பாப்பா பாட்டு பாடிய பாரதியாலும் ,
ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற
ஔவையாராலும் ஜாதி ஒழியவில்லை.
ஜாதிக்கட்சிகள், ஜாதீய உணர்வுகள் ,
மத உணர்வுகள்,மத வெறிகள்,
மதம் ஜாதி என்ற பெயரால்
படுகொலைகள் இன்னும் ஓயவில்லை.
இராமாயண காலத்தில் ஜாதிவெறி
இருந்ததால் தான் ராமன் -குகன் நட்பு
போற்றப்படுகிறது .
அறிவு,பண்பு , அடக்கம் உள்ள விதுரன்
சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டான்.
கர்ணன் வளர்ப்புப் பெற்றோர்களின் ஜாதிகாரணமாக
ஏளனத்திற்கு ஆளானான் .
அனைத்து மொழி இலக்கியங்களில்,
காதலுக்கு முக்கியத்துவ,ம் .
அன்னம், மேகம்,காற்று புறா,
என அனைத்தும் காதலுக்கு தூது.
காரணம் அவைகளுக்கு ஜாதி தெரியாது.
ஞானம் பெற்ற மனிதன் தன் சுய நலத்திற்காக
மனிதனை மதம்,மொழி என்ற பெயரால்
வேறு படுத்தினான்.
ஆனால் இவைகளையும் கடந்து
காதல் வெற்றிநடை போடுகிறது .
அதனால் காதல் படங்கள் வெற்றிபெறுகின்றன.
கபீர்
लाली मेरे लाल की जित देखो , तित लाल;
लाली देखन मैं गयी गयी मैं भी हो गयी लाल।
என்கிறார்.
காதலனைத் தேடிச்சென்றேன் ;
எங்கு எ தை ப் பார்த்தாலும்
அவனையே பார்த்தேன்.
அவனைப்பார்த்த போது நானும் அவனாக மாறிவிட்டேன்.
இதைத்தான் காதலின் முற்றிய நிலை,
இது சங்கரரின் அத்வைத பக்தி.
பக்தி காதலுடன் இணைத்து விளக்குவதுதான்
பிரேம மார்க்க பக்தி.
அங்கு மீராவையும் பார்க்கலாம்.
ஆண்டாளையும் பார்க்கலாம்.
ஆண்டவன் முன் பிரேமையும் பக்தியும்
ஒன்றாவதால் ஜாதி -மதம் பார்க்கப் படுவதில்லை.
காதலுக்கும் கண்ணில்லை ;பக்திக்கும் கண்ணிலை
அங்கு பேரானந்தத்திற்கும் ,முக்திக்கும் வழி உண்டு .
அதுதான் பக்திப் பரவசம்.
அன்னம் ,மேகம் .காற்று
துரியோதனன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக