செவ்வாய், டிசம்பர் 11, 2012

சராசரி இந்தியன் நான்.

நான் பாரதநாட்டில் பிறந்தவன்.

எனக்கு என் நாடு மிகவும் அன்பானது.

இருந்தாலும்  வெளிநாட்டு   மோகம் அதிகம் .

பாரத நாட்டை சிந்துவை  ஹிந்துவாக மாற்றி மாறி
ஹிந்துஸ்தான்  இந்தியா  என்பதை

 மன நிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்.

பாரதம் என்று சொல்பவன் அறிவிலி.

மதுரை  என்ற பெயரை மஜுரா  என்று மாற்றினால்,
 அதை ஏற்றால்  படித்தவன்.
மதுரை  என்பவன் மடையன் என்பதில்
எனக்கு ஒரு ஆனந்தம் .
தூத் துக்குடியை  டுடுகொரின் என்று
வெளிநாட்டான் சொல்வதை ஏற்றுச் சொல்வதில்
ஆக எனக்கு ஏற்படும்  கர்வம்  ,
மீண்டும் தூத்துக்குடி என்றால் கேவலம்.

தூய தமிழ் பேசினால் அவன் பட்டம் பெற்றும்

தூற்றலுக்கு  உரியவன் .

ஆங்கிலம்  கலந்தோ  ,ஆங்கில நடை தமிழ்  பேசினால்

போற்றற்கு  உரியவன்.

தாய்மொழி வழி  கற்றால் தரம்  கேட்டவன்.

எவ்வேலைக்கும்  ஏற்புடையவன் அல்ல.

நீதிநூல்கள் ,நல்வழி,திருக்குறள் ,அறியாமல்

இருந்தால்  வுய ர்ந்தவன்.

நம் நாட்டுக்கலைகள்  ரசிக்கா  உள்ளம்

 உயர்ந்த உள்ளம்.

நம்   மொழி  மறந்தாலே ,

வருமானத்திற்கும் ,வயிற்றுப்பிழைப்புக்கும்

வருங்காலத்திற்கும்  கனவுகள் நிறைவேறும்

என்ற  பரந்த  மனப்பான்மை கொண்டவன்.

நம்நாட்டுத் தொழில்கள் ஏழைகளை  வாழ  வைக்கும்

என்பதால்  அதை எள்ளி நகையாடி ஒதுக்குவதில்

எள்ளளவும்  பிசாகாதவன்.

முதலீடு வெளிநாட்டவர் என்றால் வரும்  அடிமைத் தளையில்

பேரானந்தம்  காண்பவன்.

ஆள்பவர்கள் ஆனந்தமாக வெளிநாட்டு வங்கியில்

பணம் சேர்த்தாலும் , பொதுமக்களின் நன்மைக்கு

பயன்படா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும்

கறுப்புப் பணம்  சேர்த்தாலும் ,
ஆயிரமாயிரம் பொதுமக்கள் செல்லும் சாலைகள்
குண்டும் குழியுமாக இருந்தாலும்
கவலை இல்லாமல் ,
 பணமும் இலவசமும் கொடுத்தால்
ஆள்பவரின்  தரம் பார்க்காமல் வாக்களிப்பவன்.

காவல்துறையினர்  ஏளனம் செய்யும்  ரசிப்பவன் .

போக்கிரி கதாநாயகனாகி,காவல் அதிகாரிகளின்
கருங்காலித்தனத்தைக்   கண்டு  அவர்களை
அடிக்கும்  காட்சிகள்   நாட்டிற்கு
நல்லதல்ல என்ற  உணர்வில்லா  திரைப்படங்கள்.

 விளைவு   தென் மாவட்டங்களில் காவலர்களைக்

கொல்லும்  துணிவு.

காதல்  என்று கூறி சீரழியும் இளைஞர்கள்.

கண்ணீர் சிந்தும் பெற்றோர்கள்.

விலைவாசி ஏற்றங்கள்.
 ஏழை   களின் வேதனை,
கல்வி வணிகமயமாதல் எதையும்
கண்காணாமல் நடமாடும்  ஜடம்.
லஞ்சம் ஊழல் வளர  உதவும் கரம் கொடுக்கும்
 உத்தமன்.
நான் இந்தியன் ,பாரதவாசி.
திரு அனந்தபுரம் ற்றிவென்றம் என்றால்
எவ்வளவு ஆனந்தம்; வெளிநாட்டு மோகம் .

இந்தியக்கலைகள் ,இசைக்கருவிகள் ,உடைகள்
 வெறுக்கும் சராசரி இந்தியன் நான்.














கருத்துகள் இல்லை: