சனி, நவம்பர் 24, 2012

எண்ணிய எண்ணங்கள் யாவும்,எளிதில் நிறைவேறுமே.

முருகனுக்கு மூத்தோன்,
காட்சிக்கு  எளியோன்.
கணங்களின் நாயகன்,
கணபதி என்றும் என்னைக் காக்க.

வேழமுகத்தோன் ,
வேலனின் மூத்தோன்,
வேண்டும் வரம் அருளும்,
கணபதியைத் தொழுவோம் .

கஜவதனன், பஞ்சக்கரமுடையோன்,
பக்தர்களைக் காப்போன்,
பட்டிவீரன் பட்டி வாசன்,
கற்பக விநாயகன்,அவன்பாதம் பணிவோம்.

மோதகப் பிரியனவன்,
சித்தி விநாயகன்,
பவானி  புத்திரன்,
பவ துக்க ஹரன்,
சிவ புத்திரனவன்  முன்
தோப்புக்கரணமிட்டால்,
தோல்வி பயம் நீங்கி,
தொல்லுலகில்
தொல்லைகள் அகன்று,

சாந்தியுடன்,சக்தியுடன்,
சகல இச்சைகளும்  நிறைவேறும்,
ஞானம் பெற்று,
கிரியா ஊகம் பெற்று,
நானிலத்தில் நலமுடன்
வாழ லாமே.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.
ஆலயங்கள் சாத்தினாலும்,
அரசமரத்தடியில்  அமர்ந்து,
அருகம்புல் அர்ச்சனை ஏற்று,
அல்லல் அகற்றும் ஆறுமுகன்
அண்ணன் அவன்.,பாதம் தொழுதால்,
பாவங்கள் விலகும் ஐயா.

சர்வ சித்தி விநாயகன்,
சங்கடஹர விநாயகன்,
விக்னங்களை  நீக்கும்,
விக்ன வினாயகனவன்.
அவன் பாதம்  வணங்க ,
அல்லல் போகுமே;
ஆனந்தம் பொங்குமே.
இன்னல்  நீங்குமே .
மனதில் இன்பம் பொங்குமே.
எண்ணிய எண்ணங்கள் யாவும்,
எளிதில் நிறைவேறுமே.









,

கருத்துகள் இல்லை: