வெள்ளி, நவம்பர் 23, 2012

மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?

      தமிழகம்  சேர,சோழ,பாண்டிய நாடு என்ற மூன்று பிரிவுகளாகவும்,குறுநில மன்னர்கள்,கடையேழு வள்ளல்கள் 
பாரி ,ஓரி ,அதியமான் என்று என்றுமே ஒன்று பட்ட வரலாறு காணப்படவில்லை.அப்படிப்பட்ட நிலையிலும் அனைவருக்கும் கல்வி என்ற நிலை இருந்ததா?என்ற நிலை தெரியவில்லை.அதிவீரராம பாண்டியர் "பிச்சை புகினும் 
கற்கை  நன்றே என்றாலும், வெந்தனலால்  அழியாது கல்வி என்றாலும்,ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றாலும்
இன்றும் ஜாதி அரசியல் தான். என்றுமே அனைவரும் அறிவாளிகளாக நாட்டு பக்தியுடன் பல மொழி,அறிவு பெற்று 
ஒற்றுமை  உடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்த தில்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கே ,கடவுள் இல்லை,பார்ப்பான் ஒழிக, தமிழன் வாழ்க என்று தமிழர்களை கிணற்றுத் தவளைகளாக ,பாரத நாட்டின் அறிவே தெரிந்து கொள்ள முடியாமல் தமிழ் தமிழ் என்று இன்று ஒய்  திஸ் கொலைவரி  என்றும்,பட்டி தொட்டி எல்லாம் மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?
ஹிந்தி கூடாது என்றவர்கள் பொதுமக்களைப் படிக்கவிடாமல்,மத்திய அமைச்சர்களானால்  பெரும்பான்மையானவர்கள் அறிந்த மொழியை மறுத்து  தமிழில் தமிழ்நாட்டிலேயே முடிய இல்லை. தமிழ் வழிப்பள்ளிகள்  ஏழைகள், வழி  இல்லாதோர்  சரணடையும் பள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.
ஏதாவது அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள்,படித்தோர் யாரும் தமிழ் வழி  பள்ளிகளை விரும்ப இல்லை. ஹிந்தி ஒழிந்ததா? தமிழ் வழி படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் அலுத்து புலம்பும் நிலை.
கடவுள் இல்லை என்று ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கியவர்கள் திருக்கடைஊர்,காளகஸ்தி சென்று பூஜை செய்யும் நிலை. அம்மாவிற்கு நன்கு ஹிந்தி தெரியும்.
பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றாலும் ,
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு  என்ற பாடலும் இக்பால் எழுதிய சாரே ஜகான் சே அச்சா என்ற வரியும் ஒன்றே.
பல நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் வர வேண்டும் என்றால் பல மொழி அறிவு வேண்டும்.
கம்பருக்கு வட  மொழி  அறிவு  இல்லை என்றால் கம்ப ராமாயணம் தமிழுக்கு கிடைத்திருக்குமா?நீதிபதி இஸ்மாயில் ,கம்பர்கலகம் எத்தனைபேருக்கு இதய நூலாக இருக்கிறது.
ஐம்பெருங் காவியங்கள் பெயர் வடமொழியா?தமிழா? ஆதி  பகவன் என்பது வடமொழி.
இன்று எப்படி தமிழ் ஆங்கிலம் இன்றி பேசமுடியா நிலையோ அன்று அப்படித்தான் வடமொழி. இன்று ஆங்கிலம் கலந்தால் பெருமை. ஆனால் அகில பாரத்தையும் இணைக்கும் தேசத்தந்தை காந்தி ஏற்படுத்திய  பொதுமொழியால்  தமிழுக்கு ஆபத்தா? இன்று கலையுலகம் ஹிந்தி மொழி விரும்புகிறது. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் ஹிந்தி தேவை என்ற பொருள் பட பேசயுள்ளார்.
பாரதி ராஜா ,வை.கோ. திராவிடன்,தமிழன் பற்றிய சர்ச்சை. தில்லியிலும் தமிழர்கள் அதிகம். பாம்பேயிலும் அதிகம். தென்னக மூன்று மாவட்டங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு இல்லை.தமிழகம் மட்டும்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் திராவிடர் என்ற பெயரில் இத்தனை கட்சிகள். இத்தனை தலைவர்கள்.
வேற்றுமைகள். வட இந்தியாவில்  மைதிலி,போஜ்புரி,மார்வாடி,அவதி,உர்து, சத்தீஸ் கடி ஆயிரக்கணக்கான மொழிகள்.
ஹிந்தி என்பது டில்லி,ஆஜ்மீர்,ஆக்ரா என்ற இடங்களில் இரண்டரை லக்ஷம் பேசும் கடி போலி.
மொழிகள் என்பது ஜீவாதாரம் கொடுப்பதால் வளர்வன. இன்று எத்தனை பேர் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்,தமிழ்  இலக்கியங்களும் ,வடமொழியும் அறிந்துள்ளனர்.
பார்ப்பனர்கள் 3%  ஆதிக்கமா? என்று பேசுபவர்களுக்கு ஆங்கிலம் படித்து வடமொழி அறியவில்லை என்பதுதான் சத்தியம். காரணம்  வாழ்க்கைக்கு வேண்டிய தொழில் ஆங்கிலம் தருகிறது.இன்று வடமொழி ஒரு தெய்வ மொழி.
எப்படி நம்முன்னோர்கள் இறந்தால் தெய்வ மாகிவிட்டார் என்கிறோமோ?அப்படி.
 இனிமேல் தெய்வம், பார்ப்பான்,ஹிந்தி என்ற பெயரில் அரசியல் சுயநல வாதிகள் பிழைப்பு நடத்த முடியாது.

கருத்துகள் இல்லை: