செவ்வாய், டிசம்பர் 11, 2012

சராசரி இந்தியன் நான்.

நான் பாரதநாட்டில் பிறந்தவன்.

எனக்கு என் நாடு மிகவும் அன்பானது.

இருந்தாலும்  வெளிநாட்டு   மோகம் அதிகம் .

பாரத நாட்டை சிந்துவை  ஹிந்துவாக மாற்றி மாறி
ஹிந்துஸ்தான்  இந்தியா  என்பதை

 மன நிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்.

பாரதம் என்று சொல்பவன் அறிவிலி.

மதுரை  என்ற பெயரை மஜுரா  என்று மாற்றினால்,
 அதை ஏற்றால்  படித்தவன்.
மதுரை  என்பவன் மடையன் என்பதில்
எனக்கு ஒரு ஆனந்தம் .
தூத் துக்குடியை  டுடுகொரின் என்று
வெளிநாட்டான் சொல்வதை ஏற்றுச் சொல்வதில்
ஆக எனக்கு ஏற்படும்  கர்வம்  ,
மீண்டும் தூத்துக்குடி என்றால் கேவலம்.

தூய தமிழ் பேசினால் அவன் பட்டம் பெற்றும்

தூற்றலுக்கு  உரியவன் .

ஆங்கிலம்  கலந்தோ  ,ஆங்கில நடை தமிழ்  பேசினால்

போற்றற்கு  உரியவன்.

தாய்மொழி வழி  கற்றால் தரம்  கேட்டவன்.

எவ்வேலைக்கும்  ஏற்புடையவன் அல்ல.

நீதிநூல்கள் ,நல்வழி,திருக்குறள் ,அறியாமல்

இருந்தால்  வுய ர்ந்தவன்.

நம் நாட்டுக்கலைகள்  ரசிக்கா  உள்ளம்

 உயர்ந்த உள்ளம்.

நம்   மொழி  மறந்தாலே ,

வருமானத்திற்கும் ,வயிற்றுப்பிழைப்புக்கும்

வருங்காலத்திற்கும்  கனவுகள் நிறைவேறும்

என்ற  பரந்த  மனப்பான்மை கொண்டவன்.

நம்நாட்டுத் தொழில்கள் ஏழைகளை  வாழ  வைக்கும்

என்பதால்  அதை எள்ளி நகையாடி ஒதுக்குவதில்

எள்ளளவும்  பிசாகாதவன்.

முதலீடு வெளிநாட்டவர் என்றால் வரும்  அடிமைத் தளையில்

பேரானந்தம்  காண்பவன்.

ஆள்பவர்கள் ஆனந்தமாக வெளிநாட்டு வங்கியில்

பணம் சேர்த்தாலும் , பொதுமக்களின் நன்மைக்கு

பயன்படா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும்

கறுப்புப் பணம்  சேர்த்தாலும் ,
ஆயிரமாயிரம் பொதுமக்கள் செல்லும் சாலைகள்
குண்டும் குழியுமாக இருந்தாலும்
கவலை இல்லாமல் ,
 பணமும் இலவசமும் கொடுத்தால்
ஆள்பவரின்  தரம் பார்க்காமல் வாக்களிப்பவன்.

காவல்துறையினர்  ஏளனம் செய்யும்  ரசிப்பவன் .

போக்கிரி கதாநாயகனாகி,காவல் அதிகாரிகளின்
கருங்காலித்தனத்தைக்   கண்டு  அவர்களை
அடிக்கும்  காட்சிகள்   நாட்டிற்கு
நல்லதல்ல என்ற  உணர்வில்லா  திரைப்படங்கள்.

 விளைவு   தென் மாவட்டங்களில் காவலர்களைக்

கொல்லும்  துணிவு.

காதல்  என்று கூறி சீரழியும் இளைஞர்கள்.

கண்ணீர் சிந்தும் பெற்றோர்கள்.

விலைவாசி ஏற்றங்கள்.
 ஏழை   களின் வேதனை,
கல்வி வணிகமயமாதல் எதையும்
கண்காணாமல் நடமாடும்  ஜடம்.
லஞ்சம் ஊழல் வளர  உதவும் கரம் கொடுக்கும்
 உத்தமன்.
நான் இந்தியன் ,பாரதவாசி.
திரு அனந்தபுரம் ற்றிவென்றம் என்றால்
எவ்வளவு ஆனந்தம்; வெளிநாட்டு மோகம் .

இந்தியக்கலைகள் ,இசைக்கருவிகள் ,உடைகள்
 வெறுக்கும் சராசரி இந்தியன் நான்.














வெள்ளி, டிசம்பர் 07, 2012


 நாட்டில்  நல்லோர்கள் பல வழிகளில் மக்களுக்கு 

நல்ல  எண்ணங்களை ஏற்படுத்துகின்றனர்.

பொள்ளாச்சியில் கே.கவின் ,நேசினி  என்ற இருவர் சேர்ந்து   மோகன்குமார்   நினை வாக   வெளி  இட்டுள்ள துண்டு  பிரசுரம் .

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும்  பொருள்  வேண்டும்.

இன்றைய  லட்சியம் .  நாளைய மாற்றம்.

இன்றைய அலட்சியம் ,நாளைய ஏமாற்றம் .


  1. ஏசி ---2500 திறன் வாட்ஸ் = யூனிட்  24 நிமிடம் 
  2. தண்ணீர்  ஹீட்டர். 1500  1 யூனிட் 30 நிமிடம்.
  3. மின் அடுப்பு.---1000---60 நிமிடம் 1யூனிட்.
  4.  வேக்குவம் கிளீநேர்  750   1 மணி 18 நிமிடம் யூனிட்.
  5. மிக்சி -450   ஒரு யூனிட் 2 மணி 6 நிமிடம்.
அயர்ன் பாக்ஸ் -450  2 மணி 6 நிமிடம்.

வாசிங்  மெசின் ---325 வாட்ஸ் ஒரு unit 3 மணி 2 நிமிடம்.

      நேரமறிந்து  பயன்  படுத்துவீர் .

மின்சார சிக்கனம் தேவை இக்கணம்.
  

வியாழன், டிசம்பர் 06, 2012

குரு  ஞானக் கண்ணைத்  திறப்பவர் .

உபாத்யாயர்  பாடத்தை மட்டும் கற்பிப்பார்.

ஆசார்யன் மாணவனை மனிதனாக உயர்த்துபவர்.

பாடம்  முதல் நிலை .

பண்பு  அடுத்த நிலை.

ஆன்ம விளக்கம்  கடைசி  நிலை.


 

புதன், டிசம்பர் 05, 2012

மன நிறைவுடன் ,மன மகிழ்ச்சியுடன் வையகத்தில் வாழலாம்.

மனிதனின்  துன்பங்கள்  குறைகிறதா ?
மனிதனே துன்பங்களைக் குறைக்க ,
துன்பங்களை அதிகரித்துக்கொள்கிறானா ?

துன்பங்களிலும்  இயற்கைத்துன்பங்கள் உண்டு.
செயற்கைத்  துன்பங்களும்  உண்டு.

இயற்கையால்  ஏற்படும்  பொருளாதாரத் துன்பம் ஒன்று.

அது புரியாத புதிர். அதற்கு முன் ஜன்ம -பாவ -புண்ணியங்கள்.

பிறவியில் ஏற்படும் பிணிகள்.அகால  மரணம்.

எதிர்பாரா விபத்துக்கள்.அங்கஹீனப்பட்டு சித்திரவதை அனுபவித்தல்.

எல்லோருக்கும் ஏற்படும் மரணத் துயர் சம்பவங்கள்.

வெற்றி -தோல்விகள்.
எக்குற்றமும் செய்யாமல் பழி -பாவம் தண்டனைக்கு ஆளாதல்.
காரணம் இல்லா , பயம் ,சஞ்சலம்,பிரமை.மறதி
பல துன்பங்கள் மனிதனுக்கு தன்னை அறியாமலேயே ஏற்படுகின்றன.
இந்த அறியாமல் ஏற்படும் துன்பங்கள் இப்பிறவியில்  நல்லது செய்ய.

மனிதனுக்கு சுய பச்சாதாபம்,இறைவணக்கம் போன்றவற்றால்

திருந்தி வாழ்வதால்  துன்பங்கள் குறையும்.அல்லது நிவர்த்தியாகும்.

பகவானின் பாதங்களில்  முழுமையாக சரணாகதி அடையவேண்டும்.
அப்படித்தான்  மார்க்கண்டேயன்  நித்தியத்துவம் பெற்றான்.
அபிராம பட்டர் மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டார்.
கொடிய ரத்னாகர்  வால்மிகிமுனிவர் ஆனார்.
இந்த  சுய மாற்றம் பக்தி பலரை மகான் ஆக்கி உள்ளது.


செயற்கைத்துன்பங்கள் ஏற்படுவதற்கு மனிதனே காரணமாகின்றான்.

ஆணவம்,ஆசை,பேராசை,பொறாமை,கோபம், பிறரைக் கெடுத்து வாழ  நினைத்தல் , ஹிம்சை,   வீண்  பிடிவாதம் ,கஞ்சத்தனம்,பொன்னாசை ,பொருளாசை,பெண்ணாசை  என  பல மகான்கள் வழி  காட்டி உள்ளனர்.

புறப்பற்று  அகப்பற்று தவிர்த்து ,ஆண்டவன்மேல் பற்று தியானம் தான்
அமைதிக்கு  வழி  என்றும்  மஹான்கள்  அனுபவம் மூலம் உணர்த்தி யுள்ளனர்.

கற்றது,படித்தது,அறிந்தது,தெரிந்தது ,புரிந்தது  ஆகியவைகளை பின்பற்றி னாலே  மனிதன்  மன நிறைவுடன் ,மன  மகிழ்ச்சியுடன்  வையகத்தில்  வாழலாம்.






 

செவ்வாய், டிசம்பர் 04, 2012

ஆலய வழிபாட்டில் நேர்மை,சத்தியம் ,வரிசை இருந்தால்


ஆலயம் தொழுவது  சாலவும் நன்று.

ஆன்மீகம்  தழைக்கவும் ,ஆஸ்தி  தேவையே.

ஆலயங்கள்  ஆடம்பரமிருந்தால் ,

அலைபாயும் பக்தர்கள்.

 வைரக் கீரீடம் ,அலங்கரித்த  ஆண்டவன் ,

அந்த  ஆண்டவன் முகத்தில் ஒரு புன்னகை,

அந்த முகத்தில் பேசும் நயனங்கள் ,

அந்த ஒரு கண  தரிசனம் ,

அப்பொழுது பெரும் ஒரு பிரம்மானந்தம்,

அருள் பெற்ற அநுபூதி,

பெற்ற  தன்னம்பிக்கை,

அவனின்றி  எதுவும் இயலா  என்ற,

மன உறுதி  ,செயலாற்றத் தூண்டும் ,

ஒரு  உத்வேகம்,
பலவித   அலங்காரங்களால்  காணும் ஆசை,
சந்தனக் காப்பு ,அதன் அழகு ,
புஷ்பாலங்காரம்  அதன்  புனிதம்,
அஷ்டோத்திரம்,சஹஷ்ராநாமம்
அதன்  மந்திர ஓசை ,
வேத மந்திரம் தரும் பரமானந்தம்,
மன  சாந்தி ,சத்விசாரங்கள் ,
சதசாரங்கள்,
ஒருமுறை  தரிஷன முன்னேற்றம்,
ஆலயங்களுக்கும் ஆஸ்தி தேவை.
ஆலயப் பிரசாதங்கள் ,
அதன் தெய்வீக  மணம் ,ருசி ,
ஆஹா. ஆலயங்களுக்கும் ஆஸ்திகள் தேவை.
பிரசாத ஸ்டால்கள் ,வணிகநோக்கம் .
தவிர்க்கப்பட வேண்டும்.

பழனி  என்றால்  பக்தர்கள் அனைவருக்கும்
பஞ்சாமிருதம் ,தேன்  தினைமாவு வழங்க
வேண்டும்; அதில் நேர்மை வேண்டும்;
திருப்பதியில்  ஒரு சின்ன லண்டு
அனைவருக்கும்  கிடைக்கும்,
அந்நிலை பழனியில் வர தனி
புரவலர்கள் வரவேண்டும்.
அதில் போய் பிரட்டு நடக்காமல்
ஆண்டவன் காக்க வேண்டும்.
ஆஸ்திகள் தரும் புரவலர்கள்
தான் கொடுத்த நன்கொடை நற்பயனாக
இருந்தால் அள்ளிக்கொடுப்பார்

ஆனால்  பிரசாதம் கிள்ளிக்  கொடுக்கக் கூடாது.
நேர்மை  ,சத்தியம்,தர்ம சிந்தனை ,நியாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பக்தர்கள் பிரசாதம் பெற  ஒழுக்கம்,கட்டுப்பாடு,வரிசையில் செல்லுதல்.
ஆண்டவன் அருள்  பெற வழி  என்ற கோட்பாடை உணர்ந்து
செயல் படவேண்டும்.
ஆலய அநியாயங்கள் சனாதன தர்மம்
தழைக்க  உதவாது.
அதையும் மீறி அலைபாயும் கூட்டம்
அதுதான்  ஆலய மகிமை.
தரிசனம் செய்யும் வரை பக்தர்கள் புலம்பல்.
மூலவர் தரிசனம் இரண்டு நொடி;
மீண்டும் வர  சங்கல்பம்.
எத்தனையோ  பேர் வெறுத்து
செல்லவேண்டாம் என்ற சங்கல்பம்  
தவிர்த்து ஆண்டாண்டு தோறும் இடைவிடா
புனிதப் பயணம்.
புனித ஆலயங்களில்  ஒரு காந்தக் கவர்ச்சி.
அந்த உள்ளுணர்வு இருந்தாலும்,
அனைவருக்கும் கிட்டுவதில்லை
அந்த பாக்கியம்.
சிலரை சில சூழல் கள்  இழுத்துச் செல்கின்றன.
ஆலய தரிசன மகிமை ,
அனுபவ  உண்மை.
அதனால் தானே கூட்டம் அதிகம்.
இன்னும் ஹிந்துக்களில் ,கட்டுப்பாடு ஒழுக்கம்,
ஆலய வழிபாட்டில் நேர்மை,
சத்தியம் ,வரிசை  இருந்தால்
வையகத்தில் இதற்கோர்  இணையில்லை .







 

திங்கள், டிசம்பர் 03, 2012

இவர்களில் இருந்து தப்பிக்கவே பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம்மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தி உண்டு


 கண்ட  காட்சிகள்,
கண்ட கண்ட எண்ணங்கள் ,
எண்ணங்களில் மோதல்கள்,
ஏற்றத்தாழ்வுகள்,ஆசைகள் -பேராசைகள்,

பொறாமைகள்,ஆணவம் ,காமம்.
தீய சேர்க்கைகள்,தீய எண்ணங்கள்,

இவைகளில் இருந்து விடுபடா  ஒரு மாயை,

மனிதனை  மகிழ்ச்சி அற்றவனாக,

மனநிறைவற்றதாக  மாற்றுகிறது .

இந்த உலகத்தில் தேவைகள் அதிகம்.
அறிவியல் முன்னேற்றம்  பொருளாதார சிக்கல் .

தேவைகளும் ஆசைகளும் விருப்பங்களும் 
செயலாக்கமும் தேவைதான்.

ஆனால் அவை சுயநலமாக மாறும் போது  
நாட்டிற்கு ,வீட்டிற்கு,சமுதாயத்திற்கு 
மிகவும் ஊறு  விளைவிக்கிறது .

கொலை,கொள்ளை ,மாது,மது மயக்கங்கள் 

அமைதி தருவதாக ஒரு மாயத் தோற்றம் .

துன்பக்கடலில் தள்ளிவிடுகிறது.

அமைதியற்ற,ஒற்றுமையற்ற,அன்பற்ற ,வாய்மையற்ற ,அஹிம்சையற்ற சமுதாயம்.

இந்நிநிலை தன்  வரம்பை மீறும் பொழுது ,
ஒரு யு க புருஷன் 
சங்கரராக,புத்தராக,மகாவீரனாக,குருநானக்காக 
முஹம்மது நபியாக ,ரமண மகரிஷியாக,
ராமக்ரிஷ்ணராக அவதரித்து ,
பல சீடர்கள் மூலம் 
மாயை அகற்றி  அமைதிக்கு ,அன்புக்கு ,வாய்மைக்கு, மனித நேயத்திற்கு,
தான -தர்மத்திற்கு ,தியாகத்திற்கு ,பற்றற்ற நிலைக்கு 
 
பக்தி மார்க்கத்தைக் காட்டுகின்றனர்.
அவர்கள் மறைவிற்குப்பின்  மீண்டும் போலிகள் 
மூலம் மதங்கள் சுயநல வாதிகள் மூலம் 
போலி  பக்தர்கள்  மாசுபடுகின்றன.

மக்களுக்கு மதங்கள் விஷயத்தில் விழுப்புணர்வு தேவை.
சுய நல மதவாதிகள் மனிதர்களை பிளவு 
படுத்தி ,வேற்றுமைப் படுத்தி 
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க 

பக்தி நாடகம் ஆடுகின்றனர் .

இவர்களில் இருந்து தப்பிக்கவே 
பகுத்தறிவு வாதம்.நாஸ்திகவாதம் .

நாஸ்தி என்றால் அழிவு.
மூட பக்திக்கு அழிவு.
தூய பக்திக்கு ஒரு சிந்தனை.

மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு 
தெய்வீக சக்தி உண்டு என்பதை 

எந்த அறிவியல் வாதியும்  பகுத்தறிவு வாதியும் 
மறுத்ததில்லை.
மறுத்தாலும் இறுதிக்காலத்தில் 

 இறைவன் இருப்பதை உணர்த்திச் சென்றுள்ளனர் .




சனி, டிசம்பர் 01, 2012


மனிதன்  'மனம் ' பற்றி சிந்திக்கிறான்.

மனிதனுக்கு  அலை பாயும் மனம்.

மற்றவர்களுக்கு  மன நிலை  சரி இல்லை  என்றால்

அவர்களின்  மனதின் கவலைகளைப்போக்கும்  மனிதன்,

தனக்கு   வரும் கவலைகளை  மறக்க  முடியாமல்  

தவிக்கிறான்.தள்ளாடுகிறான்.

தனக்கு  வந்த துன்பம் தானே தன்  நண்பனுக்கும் வந்தது.

நாம்  அவனுக்கு ஆறுதல் கூறினோமே,

நம்மை நாம் ஏன்  தேற்றிக்கொள்ள முடியவில்லை.

அதற்கான  மனப்பக்குவம் ஏன்  இல்லை?

தலை வலியும்  காய்ச்சலும்  தனக்கு  வந்தால் தானே தெரியும்.

ஆனால்  மன தைரியம்  எப்படி  வரும்?

அரசகுமாரர்   சித்தார்த்தர்  அரண்மனையில்  எல்லாவித

 வசதிகளுடன் வளர்ந்தாலும் ,அவர் தந்தை  அவர் துறவறம்

மேற்கொள்ளக்கூடாது  என மிக  எச்சரிக்கை   நடவடிக்கை எடுத்தாலும்

சித்தார்த்தருக்கு   திருமணம் செய்து  வைத்தாலும்

அவர் புத்தர்  ஆவதை  தடுக்கமுடியவில்லை.

சமுதாயத்திற்கு  நல்லது செய்ய அவரை ஆண்டவன் அனுப்பியதால் ,

மற்றவர்கள்  படும் வேதனைக்காக தன் மெய் வருத்தி ,மனம் வருந்தி

தவம் செய்து   அன்பு அஹிம்சை  என்ற மனநிலை  ஏற்பட்டது.

பலநாட்டு    மக்களுக்கு  வழி  காட்டியது.

மன நிலை   என்பது  அலைபாயும் நிலை.

மனம் ,சொல்,செயல்  மூன்றையும் ஒரு நிலைப்படுத்துதல்  
என்பது    எல்லோராலும் முடியாது.

அதற்கு  பலரின் வாழ்க்கைவரலாற்றைப்  படிக்கவேண்டும் .

முடிவு     இறைவழிபாடும் தியானமும் தான்.




































































வெள்ளி, நவம்பர் 30, 2012

எங்கே?எங்கே?எங்கே?


அன்பும்  அறிவும் ஆற்றலும் 
நேசமும் பாசமும் தானமும் 
 தர்மமும் தியாகமும் பற்றற்ற
 தன்மையும் பணிவும்,பொறுமையும் 
சாந்தமும் சஹிப்புத்தன்மையும் 
பரோபகாரமும் தன்னலமற்ற 
எளிய வாழ்க்கை முறையும் ,
ஆடம்பரமற்ற தன்மையும்,
ஆத்மதிருப்தியும் அஹிம்சையும்,
விருப்பமும் வெறுப்பும் அற்றநிலை ,
ஆசை -பேராசையற்ற நிலை,
இன்னா -இனியவை யில்  நடு நிலை 
 ஆன்மீக மார்க்கம்.

ஆனால்   இன்று 
ஆன்மீகத்தில்  ஆடம்பரம் ,
ஆஸ்திகள் இல்லை என்றால் 
ஆஷ்ரமங்களில் இடம் இல்லை.
தங்கமும் வைரமும் வைடூரியமும் ,
கோடிக்கணக்கில் பணமும் 
பதுக்குமிடங்கலாகவும் இருக்கின்றன .
 பத்துக்கும் செல்வங்களால்   யாது 
பயன்.
ஆயிரக்கால் மண்டபங்களும் ,அழகுசிற்ப மண்டபங்களும் 
கடைகளால் மறைக்கப்பட்டு 
வணிக ஸ்தலங்களாக மாறும் நிலை.
லௌகீகமா அலௌகீகமா என்றால்,
லௌகீகமே  பிரதானம்.
 வழிபாடு ஐந்து நிமிடம் ,
கடைத்தெருவில் ஐந்துமணிநேரம் .
கடவுளின்  கருணை கிட்டுமா?
உள்ளத்தில் சஞ்சலம் தீருமா?
உடல்  ஆரோக்கியம் பெறுமா?
உள்ளம் அமைதி பெறுமா?
வாழும்  கலை மறந்து,
பொருளாசை வளர்க்கும் மையமாக 
மாறும் வணிகஸ்தலங்கள் 
 ஆலயங்கள்  என்றால் 
ஓம் ஓம் ஓம் 
சாந்தி !சாந்தி!சாந்தி !
எங்கே?எங்கே?எங்கே?




பிரேம மார்க்க பக்தி./காரணம் அவைகளுக்கு ஜாதி தெரியாது.


 பாப்பா  பாட்டு பாடிய  பாரதியாலும் ,

ஜாதி  இரண்டொழிய வேறில்லை  என்ற

ஔவையாராலும்  ஜாதி ஒழியவில்லை.

ஜாதிக்கட்சிகள், ஜாதீய உணர்வுகள் ,

மத  உணர்வுகள்,மத வெறிகள்,

மதம் ஜாதி என்ற பெயரால்

படுகொலைகள்   இன்னும் ஓயவில்லை.

 இராமாயண காலத்தில் ஜாதிவெறி

இருந்ததால்  தான்  ராமன் -குகன்  நட்பு

போற்றப்படுகிறது .

அறிவு,பண்பு , அடக்கம் உள்ள விதுரன்

சற்றே  ஒதுக்கிவைக்கப்பட்டான்.

கர்ணன்  வளர்ப்புப் பெற்றோர்களின் ஜாதிகாரணமாக
ஏளனத்திற்கு  ஆளானான் .
 அனைத்து மொழி  இலக்கியங்களில்,
  காதலுக்கு  முக்கியத்துவ,ம் .

அன்னம், மேகம்,காற்று புறா,

என அனைத்தும் காதலுக்கு தூது.

 காரணம்  அவைகளுக்கு  ஜாதி தெரியாது.

 ஞானம் பெற்ற  மனிதன் தன்   சுய  நலத்திற்காக
மனிதனை  மதம்,மொழி என்ற பெயரால்
வேறு    படுத்தினான்.
 ஆனால் இவைகளையும் கடந்து

காதல் வெற்றிநடை போடுகிறது .
அதனால்  காதல் படங்கள் வெற்றிபெறுகின்றன.

கபீர்

लाली   मेरे लाल की  जित  देखो , तित लाल;
लाली देखन  मैं गयी गयी  मैं भी  हो गयी लाल।

என்கிறார்.

காதலனைத்  தேடிச்சென்றேன் ;
எங்கு    எ தை ப்    பார்த்தாலும்

அவனையே  பார்த்தேன்.

அவனைப்பார்த்த  போது  நானும் அவனாக மாறிவிட்டேன்.

இதைத்தான்  காதலின் முற்றிய நிலை,

இது சங்கரரின் அத்வைத பக்தி.

பக்தி காதலுடன் இணைத்து விளக்குவதுதான்

பிரேம மார்க்க பக்தி.

அங்கு மீராவையும் பார்க்கலாம்.
ஆண்டாளையும் பார்க்கலாம்.
ஆண்டவன் முன் பிரேமையும் பக்தியும்
ஒன்றாவதால்  ஜாதி -மதம் பார்க்கப் படுவதில்லை.
காதலுக்கும் கண்ணில்லை ;பக்திக்கும் கண்ணிலை
அங்கு பேரானந்தத்திற்கும் ,முக்திக்கும் வழி  உண்டு .
அதுதான் பக்திப் பரவசம்.



















அன்னம் ,மேகம் .காற்று






துரியோதனன் 

வியாழன், நவம்பர் 29, 2012

உருவ அருவ இறை சக்தி உணர்வீர்கள்.சனாதன தர்மம் "ஹிந்து '



சனாதன  தர்மம்  "ஹிந்து ' என்ற வெளிநாட்டார்   இட்ட  பெயரால் வளர்கிறது .

இந்த ஹிந்து என்ற பெயர் சிந்து நதியின் மாற்றமே என்று அறியாமலேயே

சனாதன தரம்   வாதிகள் தங்களை  ஒரு ஹிந்து என்று சொல்லிக்கொள்வதில்

எத்தனை  பெருமை கொள்கிறார்கள். இது தான்  இந்துக்களின் பெருந்தன்மை.

இந்து   என்றால் திருடன் என்று மாநில  முதல்வர் கூறினாலும் பெரும் போராட்டங்கள்  நடக்கவில்லை.

பகுத்தறிவுவாதிகள்  தன எதிர்ப்பை இறைவனின் படங்களை செருப்பால்  அடித்து  ஊர்வலமாக  சென்றதையும்,கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சிலைகள் வைத்தாலும், இன்று ஆலயங்கள் வளர்கின்றன.அந்த ஊர்வலத்தை  ரசித்தவர்கள்  ஹோமங்கள் ,பூஜைகள் ,ஆலய தரிசனங்கள்,பரிகாரங்கள் செய்வதையும்   நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

உலகில் மிகவும் கேவலப்படுத்தப்பட்ட,பரிகசிக்கப்பட்ட,தைரியமாக  யாருக்கும்  அஞ்சாமல் எள்ளி நகையாடும்  மதம் ஹிந்து மதம்.

ஆனால்  பக்தர்களாலும்,ஆட்சியாளர்களாலும் ,மஹரிஷிகளாலும்  வளர்கின்ற மதம் ஹிந்து மதம்.

சற்று  ஒரு இரண்டு நிமிடங்கள்  ஓம் கணேசாய நமஹ/ஓம் முருகா /ஓம் நமசிவாய,/ஹரே ராம் /ஹரே கிருஷ்ண/சாய் ராம்  என்று   தங்களுக்கு பிடித்த
நாமத்தை ஜபம் செய்யுங்கள்.பத்துநாட்களில் நீங்கள் ஒரு ஆத்ம திருப்தி ,சந்தோசம்,மன ஷாந்தி அடைவீர்கள்.நீங்கள் எந்த ஆஷ்ராமங்களுக்கும் ,ஆலயங்களுக்கும்,பிராயச்சித்தம் என்ற பெயரில்
ஏமாற்றும் போலிகளையும் தேடிச்செல்லவேண்டாம் .

ஒரு இறை   சக்தி ,ஈஸ்வரானுபூதி உணர்வீர்கள்.இதைதான் ஹீரா குகையில்
முஹம்மது நபிகள் செய்தார்.சனாதன தர்மம் ஏகாந்த ஜப-தபத்தால் வளர்ந்தது.
ஹிந்து மதம் ஒவ்வொருவரின் ஆத்மானுபாவத்தால்  உன்னத நிலை அடைகிறது.

அதனால் தான்   இங்கு கடவுள் பெயர்கள் அதாவது இறை நாமங்கள்.உருவங்கள்  அதிகம்.

நமக்கு இன்னல் நேரும்போது ஒருவர் உதவினால் நாம் என்ன சொல்கிறோம் .

கடவுள் மாதிரி  உதவி செய்தார் என்கிறோம் .சிலர் அந்த உதவி செய்தவரின் பெயரை   கடவுளின் நாமமாக சபிக்கிறார்கள்.உதவி செய்தவர் பெயர் கணேசனாக இருக்கலாம் ,முருகனாக இருக்கலாம் துர்காவாக இருக்கலாம்.
அப்பொழுது அத்தனை உபாசகர்கள்,அத்தனை  நாமங்களில் கடவுள்கள்.
தேவி உபாசகர்,முருகதாஸ்,கண்ணதாஸ்,தாசானுதாசர்கள்  ஹனுமத் தாசர் ராமதாசர் .சிவ பக்தர்கள்.

 நாட்டுக்கு  நன்மை செய்தவரின் பெயரால் அண்ணா  நாமம் வாழ்க என்கிறோம்.
அவ்வாறே வீட்டுக்கும் நாட்டிற்கும் தனிப்பட்ட மனிதர்களுக்கும்
மனநிறைவு,மகிழ்ச்சி ,முன்னேற்றம் தர  இறைநாம ஜபம்  கலியுகத்தில்
அவசியம் ,

பணம்   சம்பாதிக்க  நேரம் அதிகம் சிலவாகும்  யுகம்  கலி யுகம்.
மணிக்கணக்கில்  உட்கார்ந்து ஜப்=தபமோ ,சந்தியா வந்தனமோ சொல்ல முடியாது

அதற்குத்தான் கலியுகத்தில் நாம  ஜபம் முக்கியம் ,பிரதானம்

அரசியல் வாதிகள் தன தலைவரின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.
கட்சி மாறும் சூழ்நிலையில் புதிய கட்சித் தலைவருக்கு
நாம ஜபம் செய்கின்றனர்
முதல்வரின் காலில் விழுகின்றனர்

அது லௌகீகம் .இவ்வுலக இன்பம் பின்னர் ஊழல் விசாரணை.மன அமைதி இல்லை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் முன் ஜாமீன் வழக்கறிஞர் பாதுகாப்பு.
நீதிமன்ற அலைக்கழிப்பு.

ஆனால் இறை நாம ஜெபத்தால்  இறுதிவரை மன அமைதி.நாம ஜபம் செய்யுங்கள்.மன சாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்.நேர்மையாக சத்தியத்தைக்  கடைபிடியுங்கள் .தான -தர்மங்கள் செய்யுங்கள்.
45 நாட்கள் ஒரு ஐந்து நிமிடங்கள் நாம ஜபம் போதும் .அஹம் பிரம்மாஸ்மி 
என்ற ஷங்கரரின்   அத்வைத்துவம்.வைஷ்ணவர்களின் துவைத்துவம்,
உருவ அருவ  இறை சக்தி  உணர்வீர்கள்.





நாம