என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -10
அம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லாத போதும் ,ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். எனக்கும் தம்பிக்கும் 19. ஆண்டுகள் வித்தியாசம்.மிக செல்லமாக வளரவேண்டியவன்.
அம்மா பள்ளிகள் நடத்தினாலும் பையனை கவனிக்க முடியவில்லை. அவனையும் பட்டதாரி ஆக்கினார். அம்மாவிற்கு நான் தான் வேலைக்கு போய் விட்டேன். என் தம்பியாவது பள்ளியை நிர்வஹிக்கவேண்டும் என்று.ஆனால் எனக்கு அவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று. அவனும் வேலைக்கு சென்றான்.நானும் என் பள்ளியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.

ஆனால் அம்மாவின் விருப்பமோ அல்லது ஆண்டவனின் விருப்பமோ தெரியவில்லை,எங்கெங்கோ வேலைக்குச் சென்று இறுதியில் பழனிக்கே வந்து பள்ளியை நிர்வாகம் செய்கிறான். அவன் மனைவியும் பள்ளியில் கவனம் செலுத்துகிறாள்.வருமானம் குறைவு என்றாலும்,இருவருமே சிக்கனமாக,பள்ளியை நடத்திவருகின்றனர். எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை இருந்து பள்ளியை நடத்த அருளவேண்டும்.பல சோதனைகள்.பொருளாதார வசதி இல்லை.அம்மாவிற்கு இன்றும் அந்த பள்ளியின் நினைவலைகள் தான்.பள்ளிவளர வேண்டும் என்பதே.எல்லாம் அவனருளால் தான் நடக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக