ஞாயிறு, நவம்பர் 25, 2012

வாழ்க ஜனநாயகம்.



அமெரிக்காவில் ஆறுமாதம்,
ஆனந்தமாய்,
கழித்த  பின் இன்று 
இந்தியப் பயணம்.
தாய் நாட்டுப் பற்று,
தாயகம் காணும் 
மகிழ்ச்சி.
செய்தி படித்தேன்.
சென்னையைத் தவிர,
மற்ற நகரங்களில் 
18  மணிநேரம் மின் வெட்டு.
பாவம் என் வயதான அம்மா.
மக்கள் நலம் காக்கும் 
இந்திய நாட்டில்,
 அரசுகள் மாறுவதால்,
திட்டங்களில் மாற்றம்.
ஒருவர் புகைவண்டி மேலே செல்லவேண்டும் என்றால்,
ஒருவர் பூமிக்குள் செல்லவேண்டும் என்பார்.
அவர் பதவி போய் இவர் பதவி வந்தால்,
திட்டங்கள் தூள்-தூள்.
நட்டங்கள் மக்கள் வரிப்பணம்.
அவர்களுக்கென்ன அயல் நாட்டு சேமிப்பு.
வாழ்க ஜனநாயகம்.
ஆறுமுகக்  கடவுள்,
ஆனை முகன் தம்பி,
அறுபடை வீட்டு நாயகன்,
அவன் பதம்  பணிவோம் யாம்.
அவனியில் நம் இச்சைகள் 
அவனருளால் 
விருப்பங்களாகி,
செயலுருப்பெற்று,
உள்ள நிறையுடன்,
ஊக்கம்  பெற்று,
உள்ளம் மகிழ்ந்து ,
நோய்நொடி இன்றி,
நீண்ட காலம்,
இனிதே வாழலாம்.

ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

ஹிந்து புராணங்களின் சர்ச்சைகள் வந்த வண்ணமாக உள்ளன.
மோகினி அவதாரம் பற்றிய சர்ச்சை.
இறைவன் பற்றிய வரலாற்றை ,
விவாதம் செய்வது பாவம் என்றோருவாதம்.
ஆனால் ஹிந்து மதம் எதையும் தாங்கும்.

அது ஒரு பூமி.
அதில் சவத்தையும்  புதைக்கலாம்.
சாக்கடையையும் ஓடவிடலாம்.
புனித கங்கையும் ஓடவிடலாம்.
குழியும் தோண்டலாம்.
சுரங்கங்கள் தோண்டலாம்.
தங்கமும் வெட்டி எடுக்கலாம்.
நிலக்கரி எடுக்கலாம்.
வைரமும் எடுக்கலாம்.
எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.
புதையலும் எடுக்கலாம் .
புண்ணியர்களையும் புதைக்கலாம்.
பாவிகளையும் புதைக்கலாம்.
அறிவு,பதவி,அறிவியல் மேதைகள்,
நாஸ்திகர்கள்,ஆஸ்திகர்கள் 
அனைவரும் சங்கமிக்கும் இடம் பூமி.
ஆகையால் இந்துமதம் கர்ம பூமி,
கர்மத்துக்கேற்ற வாழ்க்கையை கொடுக்கும் பூமி.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்.
ஆகையால் இது வினைக்கேற்ற பலன் தரும் 
சனாதன தர்மம் என்ற சகிக்கும் பூமி.
அருவுருவமும் ஆனாய் போற்றி 
அகிலத்திற்கே ஒரு ஆதர்ஷ பூமி.

சனி, நவம்பர் 24, 2012

எண்ணிய எண்ணங்கள் யாவும்,எளிதில் நிறைவேறுமே.

முருகனுக்கு மூத்தோன்,
காட்சிக்கு  எளியோன்.
கணங்களின் நாயகன்,
கணபதி என்றும் என்னைக் காக்க.

வேழமுகத்தோன் ,
வேலனின் மூத்தோன்,
வேண்டும் வரம் அருளும்,
கணபதியைத் தொழுவோம் .

கஜவதனன், பஞ்சக்கரமுடையோன்,
பக்தர்களைக் காப்போன்,
பட்டிவீரன் பட்டி வாசன்,
கற்பக விநாயகன்,அவன்பாதம் பணிவோம்.

மோதகப் பிரியனவன்,
சித்தி விநாயகன்,
பவானி  புத்திரன்,
பவ துக்க ஹரன்,
சிவ புத்திரனவன்  முன்
தோப்புக்கரணமிட்டால்,
தோல்வி பயம் நீங்கி,
தொல்லுலகில்
தொல்லைகள் அகன்று,

சாந்தியுடன்,சக்தியுடன்,
சகல இச்சைகளும்  நிறைவேறும்,
ஞானம் பெற்று,
கிரியா ஊகம் பெற்று,
நானிலத்தில் நலமுடன்
வாழ லாமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.
ஆலயங்கள் சாத்தினாலும்,
அரசமரத்தடியில்  அமர்ந்து,
அருகம்புல் அர்ச்சனை ஏற்று,
அல்லல் அகற்றும் ஆறுமுகன்
அண்ணன் அவன்.,பாதம் தொழுதால்,
பாவங்கள் விலகும் ஐயா.

சர்வ சித்தி விநாயகன்,
சங்கடஹர விநாயகன்,
விக்னங்களை  நீக்கும்,
விக்ன வினாயகனவன்.
அவன் பாதம்  வணங்க ,
அல்லல் போகுமே;
ஆனந்தம் பொங்குமே.
இன்னல்  நீங்குமே .
மனதில் இன்பம் பொங்குமே.
எண்ணிய எண்ணங்கள் யாவும்,
எளிதில் நிறைவேறுமே.









,

வெள்ளி, நவம்பர் 23, 2012

கல்வி அறிவு பெருகினாலும் போலிகளிடம் ஏமாந்தாலும். உண்மை புரிவதில்லை.

  அதிகாலை நேரம்,

ஆண்டவனைத்  தொழும்  நேரம்.

இன்றைய நாட்களில் , பொருள் 

ஈட்டும்  தொழில் நுட்பப் பணியில்,

கடமையைச் செய் .
கடவுள் கருணை உண்டு 
என்ற  கீதை உபதேசம்.
ஏற்புடையதாயிற்று.

ஹிந்தியில் நான் படித்த தோஹை,

வீரர்கள் செயலில் இறங்குவர்.
கோழைகள்   வீண் பெருமை பேசுவர்.
வீரர்கள் களத்தில்  குதிப்பர் .
கோழைகள்  தற்பெருமை பேசுவர்.
காலம் மாறுகிறது.
கருத்துக்கள் மாறுகின்றன.
ஒரு கிணறுவெட்ட பழைய முறை 
உதவாது.
நெசவு நெய்ய கைத்தறி ,
காலத்திற்கேற்ற நூற்பாலை.
அகல் விளக்கு ,
இன்று மின் விளக்கு.
கட்டை வண்டி 
இன்று ஜெட் விமானம்.
கதை பேச நேரமில்லா உழைப்பு.
நான் சிறுவனாக இருந்த போது .
ஒருவர் உழைப்பு;
பலர் அமர்ந்து உண்பர்.
வெட்டிப்பேச்சு ;
திண்ணைப்பேச்சு;
வீண் வம்பு;
அரசியல் கூட்டம்;
அலை மோதும்.
இன்று மோதியின் 
ஒருமேடைப் பேச்சு .
நான்கு ஊர்களில் .
பொதுமேடைப் பேச்சு.
தொலைக்காட்சியில்  வீட்டில் இருந்தே,
நேரடி ஒளி பரப்பு.
அறிவியல் விந்தைகள்.
அன்றாட வாழ்வில்.
பல மொழிகள் அறிவு பாமரனுக்கும் தேவை.
பொருட் செல்வம் இருந்தால் ,
தன் இனம் வளரும்.
தன் மொழி வளரும்.
வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் சேவை,
ஆர்வம்  தோழி நுட்ப வசதியால் தானே?
மடி கணினி இலவசம்.-ஆனால் 
மின்சாரம் இல்லை.
தொலை பேசி வசதி இல்லை.
வலை அலை வசதி இல்லை.
பயன் படுத்த முடியவில்லை.
அலைகற்றை ஊழல் அலை ஓயவில்லை.
வீண்பேச்சுக்கள் தான்.
பொருளாதாரம் இருந்தால்,
தமிழ் மொழி வளரும்.
திரைகடலோடியும்  திரவியம் தேட,
தமிழ்,தமிழ் என்ற வீண் பேச்சுப் பேசி,
காலத்திற்கேற்ப கல்வி  இன்றி ,
கல்வித்துறையில் நேர்மையின்றி,
காசேதான் கல்வி,
இல்லாருக்கு இல்லை என்ற நிலை இன்று.
அரசுப்பள்ளி தரம் உயர,
என்னதான் செய்தாலும்.
பெற்றோர்கள் பொருளீட்ட அலையும் பொது,
நல்  ஒழுக்க சூழல் சமுதாயத்தில்,
ஊடகங்களில்,
திரைப்படங்களில் .
ஆடைகளில் கவர்ச்சிகள்  கண்ணைப்பறிக்கும் போது ,
ஊழல்,கொலை,கொள்ளை,லஞ்சம் என்பதே
 பேச்சாக 
இருக்கும்  போது ,
ஒழுங்கீனங்கள்  தானே மிஞ்சும்.
ஆன்மிகம் அமைதி தந்தது.
ஆனால் அதில் ஆஸ்தி தேடுவோர் அதிகமானதால்,
பொருளின்றி அருள் இல்லை 
என்ற நிலை.

எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன்,
அவன் அருள் பெற உள்ளார்ந்த பிரார்த்தனை,
உள்ள இடத்திலேயே போதும்.
உண்மை சொன்னால் ஊர் நகைக்கும்.
ஊர்க்கோடியில் ஒரு சாமியார்,அவரோ போலி,
அவருக்கு பல கோடி சொத்து.
இதுவா இறைவன் அருள் பெறும் இடம்.
பணம் இருந்தாலே பத்தும் செய்யும்.
அங்கு எங்கே தர்மம் தலைக்கும்.
காலம் மாறினாலும்,
கல்வி அறிவு பெருகினாலும் 
போலிகளிடம் ஏமாந்தாலும்.
உண்மை புரிவதில்லை.

மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?

      தமிழகம்  சேர,சோழ,பாண்டிய நாடு என்ற மூன்று பிரிவுகளாகவும்,குறுநில மன்னர்கள்,கடையேழு வள்ளல்கள் 
பாரி ,ஓரி ,அதியமான் என்று என்றுமே ஒன்று பட்ட வரலாறு காணப்படவில்லை.அப்படிப்பட்ட நிலையிலும் அனைவருக்கும் கல்வி என்ற நிலை இருந்ததா?என்ற நிலை தெரியவில்லை.அதிவீரராம பாண்டியர் "பிச்சை புகினும் 
கற்கை  நன்றே என்றாலும், வெந்தனலால்  அழியாது கல்வி என்றாலும்,ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றாலும்
இன்றும் ஜாதி அரசியல் தான். என்றுமே அனைவரும் அறிவாளிகளாக நாட்டு பக்தியுடன் பல மொழி,அறிவு பெற்று 
ஒற்றுமை  உடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்த தில்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கே ,கடவுள் இல்லை,பார்ப்பான் ஒழிக, தமிழன் வாழ்க என்று தமிழர்களை கிணற்றுத் தவளைகளாக ,பாரத நாட்டின் அறிவே தெரிந்து கொள்ள முடியாமல் தமிழ் தமிழ் என்று இன்று ஒய்  திஸ் கொலைவரி  என்றும்,பட்டி தொட்டி எல்லாம் மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?
ஹிந்தி கூடாது என்றவர்கள் பொதுமக்களைப் படிக்கவிடாமல்,மத்திய அமைச்சர்களானால்  பெரும்பான்மையானவர்கள் அறிந்த மொழியை மறுத்து  தமிழில் தமிழ்நாட்டிலேயே முடிய இல்லை. தமிழ் வழிப்பள்ளிகள்  ஏழைகள், வழி  இல்லாதோர்  சரணடையும் பள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.
ஏதாவது அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள்,படித்தோர் யாரும் தமிழ் வழி  பள்ளிகளை விரும்ப இல்லை. ஹிந்தி ஒழிந்ததா? தமிழ் வழி படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் அலுத்து புலம்பும் நிலை.
கடவுள் இல்லை என்று ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கியவர்கள் திருக்கடைஊர்,காளகஸ்தி சென்று பூஜை செய்யும் நிலை. அம்மாவிற்கு நன்கு ஹிந்தி தெரியும்.
பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றாலும் ,
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு  என்ற பாடலும் இக்பால் எழுதிய சாரே ஜகான் சே அச்சா என்ற வரியும் ஒன்றே.
பல நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் வர வேண்டும் என்றால் பல மொழி அறிவு வேண்டும்.
கம்பருக்கு வட  மொழி  அறிவு  இல்லை என்றால் கம்ப ராமாயணம் தமிழுக்கு கிடைத்திருக்குமா?நீதிபதி இஸ்மாயில் ,கம்பர்கலகம் எத்தனைபேருக்கு இதய நூலாக இருக்கிறது.
ஐம்பெருங் காவியங்கள் பெயர் வடமொழியா?தமிழா? ஆதி  பகவன் என்பது வடமொழி.
இன்று எப்படி தமிழ் ஆங்கிலம் இன்றி பேசமுடியா நிலையோ அன்று அப்படித்தான் வடமொழி. இன்று ஆங்கிலம் கலந்தால் பெருமை. ஆனால் அகில பாரத்தையும் இணைக்கும் தேசத்தந்தை காந்தி ஏற்படுத்திய  பொதுமொழியால்  தமிழுக்கு ஆபத்தா? இன்று கலையுலகம் ஹிந்தி மொழி விரும்புகிறது. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் ஹிந்தி தேவை என்ற பொருள் பட பேசயுள்ளார்.
பாரதி ராஜா ,வை.கோ. திராவிடன்,தமிழன் பற்றிய சர்ச்சை. தில்லியிலும் தமிழர்கள் அதிகம். பாம்பேயிலும் அதிகம். தென்னக மூன்று மாவட்டங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு இல்லை.தமிழகம் மட்டும்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் திராவிடர் என்ற பெயரில் இத்தனை கட்சிகள். இத்தனை தலைவர்கள்.
வேற்றுமைகள். வட இந்தியாவில்  மைதிலி,போஜ்புரி,மார்வாடி,அவதி,உர்து, சத்தீஸ் கடி ஆயிரக்கணக்கான மொழிகள்.
ஹிந்தி என்பது டில்லி,ஆஜ்மீர்,ஆக்ரா என்ற இடங்களில் இரண்டரை லக்ஷம் பேசும் கடி போலி.
மொழிகள் என்பது ஜீவாதாரம் கொடுப்பதால் வளர்வன. இன்று எத்தனை பேர் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்,தமிழ்  இலக்கியங்களும் ,வடமொழியும் அறிந்துள்ளனர்.
பார்ப்பனர்கள் 3%  ஆதிக்கமா? என்று பேசுபவர்களுக்கு ஆங்கிலம் படித்து வடமொழி அறியவில்லை என்பதுதான் சத்தியம். காரணம்  வாழ்க்கைக்கு வேண்டிய தொழில் ஆங்கிலம் தருகிறது.இன்று வடமொழி ஒரு தெய்வ மொழி.
எப்படி நம்முன்னோர்கள் இறந்தால் தெய்வ மாகிவிட்டார் என்கிறோமோ?அப்படி.
 இனிமேல் தெய்வம், பார்ப்பான்,ஹிந்தி என்ற பெயரில் அரசியல் சுயநல வாதிகள் பிழைப்பு நடத்த முடியாது.

புதன், நவம்பர் 21, 2012

! பாரதம்!

வாழ்க பாரதம்!


மனிதன்  பேராசை உள்ளவன்.அனைத்து உயிரினங்களும் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு   திருப்தி  அடைகின்றன.ஆனால், மனிதன் பல தலைமுறையினர்களுக்காக  சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறான்.அதன் பலனாக ஆஸ்தி சேர்ப்பதற்காக அவன் முயற்சிக்கிறான். ஆட்சி செய்பவர்கள் முதலில் தன்  பாதுகாப்புக்காகவும்,நாட்டின் பாதுகாப்புக்காகவும் தன கரூவூலங்களை நிரப்பிவைத்தனர்.மக்களும் அரசனை தன் பிரதிநிதியாகக்
கருதினர்.நாட்டின் நலத்தைப் பெரிதாக மன்னர்கள் கருதிய காலம்.ஆனால்  அவர்கள்,மக்கள் நலத்திற்காக  கல்வி என்ற அழியா செல்வத்தை அனைவருக்கும் தர முன்வரவில்லை. அதன்,பலனாக
நாடு துண்டு  களானது.  இந்த மன்னர்கள் நாட்டை விட  தன் ஆணவம், வீரம்,காதல், தன குறிகிய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்ற வலையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தனர்.
எதிரிநாட்டு செல்வங்களைக் கொள்ளை அடித்து  தன்  அரண்மனை கரூலத்தில்  சேர்த்து வைத்தனர்.
அந்தப்புரங்களை அழகு படுத்தி ராணிகளுடன் ஆனந்தமாக இருந்தனர்.கல்வி அற்ற மக்களும் அரசன் கைதட்டினால் சேவகம் செய்ய உயிரை விட தயாராக இருந்தனர்.
        பல  மொழி,இயற்கை,உணவுப்பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னியாகுமரி  வரை  வேறுபாடு  இருந்தாலும்  ஒரு தெய்வ ஷக்தி  நாட்டை ஒற்றுமை படுத்தி வந்தது.
சிவன்,விஷ்ணு ,சூரியன்,சந்திரன் என்ற தெய்வங்களை விட ,உருவ,அருவ வெளிப்பாடும் நடந்துவந்துள்ளன. இறைவனைப்போற்றும் நூல்கள்   வட மொழி,தென் மொழிகளில் இயற்றப்பட்டாலும்,குஹன் சபரி,விதுரன் ,நந்தனார்,கண்ணப்பர் கதைகள் கூறப்பட்டாலும் சமுதாயத்தில் மிகப்பெரிய வேறுபாடு.

      இந்த சனாதன தர்மம் வளந்த பாரத தேசம்  வெளிநாட்டினர் புகுந்ததால் சிந்து நதி மூலம் வந்து
ஹிந்து அல்லது ஹிந்துஸ்தானம் ,ஹிந்து தர்மம் என்று மாறியது. சுயநலத்தால் இருந்த மன்னர்களும்,
மதவாதிகளும் மக்களை மடையர்களாக்கி தங்களுக்குள் இருந்த பகையால் வெளிநாட்டினர் ஆட்சி
அமைக்க காரணமாக இருந்தனர்.விருந்தாளிகள் தெய்வம் என்றனர்.  अथिति देवो भव्
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால் ஆண்டவனுக்கு மற்ற மொழி  வழிபாடு புரியாத.? என்ன.
சர்வ ஷக்தி உள்ள ஆண்டவன் பல சோதனைகளைக் கடத்து வந்த மக்களுக்கு சர்வ சிக்ஷா அபியான்
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வரை வழிகாட்டி உள்ளார்.
பல இளைஞர்கள் ஜாதி,மத,இனம் வேறுபாடு மறந்து காதல் திருமணம் செய்யும் அளவிற்கு பகுத்தறிவு ப பெற்றுள்ளனர்.
மக்கள்  தன்  நாட்டின் வரலாறு அறிந்து சிந்தித்து பரந்த மனப்பான்மை உடன் சயநலம் மறந்து
பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் தேசனலனுக்கும் வேறுபாடுகள் மறந்து  நாட்டைப் பாதுகாக்கும்
உயர்ந்த எண்ணங்கள் தர இறைவனைப் ந்ப்ரார்த்திப்போம்.
வாழ்க பாரதம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!வந்தே மாதரம்!

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -11.

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -10

அம்மாவிற்கு  உடல் நிலை சரி இல்லாத போதும்  ,ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். எனக்கும் தம்பிக்கும்  19. ஆண்டுகள் வித்தியாசம்.மிக செல்லமாக வளரவேண்டியவன்.
அம்மா  பள்ளிகள் நடத்தினாலும் பையனை கவனிக்க முடியவில்லை. அவனையும்  பட்டதாரி  ஆக்கினார். அம்மாவிற்கு நான் தான் வேலைக்கு போய் விட்டேன். என் தம்பியாவது பள்ளியை நிர்வஹிக்கவேண்டும் என்று.ஆனால் எனக்கு அவன் வேலைக்கு செல்ல வேண்டும்  என்று. அவனும் வேலைக்கு சென்றான்.நானும் என் பள்ளியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
ஆனால் அம்மாவின் விருப்பமோ அல்லது ஆண்டவனின் விருப்பமோ தெரியவில்லை,எங்கெங்கோ வேலைக்குச் சென்று இறுதியில் பழனிக்கே வந்து பள்ளியை நிர்வாகம் செய்கிறான். அவன் மனைவியும் பள்ளியில் கவனம் செலுத்துகிறாள்.வருமானம் குறைவு என்றாலும்,இருவருமே சிக்கனமாக,பள்ளியை நடத்திவருகின்றனர். எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை இருந்து பள்ளியை நடத்த அருளவேண்டும்.பல சோதனைகள்.பொருளாதார வசதி இல்லை.அம்மாவிற்கு இன்றும் அந்த பள்ளியின் நினைவலைகள் தான்.பள்ளிவளர வேண்டும் என்பதே.எல்லாம் அவனருளால்  தான் நடக்க வேண்டும்.

இறைவனின் சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான் புரியும்.

மரணம்  மற்றவர்களின் மரணம் .ஆறுதல் .மரணம் நிச்சயம். நம் தந்தையின் மரணம் நமேக்கே நாம் தேற்றிக் கொள்வது.
என் அப்பா சொல்வார்.உலகம் மிகவும் ஆபத்தானது. மிகவும்  ஜாக்கிரதை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரங்கள் பல தானாகவே வளர்கிறது. அதில் முள்ளும் இருக்கின்றன. நிமிர்ந்தும் ,வளைந்தும் உள்ளன.முடத்தேங்குகளும் உள்ளன. விஷமும் உள்ளது.அது பருவகாலங்களுக்கேற்ப இலைகளை உதிர்த்து துளிர்கிறது. அப்படியே குடும்ப விருக்ஷம். இன்ru சொன்னதுபோல் இருந்தாலும் 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் போன்ற தளிர்கள் பேரன் பேத்தி,நான். இறைவனின் அதிசயம்.அறிviயல் சற்றே பணிவது இதற்குத்தான். இல்லை எனில்...உலகம்......ஆஹா!
அஹங்காரர்களின் அசுர ஆட்சிகள் அழியாமல் தான் இருக்கும்.நான் எனக்கு நானே செய்துகொண்ட ஆறுதல். ஆறு பருவகாலங்கள் போல் தான் வாழ்க்கை.மனிதவாழ்க்கையும் அப்படித்தான். நாம் அழுவது சிரிப்பது புரிந்து தெரிந்தே செய்யும் அறிவற்ற ஆனால் அறிவுள்ள செயல்.இறைவனின் அபூர்வ உணர்வுகள். தான் ஆடவிட்டாலும் தன்  சதை ஆடும்.என் அப்பா பழனியில் ப்ராnaaவஸ்தை. 
அன்று என் பையன் பத்தாவது பாஸ் சேதி. 
என் அடிவயிற்றில் ஒருகலக்கம். 
ஐயோ என்று கதறவேண்டும் என்ற துடிப்பு.சென்னையில் .
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விஷயத்தை சொல்லாமல் பழனி செல் என்றார். புரிந்துவிட்டது.இதுதான் ரத்தபந்தம்.
இறைவனின்  சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான்  புரியும்.மற்றவர்களுக்குக் கூறும் ஆறுதலை நினைத்து  naam aaruthal adaiya vendiyathuthaan.

செவ்வாய், நவம்பர் 20, 2012

அம்மாவின் நினைவலைகள்-10





அம்மாவின் நினைவலைகள்-9

அம்மாவிற்கு சோதனை நேரங்களில் ஆண்டவன் கொடுக்கும் தைரியமும்,மனித உருவில் உதவ வருபவர்களும்
என்னை மிக ஆச்சரியப் பட வைக்கும். ஒருமுறை அம்மாவை மிரட்ட பின் வீட்டுக்காரரின் மகன் ஒரு அடியாளை
அனுப்பி உள்ளான்.அம்மா அவனை எந்த ஊர் என்று கேட்டு,அந்த ஊர் மாணவர்கள் பற்றி கூறியதும் அவன்
அம்மா காலில் விழுந்து வணங்கி உங்கள் மாணவன் என் சித்தப்பா என்று சொல்லி,யார் பணம் கொடுத்து அம்மாவை மிரட்ட அனுப்பினானோ
அவனையே மிரட்டி விட்டுச் சென்றுள்ளான்.
அம்மாவின் வாழ்க்கையில் பல தெய்வீக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
சோக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
அனைத்திலும் அவர் நீந்தி கரை ஏறினாலும் அப்பாவின் மரணமும்,மாப்பிள்ளையின் மரணமும் தாங்க முடியா வேதனை. என்னால்
இந்த இரு வேதனைகளும் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன.மரணம் ஏற்படும் பொழுது மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது சுலபம்.
ஆனால் அந்தப் பெருந்துன்பம் ந செயலற்றதாக்கிவிடும்.ஆனால்,என் தங்கைக்கு எங்கிருந்தோவந்த தைரியம்,துணிச்சல்,தன வேதனையை மறைத்து,எல்லாம் அவரவர்கள் தலை எழுத்து,இதை நினைத்து வருந்துவதால் என்ன பயன் !என்று தைரியம் சொல்லுவாள்.
மரணம் அதுவும் அகால மரணம் ...இந்த நரக வேதனை மனித வாழ்வில் ஏன் ? அப்படிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டாலும் மனிதன் போட்டி,பொறாமை,பேராசை அகந்தை,என்ற தீய குணங்கள் தோன்றுவது ஏன் ? இதுதான் அறிவுள்ள அறிவியல் உலகை சற்றே ச்தம்பிக்கச்செய்கிறது.
தொடரும்.