சனி, டிசம்பர் 01, 2012


மனிதன்  'மனம் ' பற்றி சிந்திக்கிறான்.

மனிதனுக்கு  அலை பாயும் மனம்.

மற்றவர்களுக்கு  மன நிலை  சரி இல்லை  என்றால்

அவர்களின்  மனதின் கவலைகளைப்போக்கும்  மனிதன்,

தனக்கு   வரும் கவலைகளை  மறக்க  முடியாமல்  

தவிக்கிறான்.தள்ளாடுகிறான்.

தனக்கு  வந்த துன்பம் தானே தன்  நண்பனுக்கும் வந்தது.

நாம்  அவனுக்கு ஆறுதல் கூறினோமே,

நம்மை நாம் ஏன்  தேற்றிக்கொள்ள முடியவில்லை.

அதற்கான  மனப்பக்குவம் ஏன்  இல்லை?

தலை வலியும்  காய்ச்சலும்  தனக்கு  வந்தால் தானே தெரியும்.

ஆனால்  மன தைரியம்  எப்படி  வரும்?

அரசகுமாரர்   சித்தார்த்தர்  அரண்மனையில்  எல்லாவித

 வசதிகளுடன் வளர்ந்தாலும் ,அவர் தந்தை  அவர் துறவறம்

மேற்கொள்ளக்கூடாது  என மிக  எச்சரிக்கை   நடவடிக்கை எடுத்தாலும்

சித்தார்த்தருக்கு   திருமணம் செய்து  வைத்தாலும்

அவர் புத்தர்  ஆவதை  தடுக்கமுடியவில்லை.

சமுதாயத்திற்கு  நல்லது செய்ய அவரை ஆண்டவன் அனுப்பியதால் ,

மற்றவர்கள்  படும் வேதனைக்காக தன் மெய் வருத்தி ,மனம் வருந்தி

தவம் செய்து   அன்பு அஹிம்சை  என்ற மனநிலை  ஏற்பட்டது.

பலநாட்டு    மக்களுக்கு  வழி  காட்டியது.

மன நிலை   என்பது  அலைபாயும் நிலை.

மனம் ,சொல்,செயல்  மூன்றையும் ஒரு நிலைப்படுத்துதல்  
என்பது    எல்லோராலும் முடியாது.

அதற்கு  பலரின் வாழ்க்கைவரலாற்றைப்  படிக்கவேண்டும் .

முடிவு     இறைவழிபாடும் தியானமும் தான்.




































































கருத்துகள் இல்லை: