இறைவழிபாடு இன்றியமையாதது தான்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் வாக்கு.
ஆனால் ஆலய வழிபாட்டில் பல் வேறு நடை முறை எப்படி வந்தது ?
மனிதன் தன் சுயநலத்திற்காக பல்வேறு சம்பிரதாயங்களை ஏற்படுத்தி
தனக்கென ஓர் கூட்டத்தை ஏற்படுத்திக்கொள்கிறான்.
அண்ணாதுரையை /காமராஜரை தலைவராக ஏற்று பல கட்சித்தலைவர்கள்
நடமாடுவது போல்.
தலைவர் ஒருவர்.கொள்கை ஒன்று
.கட்சிகள் மட்டும் வேறு/.
அவ்வாறே
ஓர் இறைவனுக்கு பல ஆலயங்கள்
.பெயர் மட்டும் வேறு.
இது
அருகாமையில் பல ஆலயங்கள் கட்ட உதவு கின்றன.
கோயில்களிலும் ஜாதிக்ககோவி ல்கள் உள்ளன.
இந்தக் கோயில் இந்த ஜாதியினரால் கட்டப்பட்டது
.ஆலயங்களில் முதல் மரியாதைக்கான சண்டைகள்
.பணக்கார-ஏழை,உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி .
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல்
பூஜாரியின் நடத்தையில் /கண்களில்/முகத்தில்,பிரசாதம் வழங்கும்
செய்கையில் எத்தனை மனோ பாவங்கள்.
அத்தனையும் தர்மகர் த்தா முன்னிலையில் அரங்கேறும்.
மேலும் தெருவிற்கு ஒரு கோயில்.
அதற்கு திருவிழா.எங்கள் கோயில் திருவிழா சிறந்தது.
நாங்கள் அதைவிட சிறப்பாக என ஆலயம் வைத்து
சண்டைகள்.போட்டிகள்.பொறாமைகள்.
அனைத்தையும் மீறி மூலவரின் மேல் பக்தி.
அங்கு செல்லும் பக்தர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை.
அதையும் மீறி கூட்டங்கள் .
அன்றைய தினம் தெருவியாபாரிகள் ஆக்கிரமிப்பு.
.போக்குவரத்து சங்கடங்கள்.
அதையும் மீறி கூட்டங்கள்.
ஜேப்படி திருடர்கள்,நகை திருடர்கள்,காதல் ,குமாரியாக சென்ற மகள்
திருமதியாக திரும்பி வருதல் .
அங்கு கேலி வேறு ஆண்டவனே காதல் கலப்பு மனம்தானே
.அ தையும் மீறி கூட்டங்கள்.
அங்கு ஒரு அபூர்வ சக்திதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக