறையில் கருங் காலிகளால் சட்டம் பாதிக்கும் நிலை என்று காட்டும்
தொடர்கள்.
ஜாதிகளை உறுதிப்படுத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு.
ஜாதிகள் இல்லையடி பாப்பா  -என்ற பாரதியின் பாட்டு,
கலப்புத்திருமணம் செய்தால் தங்க மெடல் கொடுத்து பெற்ற பிள்ளைகள் எந்த ஜாதி.
 எனக்குத் தெரிந்த எத்தனையோ உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி திருமணத் தம்பதிகள் வேதனை புரியுமா ?
கிளை ஜாதிகளே இல்லாத கிறிஸ்தவ மதத்திலும் மாறிய அரிஜன கிறிஸ்தவர்கள் என்று எழுத வைக்கும் அரசுத்துறை.
இந்தியனின் வேதனைகள்.

சனி, ஜூன் 23, 2012

APOORVA SAKTHI. இறைவழிபாடு இன்றியமையாதது தான்.


    இறைவழிபாடு  இன்றியமையாதது தான்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் வாக்கு.

ஆனால் ஆலய வழிபாட்டில் பல் வேறு நடை முறை எப்படி வந்தது ?

 மனிதன் தன் சுயநலத்திற்காக பல்வேறு சம்பிரதாயங்களை  ஏற்படுத்தி 

தனக்கென   ஓர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொள்கிறான்.

அண்ணாதுரையை /காமராஜரை தலைவராக ஏற்று பல  கட்சித்தலைவர்கள்

நடமாடுவது போல்.

தலைவர் ஒருவர்.கொள்கை ஒன்று
.கட்சிகள் மட்டும் வேறு/.
அவ்வாறே
ஓர் இறைவனுக்கு பல ஆலயங்கள்

.பெயர் மட்டும் வேறு.

இது
அருகாமையில் பல ஆலயங்கள் கட்ட உதவு கின்றன.

கோயில்களிலும் ஜாதிக்ககோவி ல்கள் உள்ளன.

 இந்தக் கோயில் இந்த ஜாதியினரால்  கட்டப்பட்டது

.ஆலயங்களில் முதல் மரியாதைக்கான சண்டைகள்

.பணக்கார-ஏழை,உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி .

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல்

 பூஜாரியின் நடத்தையில் /கண்களில்/முகத்தில்,பிரசாதம் வழங்கும்

செய்கையில் எத்தனை மனோ பாவங்கள்.

அத்தனையும் தர்மகர் த்தா முன்னிலையில் அரங்கேறும்.

மேலும் தெருவிற்கு ஒரு கோயில்.

அதற்கு திருவிழா.எங்கள் கோயில் திருவிழா  சிறந்தது.

நாங்கள் அதைவிட சிறப்பாக என ஆலயம் வைத்து

சண்டைகள்.போட்டிகள்.பொறாமைகள்.

அனைத்தையும் மீறி மூலவரின் மேல் பக்தி.

அங்கு செல்லும் பக்தர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை.

அதையும் மீறி கூட்டங்கள் .

அன்றைய தினம் தெருவியாபாரிகள் ஆக்கிரமிப்பு.

.போக்குவரத்து சங்கடங்கள்.

அதையும் மீறி கூட்டங்கள்.


ஜேப்படி திருடர்கள்,நகை திருடர்கள்,காதல் ,குமாரியாக சென்ற மகள்

திருமதியாக திரும்பி வருதல் .

அங்கு கேலி வேறு  ஆண்டவனே காதல் கலப்பு மனம்தானே



.அ தையும் மீறி கூட்டங்கள்.

அங்கு ஒரு அபூர்வ  சக்திதான்.

வியாழன், ஜூன் 21, 2012

எதிர்ப்பு என்பதும் அரசியல் தான் .

மனிதன்   பரந்த உள்ளமாக இருக்கும் போது

அனைத்தையும் ஏற்றுக்கொள்வான்.

மனம் குறுகிய சுயநலமாக இருக்கும் பொழுது

ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் ;கால் பட்டால்  குற்றம் தான்.

கொலை வெறி பாடல் ரசிக்கும் கூட்டம்

,கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா?,கட்டிக்காம ஓடிப்போகலாமா?
 பாடல் ரசிக்கும் கூட்டம்
குஷ்பு  கற்பு பற்றி பேசியதும்   போராட்டம்.

 இந்த பாடல் எப்படி ரசிக்கிறது

.இதுதான் அனைத்து விஷயங்களிலும்.

எதிர்ப்பு  என்பதும்   அரசியல் தான் .

திங்கள், ஜூன் 18, 2012

changing sanskkrit name in tamilதமிழ் பெயர்கள் மாற்றம் தேவையா?

தமிழ் பெயர்கள்  மாற்றம் தேவையா?

ஒரு மொழி வளம் பெற தனித்தன்மை தேவை என்ற சூரியநாராயண சாஸ்திரி
பரிதிமாற் கலைஞர் என்ற பெயர்  மாற்றத்தால் புரட்சி செய்தார்.இப்போழுதும்
சிலர் தனிதமிழ்  என்று கூறிவருகின்றனர்.நாட்டில் பல இன்றியமையா பிரச்சனைகள் உள்ளன.ஒரு மொழி எப்படி தன ஆதிக்கத்தை செலுத்து கிறது
என்பது புரியாத புதிர்.
காமராஜர்,பக்த வத்சலம்,கருணாநிதி,,ஜெயலலிதா,சசிகலா ,நடராஜ்,உதயநிதி,ஸ்டாலின்,
அழகிரி,உதயசூரியன்,தயாளு,தயாநிதி,சன் பிச்சர்ஸ் ,என்ற அனைத்தையும்
மாற்ற முடியுமா ?
நாம் பேசும் பொது நடு ரோடு என்றுதான் பேசுகிறோம்.லைட் எரிகிறதா?சுவிட்ச் போட்டியா?பஸ் வந்து விட்டதா?மைக் வேலை செய்கிறதா?
சைக்கிள் பஞ்ச ரா  ?இந்த ஆதிக்கம் ஒழிக்க முடியுமா? 
பல நதிகள் சேர்ந்தால் கடல்.இல்லையேல் நதி.
அ ணை கட்டினால் வறட்சி.

மொழியும் அவ்வாறே.

பூஜை,அர்ச்சனை,தக்ஷினை,பரம்பரை ஆதீனம்,மடாலயம்.,உத்சவம்.
ஈஸ்வரன்,தானம்,தர்மம்,சந்தேஹம்,குரு,சிஷ்யன்,போன்ற வழிபாடு
ஸ்தலங்கலில்  தனித்தமிழ் முடியுமா?

பிரண்டு ,ஸ்கூல்,பெஞ்ச்,போர்டு,டீச்சர்,மாஸ்டர்,புக்,நோட்டு,அசெம்பிளி.
நோட்ஸ் ஆப் லேசன்,பேனா,பென்சில், ரப்பர்,சாக்பீஸ்,டஸ்டர்,
போன்றவற்றை மாற்ற முடியுமா?
தனியார் பள்ளிகளின் ஆங்கில ஆதிக்கம் பட்டி தொட்டியில் எல்லாம் வளரும்
சூழலில்

விருத்தாசலம்  பெயர் மாற்றம் தேவையா?
நவரத்தினம்,நவதானியம்,நவீனம் ,ரக் தபந்தம்,நவக்ரகம் ,நாயகன்,நாயகி,
நவரசம்,ரத்தக்கண்ணீர்,போன்ற சொற்கள்.

ஹோட்டல்,டிபன்,டூர்,டிக்கட்.சார்ஜ் ,போனஸ் என்று  நம் வாழ்வில் கலந்த
சொற்கள்.
இதை நவீன தலைமுறை ஏற்குமா?
ஒருமொழி வளர தனித்தன்மை என்ற எழுச்சி பலன் தருமா/?
பழம் மொழிகள் சமஸ்கிருதம்,கிரீக் ,லத்தீன் போன்றவற்றில்
 தமிழ்
வளந்துவரும் நிலையில் இந்திய மொழிகள் அனைத்துமே
பிழைக்க வழி  இல்லா நிலையில்
தனிதமிழ் படிப்போருக்கு வேலை கிடைக்கா நிலையில்
தனிதமிழ் இயக்கம் என்பது .....பரிதிமாற் கலைஞர் பின்பற்றா நிலை தான்.
கருப்பா ...கருப்பாயீ  என்று அழைத்தால் என்று தமிழன் தலை நிமிர்கிறானோ
அன்று தான் சிறப்புவரும்.
ஷ்யாம்,ஸ்வேதா , ஜெயா,யஷஷ்,விஜய் ,போன்ற  பெயர்கள் மாறுமா?
அவைகள் தான் புதிய  தலை முறை   விரும்பும்  பெயர்கள்.





























புதன், ஜூன் 06, 2012

palaiyathil puthuthithu.

பழையவை நல்லவை மீண்டும் மீண்டும் கூறவேண்டியவை.

மனித மனம்  மத நம்பிக்கையில் மதம் பிடித்து ஒருவரை ஒருவர் வெறுக்கும்
நிலைக்கு வரும் சமயங்களில் ஒற்றுமைக்காக தேவதூதர்கள் அவனியில் அவதரிக்கின்றனர்.ஆனால்  அந்த இறை தூதர்கள் வாழும் காலங்களில் அவர்களுக்கு ஆதரவை எளிய மக்களே வழங்கினர்.ஏசுநாதரை சிலுவையில் அறைந்ததும்,முஹம்மது நபியை கல்லால் அடித்ததும்,பல மதப்பெரியார்கள் இன்ன லுற்றதும் வரலாற்று சான்றுகள்.

மது சா லை யும் ,மாதுக்களும் மாயைகள்.அது நம்மை காந்தமாக கவரும்.
இன்றைய கருத்துக்கள் எல்லாமே பழைய கருத்துக்கள்.

சில மருத்துகள் ஒரே மருந்தை நாம் சாகும் வரை குடித்தால் தான் வாழ முடியும் .
அது போல் நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது அவசியம்.
தெரிந்ததையே கூறியதையே  மீண்டும் கூறவேண்டியவை ஆன்மீகம்.
அதனால் தான்,வேதங்கள்,கீதைப்பெருரைகள்,குரான்,பைபிள்  மீண்டும் மீண்டும்
ஓதப்படுகின்றன.தொழுகை செய்யப்படுகின்றன.
மது சாலைக்கு விளம்பரம் தேவை இல்லை.ஆனால் நல்ல விஷயங்களுக்கு
கூட்டங்கள்  கூட்ட மிகவும் பிரயத்தனப்படவேண்டி உள்ளது.
அதற்கு  பழையவைகளை புதுப்பாணியில் விளக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
நல்லோரை காண்பதுவும் நன்றே.நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே.நல்லோருடன் இணங்கி இருப்பதுவும் நன்றே.
தீயவை  ஒரு நொடியில் பதிந்துவிடும்.நல்லவை பதிய நாளும் முயற்சி தேவை.

வியாழன், மே 17, 2012

thirukkural. mem manushya gun.तिरुक्कुरल में मनुष्य गुण।


तिरुक्कुरल  में  मनुष्य  गुण।


  1. अनुशासन  और  शील ही जीवन साथी है।
  2. मनुष्य की  चाह  दूर होगी   तो उसके कार्य में सफलता मिलेगी।
  3. आलसी मनुष्य के घर में ज्येष्ठा  देवी  वास करेगी। 
  4. शील और अच्छी चाल-चलन ही उत्थान का मार्ग है।शील और मान जान से श्रेष्ठ है।
  5. धर्म और वीर का साथी प्रेम है।
  6. अपनी विधि  को भी सतत प्रयास बदल सकता है। ईश्वर साथ न देने पर भी प्रयत्न साथ देगा।
  7. विधि की विडम्बना सबल है। विधि से बचने के प्रयत्न के पहले ही विधि अपनी क्रिया शुरू कर देगी।
  8.  सत्य बोलनेवाला  ही  तपस्वी और दानी से  श्रेष्ठ है



vaalum neriவாழும் நெறி


வாழும் நெறி

மனிதன் மனித நேயத்துடன் வாழவேண்டும்
.ஒரு நாடு,வீடு,ஊர்,தெரு அனைத்திலும்   சுத்தம் அவசியம்.
சுற்றமும் நட்பும் அவசியம். சுத்தம் சோறுபோடும் என்று நாம் பகர்கிறோம்.
சுத்தம் அல்ல.சுற்றம்.சுத்தம் இல்லை என்றால் சோறு சாப்பிட முடியாது.
நோய் பரவும்.

ஆகையால் நமக்கு சுற்றமும் நட்பும் தேவை.சுத்தமும் தேவை

இரண்டும் இல்லை என்றால் மனிதன் வாழ முடியாது.

மனிதனுக்கு மட்டும் தான் தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது.


ஒரு பூச்சி கூட கூட்டுப்புழுவாக இருந்து முழு வளர்ச்சி

 அடைந்து வெளிவந்ததும் பறக்கிறது
.மற்ற பிராணிகளும் குட்டி போட்டதும்  நிற்கிறது.

மனிதக் குழந்தை நிற்க எட்டுமாதங்கள் ஆகிறது.

பின்னரும் மற்றவர்கள் ஆதரவு இன்றி நிம்மதியாக வளர முடியாது.
ஒட்டு-உறவு இன்றி  உலகில் வாழ்வது எப்படி.?


ஆகையால் தான் நம் முன்னோர்கள்

 உபதேசங்களுக்கு

 முக்கியத்துவம் அளித்து

பழமொழிகள் கூறிச்சென்றனர். 

सत्यं वद .=உண்மை பேசு.------ஊரோடு ஒத்துவாழ்.

பேராசை பெரும்  நஷ்டம்.

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.

அறம்  வெல்லும்.பாவம் தோற்கும்.

தர்மம் தலை காக்கும்.

அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
.
தன்  வினை தன்னைச்சுடும்.

மதியை விட விதி பெரிது.

தலை எழுத்து இறைவனால் எழுதப்பட்டது.அதை மாற்ற முடியாது.

மனம் இருந்தால் மார்கமுண்டு.

ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது.

பிறப்பும் இருப்பும் அறிவும் திறமையும் ஆண்டவன் அழிப்பது.

கலைகள் அனைத்தும் ஆண்டவன் வரப்ப்ரசாதம்.

எண்ணம்,சொல்,செயல் மூன்றும் தூய்மையாக இருந்தால்

 எண்ணியது   நிறைவேறும்.

இறைவன் கருணை இன்றி அணுவும் அசையாது.
.




செவ்வாய், மே 15, 2012

inraiya piraarththanai.todays prayer.

மனிதன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்து தான் ஒரு உயர்ந்த 
நிலையில் இருக்கவேண்டும் என நினைக்கிறான்.அவனால் தனித்து இயங்க
 முடியாது. அவன் பிறப்பு அவ்வாறு இல்லை என்றால் அவன் ஆணவத்தால் 
உலகம் என்ன ஆகும்.?ஒரு சிறிய பதவி கிடைத்தாலே அவனால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன.
அவனால் தீய காரியங்களும் நடக்கின்றன.இதில் எவை அதிகம்
 அவனால் நடக்கின்றன என்பதைப் பொறுத்து  அவன் போற்றவும் தூற்றவும் 
படுகிறான்.
போற்றும் நிலையில்  அவன் செய்யும் செயல்கள் அவனுக்கு
 அமைதியைத்தருகின்றன.மனநிறை வைத் தருகின்றன.
மனதில் அவன் அடையும் ஆனந்தம் பாரில் பலர் நடுவில் பீடு நடை
 போடச்செய்கிறது.

அவன் செயல்கள் பொது நலம் இன்றி சுயநலம் ,தீய செயல்கள்
 ,துன்பம் தரு  பவையாக இருந்தால்  அவன் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.
அவன் அதிகார,உடல்,பொருள் வலிமையால் அவனை முகஸ்துதி
 செய்வார்களே அன்றி மனதார தூற்றுவோர்களே இருப்பார்கள் .

மனிதன் எப்போதுமே கெட்டவனாக இருக்க முடியாது என்றாலும்,
பிறவியிலேயே கொடுமைசெய்யும் குணம் உள்ள 
சிலரால் மனிதர்களே மனிதர்களை வெறுக்கும் நிலை காணப்படுகிறது.
பலகோடி மக்கள் வாழும் உலகில் நல்லோர்கள்,நற்சிந்தனையாளர்கள்,
தியாகிகள்,நேர்மையாளர்கள்,தனக்காக இன்றி நாட்டிற் காக
சமுதாயநன்மைக்காக,சத்யத்திற் காக ,கடமைக்காக,வாழ்வோரின்
 எண்ணிக்கை அதிகம்.
அதற்கு மேலான காரியம் தான் ஆண்டவன் அளிக்கும் 
மரணம்,நோய்,அகால மரணங்கள்,நஷ்டங்கள்,மனக்கஷ்டங்கள் ,
தீராத நோய்கள்,குழந்தை இன்மை,இன்னும் பல.
அதனால் த்தான் அறிவியலுடன் ஆன்மிகம் தேவைப்படுகிறது.
பல கோடீஸ்வரர்கள்,பொறியாளர்க,மருத்துவர்கள் ,வாழ்க்கை 
வெறுத்து ஹிமாலயசாரலில் வாழ்கின்றனர்.
போலி ஆதீனங்கள் கோடிக்கணக்கில் ஆஸ்த்தி கள் சேர்த்து 
தூற்றலுக்கு ஆளாகிவருகின்றனர்.
ஆண்டவன் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்,
பொது மக்கள் தன சுய சிந்தனையால் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க 
ப்ரார்த்திப்போம்.

திங்கள், மே 14, 2012

NEEYAA-NAANAA-DEVOTIONAL INTERACTIONS.

பக் தி  என்பது  இறை அருள் என்பது

 இறைவனால் இயற்கையாக ஒருவனுக்கு உண்டாகும்

 வரப்ப்ரசாதம்.

இறை அன்பர்களின் வரலாறு இதை உணர்த்தும்.

புத்தர்,ஏசு ,நபி,சங்கரர்,ராகவேந்திரர்,சாய் பாபா அனைவரும்

 ஆன்மீக நெறி மார்கதரிஷிகள்.

அப்பர்,மாணிக்கவாசகர்,ஆண்டாள்,மீரா போன்றோர் ஆண்டவனைத்தவிர

வேறு எண்ணம் இல்லாமல் பித்தர்கள் போல்

 உலகில் வளம் வந்து பக்திப்பாடல்

இயற்றி வழிகாட்டியவர்கள்.

கபீர் ,துளசிதாசர் இருவரும் பெற்றோர் களால் ஒதுக்கப்பட்டு பக்தி

வழிகாட்டியவர்கள்.

கடவுள் பக்தர்கள் என்று கோடிக்கணக்கான பணம் சேர்க்காமல்

 விலை மதிப்பில்லா மனி த தத்துவத்தின் நெறி கலை அனைத்து யுகங்களின்

மக்களுக்கும் ஏற்றவாறு வழிகாட்டியவர்கள்.

  ஆனால்  அவர்கள் பெயரைச்சொல்லி அருள்வாக்கு என்ற பெயரில்,

 தீக்ஷை என்ற பெயரில்

ஆடம்பர பக்தியால் மக்களுக்கு

 ஒரு பீதி-பயம் ஏற்படுத்தி கோடிக்கணக்கில்


 சம்பாதிப்பவர்கள் இன்றைய ஆன்மீக வாதிகள்.


இதில் ஒரு மனோதத்துவ ரீதியான

அச்சத்தில் பாதிக்கப்படுபவர்கள்

அதிகமானவர்கள் இல்லத்தரசிகள்.

இறைவனின் தத்துவத்தை அறிய காடுகளில் குடில் அமைத்து எளிய

 உணவு உண்டு,இவ்வுலக சுகங்களை எண்ணாமல்

 இறைவனையே நினைத்து

இருந்தவர்கள் பக்தர்களா/?

இன்றைய மடாதிபதிகள் படுக்கும் படுக்கை பல லக்ஷங்கள்.

நவீன வசதிகள்,குளிர்சாதன வசதிகொண்ட அறைகள்,பளிங்கு மாளிகைகள்

இன்றைய சாமியார்கள்.வீடியோ கேமார வைத்தல் ஆஷ்ராமங்களின்

அட்டகாசங்கள் புரியும் என்று ஆதீனம் கூறும் அவலம்.

 அங்கிங்கு    எனாதபடி எங்கும் உள்ள இறைவன்

 உண்மை பக்தர்களுக்கு

இருக்கின்ற இடத்திலேயே அருள்புரிவான்.

மற்றதெல்லாம் தன சுகப்ஹோக வாழ்க்கைக்கு மக்களை மயக்கி

 பணம் பிடுங்கும் போலிகள்.வேட  தாரிகள்.

இந்த ஞானம் வந்தால் இறைவன் .குரு என்ற பெயரில்

 ஏமாற்றுவோர்   கூட்டம் குறையும்.

मन चंगा तो कटौती में गंगा।--மனம் பரிசுத்தமானால் கிண்ணத்தின் தண்ணீர் கங்கையாகும்.

कबीर--तेरा साई तुझमें ज्यों पुहपन में वास।-பூவில் மனம் உள்ளது போல் கடவுள் உனக்குள் இருக்கிறார்.

கடவுள் தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார்.

தவ வலிமையால் இறைவன் நம்மிடம் வரவேண்டும்.

அதற்கு ஆலயங்கள் முதல் வழிகாட்டி.

பக்தி சிகரத்தை அடைய படிகள்.

ஆலயத்தின் கொள்ளை ,ஏமாற்றுதல் தெரிய ஆலயம் செல்லுங்கள்

.
மிக முக்கியஸ்தர்கள்,தலைவர்கள்,பணக்காரர்கள் ஆகியோர் பெரும் /
முதல் மரியாதை.
ஒரு தேங்காய் ,இரு பழங்கள்,இரு வெற்றிலை,ஒரு பாக்கு,சிறிது பூ,ஓர் 
30 ரூபாய்..
தரிஷன டிக்கட்டுகள்.

அதிலும்  சீட்டு வாங்கிய பின் கையூட்டு கொடுத்து

முதலில் செல்லும் பக்தர்கள்.

வரிசைவரிசையில் தள்ளுமுள்ளுகள்.

அங்கு சென்றால் இதை எல்லாம் பார்த்து ஆள் மனதில் சிந்தித்தால் 
மனம் பக்குவப்படும்.
அதனால் தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர்.

கோபுர தரிஷனம் கோடி புண்ணியம்.பாலியல் கல்வி.

அங்கு நடக்கும் அராஜகங்கள் பணம் இல்லா பக்தர்கள் படும் அவமரியாதை

பணம் கொடுத்தல் நின்று தரிஷன். இல்லை எனில் தள்ளுதல்.

பெண்களே! சிந்தியுங்கள்.ஆண்களை வேதனைப்படுத்தி சபலத்திற்கு

இழுத்துச்செல்லும்


முழங்கை இடி தேவையா?.